பெண்களே.. மாதுளம் பழம் கிடைத்தால் விட்டுறாதீங்க.. இவ்ளோ நன்மைகள் இருக்குதாம்!
சென்னை: சின்ன சின்ன விதைகளை கொண்ட மாதுளம் பழம் இனிப்பு, துவர்ப்பு, புளிப்பு என மூன்று ரகங்கள் உள்ளன. பெண்கள், கர்ப்பிணிகளுக்கு இந்த பழம் ஏராளமான நன்மைகள் அள்ளி தருகிறது. சில நேரங்களில் எந்த உணவையும் உட்கொள்ள முடியாத நிலையில், ஒரு டம்ளர் ஜூஸாக குடித்தால் போதும், உணவில் கிடைக்கக்கூடிய அனைத்து சத்துக்களும் கிடைத்துவிடும். ஜூஸ் குடித்த சிறிது நேரத்திலேயே உடலுக்கு புத்துணர்வு தந்து, சுறுசுறுப்பாக செயல்படமுடியும் என்பதில் சந்தேகமில்லை.
இனிப்பு மாதுளம்பழத்தை சாப்பிட்டுவந்தால், இதயத்திற்கும், மூளைக்கும் நல்ல ஆற்றல் கிடைக்கும். இது ஒரு நல்ல ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகவும் செயல்படுகிறது. எனவே இப்பழத்தை தொடர்ச்சியாக சாப்பிட்டுவந்தால் சிறுநீரகப் பிரச்சினைகள் பெருமளவில் கட்டுப்படுத்த முடியும், என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்பழம் ஒரு நிகரற்ற நல்ல மருந்தாகும்.

மாதுளம் பழத்தில் வைட்டமின் சி, கே, இரும்பு சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், புரதசத்து ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளது. இந்த பழத்தில் உள்ள பருப்புகள் தனி சிறப்பும், பல்வேறு நோய் தீர்க்கும் ஆற்றல் கொண்டுள்ளது. இதய சம்பந்தமான நோய்கள், பித்தம், வாதம், கபம், இருமல், சீதபேதி, இரத்த பேதி, குடற்புண், அஜீரணம், வீக்கத்தால் ஏற்படும் வலியை குறைத்திடும், சீரான இரத்த ஓட்டம், வயிற்றுக்கடுப்பு, வைரஸ் தொற்று வராமல் தடுக்கவும், தொண்டை கரகரப்பு, நுரையீரல் சார்ந்த பிரச்சனைகளுக்கு, ஆண்மை அதிகரிக்கவும், குழந்தைகளுக்கு வயிற்றில் உள்ள தட்டைப்பூச்சிகள் வெளியேற்றுவது, போன்ற பல்வேறு வியாதிகளுக்கு மிக சிறந்த நிவாரணியாக செயல்படுவதாக கூறப்படுகிறது.
திருமணமான பெண்களுக்கு கருவுறுதல் பிரச்சனை இருந்தால், இப்பழம் ஒரு வரப்பிரசாதம். தினமும் காலை வெறும் வயிற்றில் மாதுளம் பழம் சாப்பிட்டுவந்தால், ஹார்மோன் குறைபாடுகள் நீங்கி, கர்ப்பப்பைக்கு ஆரோக்கியம் உண்டாகும். தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் கட்டாயம், கருத்தரிக்கவும், சுகப்பிரசவத்திற்கு வழிவகுக்கும்.
மாதுளம் பழ சாறுடன் சிறிது தேன் கலந்து சாப்பிட்டுவந்தால், கர்ப்பகாலத்தில் ஏற்படுகிற வாந்தியை குறைக்கலாம். மேலும் புளிப்பு மாதுளம் பழ சாறுடன், சர்க்கரை, குங்குமப்பூ இவைகளை சேர்த்து சக்கரை பாகு பதமாக கிளறி பதப்படுத்திக்கொள்ளவேண்டும். இவ்வற்றை தினமும் காலை மாலை இரவு மூன்று வேளையும் சிறிது அளவு நக்கி சாப்பிட்டுவந்தால், வாந்தி நிற்கும்.
கருவளரும், குழந்தை ஆரோக்கியமாகவும் அழகாகவும் சுகப்பிரசவத்துடன் பிறக்க அதிக வாய்ப்புண்டு. 45-50 வயது எட்டும்போது மெனோபாஸ் காலங்களில் ஈஸ்ட்ரோஜெனின் உற்பத்தி குறைந்து எலும்பு தேய்மானம், மூட்டுவலி போன்றவை ஆரம்பிக்கும். மெனோபாஸ் நெருங்கும் காலத்தில் தினமும் மாதுளம் ஜூஸ் குடித்தால் இந்த பிரச்சனைகளை சமாளிக்க பெரிதும் உதவும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications