தொப்பை முதல் இடுப்பு சதை வரை... பிடிவாதமான கொழுப்பை கரைக்க இந்த 1 கப் கருப்பு உளுந்து கஞ்சி போதும்!
உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஜிம், டயட் என பல முயற்சிகளை மேற்கொள்வது வழக்கம். இருப்பினும், வயிறு, இடுப்பு மற்றும் தொடை பகுதிகளில் தேங்கியுள்ள பிடிவாதமான கொழுப்பு (Stubborn Fat) பலருக்கு பெரும் சவாலாக இருக்கும். இதுவரை நீங்கள் எடையைக் குறைக்க பல கஞ்சி வகைகளை முயற்சித்திருக்கலாம், ஆனால் இந்த 'கருப்பு உளுந்து கஞ்சி' தரும் பலன் அசாத்தியமானது.
உடல் எடையை குறைப்பது மட்டுமல்லாமல், தசைகளை இறுக்கமாக்கவும் உடலை வலிமையாக்கவும் இந்த கஞ்சி உதவுகிறது. புரதச்சத்து (Protein) அதிகம் நிறைந்த இந்த பாரம்பரிய உணவை எப்படிச் செய்வது என்று விரிவாகப் பார்ப்போம்.

கருப்பு உளுந்து கஞ்சியின் நன்மைகள்
தசை வலிமை: கருப்பு உளுந்தில் உள்ள புரோட்டீன் எலும்புகளுக்கும் தசைகளுக்கும் பலம் சேர்க்கிறது.
கொழுப்பு எரிப்பு: இது உடலில் தேங்கியுள்ள தேவையற்ற கொழுப்பை வேகமாக கரைக்க உதவுகிறது.
நீண்ட நேர நிறைவு: நார்ச்சத்து அதிகம் என்பதால், இதை குடித்தால் நீண்ட நேரம் பசி எடுக்காது, இதனால் தேவையற்ற நொறுக்குத் தீனிகளை தவிர்க்கலாம்.
தேவையான பொருட்கள்
இந்த சத்தான கஞ்சி தயாரிக்க உங்கள் சமையலறையில் உள்ள மிகச் சில பொருட்களே போதும்:
* கருப்பு உளுந்து - 150 கிராம் (அல்லது 1 கப்)
* அரிசி - 1/4 கப்
* ஏலக்காய் - 4
* தண்ணீர் - 6 கப் + 2 கப் சுடுநீர்
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* உப்பு - தேவையான அளவு (சுவைக்கேற்ப)
செய்முறை விளக்கம் (Step-by-Step Recipe):
* வறுத்தல் முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கருப்பு உளுந்து சேர்த்து மிதமான தீயில் சுமார் 10 நிமிடங்கள் வறுக்கவும். உளுந்து நன்கு நிறம் மாறி வாசனை வரும் வரை வறுக்க வேண்டும்.
* அரிசி சேர்த்தல் உளுந்து வறுபட்டதும், அதனுடன் 1/4 கப் அரிசியை சேர்த்து மேலும் 5 நிமிடம் நன்கு வைக்க வேண்டும். பின் அடுப்பை அணைத்துவிட்டு கலவையை ஆற விடவும்.
* அரைத்தல் ஆறிய உளுந்து மற்றும் அரிசிக் கலவையை ஒரு மிக்சர் ஜாரில் மாற்றவும். அதனுடன் 4 ஏலக்காய்களை சேர்த்து, ரவை பதத்துக்கு சற்று கொரகொரவென்று அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
* கஞ்சி காய்ச்சுதல் ஒரு அகலமான பாத்திரத்தில் 6 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்கத் தொடங்கியதும், அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து கட்டி தட்டாமல் கைவிடாமல் கிளறவும்.
* வேக வைத்தல் அடுப்பை உயர் தீயில் (High Flame) வைத்து 10 நிமிடம் தொடர்ந்து கிளறிக் கொண்டே இருக்கவும். 5 நிமிடங்கள் கழித்து, அதில் தயாராக வைத்துள்ள 2 டம்ளர் சுடுநீர் ஊற்றி, மிதமான தீயில் 15 நிமிடம் நன்கு வேகவிடவும்.
* இறுதி டச் கலவை நன்கு வெந்து கஞ்சி பதத்திற்கு வந்ததும், துருவிய தேங்காயை சேர்த்து கிளறி இறக்கவும். அவ்வளவுதான் சுவையான கருப்பு உளுந்து கஞ்சி ரெடி!












Click it and Unblock the Notifications