யூரிக் ஆசிட் ஜாஸ்தியா இருக்கா? பச்சை பட்டாணியை தொடாதீங்க.. சிறுநீரகத்தில் கற்கள், மூட்டுவலி வரலாம்
சென்னை: அதிக அளவு சத்துக்களை கொண்டதுதான் பச்சை பட்டாணி.. ஆனால், பச்சை பட்டாணியை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் என்னென்ன தெரியுமா? யார் யாரெல்லாம் பச்சை பட்டாணி சாப்பிடுவதை தவிர்க்கலாம்?
பச்சை பட்டாணியில் வைட்டமின் A, B, C, E, K போன்ற ஏராளமான சத்துக்கள் உள்ளன. முக்கியமாக, அளவுக்கு அதிகமான பீட்டா குலுக்கன் சத்துக்கள் உள்ளன. இந்த சத்துக்கள், நம்முடைய உடலில் கொலஸ்ட்ரால் படிவதை அடியோடு தடுக்கிறது. இதனால், உடல் எடை கூடிவிடாமல் தடுக்கப்படுகிறது.

சர்க்கரை நோயாளிகள்: சர்க்கரை நோயாளிகளும் பச்சை பட்டாணியை சாப்பிடலாம். ஏனென்றால், பட்டாணியின் கிளைசமிக் இன்டெக்ஸ் அளவு இதில் குறைவாகவே உள்ளது. அதேபோல, அனீமியா தொந்தரவு உள்ளவர்களுக்கு பச்சை பட்டாணி அருமருந்தாகும். காரணம், இதிலுள்ள இரும்பு சத்தும், தாமிர சத்தும், ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை பெருக்கக்கூடியவை.
இந்த பட்டாணியிலுள்ள பொட்டாசியம் சத்து, உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க செய்கிறது என்பதால், இதயத்துக்கு நலனை தருகின்றன இந்த பச்சை பட்டாணிகள்.. நார்ச்சத்தும் நிறைந்திருப்பதால் மலச்சிக்கல் அண்டாது. உடல் பலவீனமாக உள்ளவர்கள், பச்சை பட்டாணியை சாப்பிட்டு வரும்போது, சதைப்பிடிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. அதனால்தான், கால்சியம் நிறைந்த இந்த பச்சை பட்டாணியை, வளரும் குழந்தைகளுக்கு கட்டாயம் தர வேண்டும் என்பார்கள்.
மூளைத்திறன்: அதுமட்டுமல்ல வெண்டைக்காயைவிட 3 மடங்கு பாஸ்பரஸ், பச்சை பட்டாணியில் உள்ளதால், மூளை திறன்பட செயல்படுவதுடன் ஞாபகசக்தியையும் அதிகரிக்க செய்கிறது. எனவே, வைட்டமின் K நிறைந்த பட்டாணியை, குழந்தைகளுக்கு அவ்வப்போது தருவதால், அவர்களின் புத்திக்கூர்மையும் அதிகமாகும்.
பச்சை பட்டாணிகள், கொலாஜின் உற்பத்தியை அதிகரிக்க செய்து, நம்முடைய சருமத்தை காக்கின்றன.. இதனால், எலும்புகளும் உறுதியாகின்றன.. ஆண்டி ஆக்சிடெண்ட்கள் நிறைந்துள்ளதால், புற்றுநோய் போன்ற பெரிய பாதிப்புகளும் தடுக்கப்படுகின்றன. முக்கியமாக, வயிற்று புற்று நோய் செல்களை தாக்கி அழிக்கும் பண்புகள் இந்த பச்சை பட்டாணிக்கு நிறையவே உண்டு.
யூரிக் அமிலம்: எனினும், சத்துக்கள் பலவிருந்தாலும், பச்சை பட்டாணியில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகமாக இருக்கிறது. யூரிக் அமிலத்தின் அளவு அதிகமாக இருந்தால், மூட்டுகளில் வலி மற்றும் வீக்கத்தை ஏற்படுத்துவதுடன், கீல்வாத பிரச்சனையும் ஏற்பட்டுவிடும்.
பொதுவாக, யூரிக் அமிலம் தொடர்ந்து அதிகரித்தால், எலும்புகளில் அமிலப் படிகங்கள் உருவாகின்றன. இதன் காரணமாக, எலும்புகளில் இடைவெளி ஏற்படுகிறது. இது மிகவும் ஆபத்தான நிலையை ஏற்படுத்திவிடும். அதனால்தான், அதிக யூரிக் அமிலம் உள்ள நோயாளிகள் பச்சை பட்டாணியை அதிகமாக சாப்பிடக்கூடாது என்கிறார்கள்.
சிறுநீரகத்தில் கற்கள்: மேலும், பச்சை பட்டாணியிலுள்ள அதிக புரதச்சத்துக்கள், பியூரின் அளவை அதிகரிக்க செய்கிறது. இதனால் எலும்புகளில் ப்யூரின் அளவு அதிகரித்து, அது அங்கேயே தேங்க ஆரம்பிக்கும். இங்குதான் யூரிக் அமிலமும் சேர்ந்து அது கற்களாக மாறுகின்றன. எலும்பு மூட்டுகளில் இடைவெளிகளை உருவாக்கும் இந்த கற்கள், கீல்வாதம் போன்ற பிரச்னைகளை உண்டுபண்ணிவிடும்.
பியூரின்களை அதிகரித்து யூரிக் அமிலத்தின் அளவை அதிகரிப்பதன் காரணமாக, சிறுநீரக கற்களும் ஏற்படலாம். அளவுக்கு அதிகமான புரோட்டீன் சிறுநீரகத்தின் செயல்பாடுகளையும் பாதிக்க செய்வதுடன், எலும்புகளில் அமிலப்படிகங்களையும் உருவாக்கிவிடும். அதனால்தான், பச்சை பட்டாணியை அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது என்பார்கள். அதிலும், பெண்கள் பச்சை பட்டாணியை அதிகமாக சாப்பிட்டால், யூரிக் அமிலத்தால் ஏற்படும் பிரச்சனைகளும் அதிகமாகிவிடுமாம்.
அமிலத்தன்மை: நிறைய பச்சை பட்டாணி சாப்பிட்டால் வாயு, அமிலத்தன்மை, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு குடல் ஆரோக்கியம் அதைவிட முக்கியமாக, பச்சை பட்டாணியிலுள்ள பைடிக் அமிலம், உடலிலுள்ள இரும்பு, கால்சியம், துத்தநாகம் போன்ற சத்துக்களையும் உறிஞ்சிவிடும். எனவே மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் இந்த பச்சை பட்டாணியை சாப்பிடுவது ஆரோக்கியத்தை தரும்.












Click it and Unblock the Notifications