Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோடையில் தப்பி தவறியும் இந்த 3 உணவுகளை சாப்பிடாதீங்க.. பெரிய பிரச்னை ஆகிடும்! மருத்துவர் தந்த லிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோடைக் காலம் தொடங்கிவிட்ட நிலையில், நமது உடலிலும் ஏகப்பட்ட மாற்றங்கள் தென்படத் தொடங்கும். இதுபோன்ற கோடைக் காலத்தில் அதீத வெப்பத்தைச் சமாளிக்க நாம் என்ன செய்ய வேண்டும்.. நிச்சயம் தவிர்க்க வேண்டிய 3 உணவுகள் என்ன என்பது குறித்து மருத்துவர்கள் அளிக்கும் பரிந்துரையை நாம் பார்க்கலாம்.

இப்போது கோடைக் காலம் தொடங்கிவிட்டது. ஆங்காங்கே கொஞ்சம் மழை பெய்தாலும் கூட ஒட்டுமொத்தமாகச் சென்னை உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. மதிய நேரங்களில் வெளியே கூட செல்லவே முடியாத சூழலே இருந்து வருகிறது. கோடை வெயில் உச்சத்தில் இருப்பதால் நமது உடலை வெப்பநிலையைப் பராமரிக்க அதிக நேரம் உழைக்கின்றன.

Summer food

உணவு முறை

உடல் வெப்பநிலையைப் பராமரிப்பதில் உணவு முறை மற்றும் வாழ்க்கை முறைக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. சில உணவுகள் நம்மை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும் அதே வேளையில், சில வகையான உணவுகள் வெயில் காலத்தில் நமக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தலாம். இதனால் கோடைக் காலத்தில் நாம் குறிப்பிட்ட வகையான உணவுகளைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

வெப்பமான காலநிலையில் என்ன மாதிரியான உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என ஊட்டச்சத்து வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

உப்பு அதிகம் உள்ள உணவுகள்

முதலில் அதிக உப்பு கொண்ட உணவுகள். அதாவது அதிகம் பதப்படுத்தப்பட்ட சிற்றுண்டிகள், துரித உணவுகள் மற்றும் பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகளில் உப்பு அதிகமாகச் சேர்த்து இருப்பார்கள். இதனால் நீரிழப்பு மற்றும் எலக்ட்ரோலைட் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும். இந்த உணவுகள் செரிமானமாகவும் அதிக திரவம் தேவைப்படும். இதனால் உடலில் உள்ள நீர் அதிகமாக வெளியேறும். எனவே, இதுபோல சால்ட் அதிகம் உள்ள உணவுகளைத் தப்பித் தவறியும் சாப்பிடாதீர்கள்.

கொழுப்பு உள்ள உணவுகள்

அடுத்து அதிக கொழுப்பு நிறைந்த உணவுகள்.. அதிக கொழுப்பு நிறைந்த உணவுகள் உடல் வெப்பநிலையை நிச்சயம் உயர்த்தும். இது சோம்பலை ஏற்படுத்தும் என்பதால் உடலைச் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க முடியாது. வறுத்த மற்றும் எண்ணெய் நிறைந்த உணவுகள் ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும். இது வெயில் காலத்தில் அசவுகரியத்தை ஏற்படுத்தும் என்பதால் இந்த உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.

சர்க்கரை வேண்டாம்

இதுதான் முக்கியமானது. வெயில் காலத்தில் நாம் கூல் டிரிங்க்ஸ் தொடங்கி எல்லா ஜூஸ்களையும் குடிப்போம். சர்க்கரை அதிகம் உள்ள பானங்கள் புத்துணர்ச்சி அளிப்பது போலத் தோன்றலாம். ஆனால், இதைச் சாப்பிடும்போது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு சட்டென அதிகரிக்கும். பிறகு திடீரென மீண்டும் குறையும். இதுபோல சர்க்கரை அளவு திடீரென ஏறி இறங்குவதால் சோர்வு மற்றும் மயக்கம் ஏற்படும். இதனால் அதிக சர்க்கரை உள்ள கூல் டிரிங்கஸ்களை நாம் தவிர்க்கலாம்.

சரி, இதையெல்லாம் சாப்பிட வேண்டாம் ஓகே.. அப்போது வெயில் காலத்தில் என்ன தான் சாப்பிடலாம்.. எது உடலுக்கு நல்லது என்ற கேள்வி உங்களுக்கு வரும். அதற்கும் மருத்துவர்கள் சில உணவுகளைப் பரிந்துரைக்கிறார்கள்.

நீச்சத்து கொண்ட பழங்கள்

முதலில் நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் சாப்பிடுங்கள்.. வெள்ளரிகள், தர்பூசணி, ஆரஞ்சு போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். இவை அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குவதோடு உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.

பழைய சோறு

ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் நிறைந்த உணவுகளைச் சாப்பிடுங்கள். வெயில் காலத்தில் எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் புரோபயாட் உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது அது உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்கும். மேலும், அது குடல் ஆரோக்கியத்தையும் பராமரிக்க உதவுகின்றன. மோர், தயிர் பழ ஸ்மூத்திகள், பழைய சாதம் ஆகியவற்றைச் சாப்பிடலாம்.

புரதச் சத்து குறைவாக இருக்கும் உணவுகளைச் சாப்பிடுங்கள்.. அவற்றை உடல் எளிதாக ஜீரணிக்கும். மேலும், சோம்பலான உணர்வையும் வழங்காது. மேலும், பார்லி, குயினோவா, ஓட்ஸ், பாலிஷ் செய்யப்படாத அரிசி மற்றும் தினை போன்ற முழு தானியங்களையும் கூட என்ரிஜாக்கா நாம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+