கானா வாழை.. இந்த கீரையை சாப்பிட்டாலே ஹேப்பி நியூஸ் வரும்.. ஆணின் வரப்பிரசாதம் "கன்றுக்குட்டிப்புல்"
சென்னை: ஆணுக்கும், பெண்ணுக்கும் மிகப்பெரிய வரப்பிரசாதமாக உள்ள இலை என்றால் அது இந்த கானா வாழை இலைதான்.. இதன் மகத்துவம் அறியாமலேயே இந்த கீரையை பெரும்பாலானோர் உபயோகப்படுத்துவதில்லை.
இந்த கானா வாழை இலையை, கால்நடைகள் ஓடி ஓடி விரும்பி சாப்பிடுமாம்.. அதுவும், கன்றுக்குட்டிக்கு இந்த செடியை பார்த்தாலே ரொம்ப ஆசையாம். தேடி சென்று வயிறு முட்ட சாப்பிடுமாம்.. அதனால்தான் இதற்கு "கன்றுக் குட்டிப்புல்" என்று இன்னொரு பெயரும் உண்டு.

ருசி + ஆரோக்கியம்: அதுமட்டுமல்ல, கன்றுக்குட்டிகள் தாய்ப்பாலை மறக்க வேண்டும் என்பதற்காகவும், கன்றுக்குட்டிகளுக்கு இந்த செடியை உணவாக தருவார்களாம். கன்றுகளுக்கு, தாய்ப்பாலையே மறக்கடி செய்யும் ருசி கொண்டதுதான் இந்த கீரை.
ஒரு கைப்பிடி இலையை நீரில் போட்டு, கொதிக்க வைத்து, சிறிது மிளகு சேர்த்து குடித்தால் எப்பேர்ப்பட்ட காய்ச்சலும் ஓடிவிடுமாம்.. அத்துடன் வயிற்றுள்ள புண்களும் ஆறிவிடும். வாத நோய்களுக்கு கை கொடுத்து உதவக்கூடியது இந்த கானா வாழை .
மூல நோய்கள்: மூல நோய்களை விரட்டக்கூடியது இந்த கானா வாழை.. இந்த இலைகளுடன் துத்தி இலையும் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தால், ரத்த மூலம் குணமாகும்.. வழக்கமான கீரைகளை போலவே இதையும் சமைக்கலாம். அல்லது பஜ்ஜி செய்து சாப்பிடலாம். அல்லது தூதுவளைக்கீரையுடன் சேர்த்து சமைத்தால் இன்னும் பலன் அதிகமாக கிடைக்கும்.
ரத்தத்தை சுத்தப்படுத்தக்கூடியது இந்த கானா வாழை.. கல்லீரல், நுரையீரல், சிறுநீரகம் போன்ற உள்ளுறுப்புகளுக்கு பலம் தரக்கூடியது.. சிறுநீர்ப் பாதையிலோ அல்லது நுரையீரலிலோ எந்த தொற்றுக்கள் இந்தாலும் அவைகள் கழிவுகள் மூலம் வெளியேறிவிடும்..
முகப்பருக்கள்: இந்த இலைகளின் சாறு, வாய் ஆரோக்கியம் பேண உதவுகிறது.. இதன் சாற்றினை, தண்ணீருடன் சேர்த்து வாய் கொப்பளித்து வந்தால், வாயிலுள்ள கிருமிகள் அகலும்.. பல் ஈறுகளுக்கும் வலு தரக்கூடியது.. அதேபோல, இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து புண்கள் மீது தடவினால், எப்பேர்ப்பட்ட புண்களும், காயங்களும் ஆறிவிடுமாம்.. முகப்பருக்களுக்கும் இந்த விழுதை பயன்படுத்தலாம்,.
பெண்களுக்கு இந்த இலையை அருமருந்து என்று சொல்லலாம். மாதவிடாய், வெள்ளைப்படுதல் கோளாறுகளுக்கு கானா வாழை இலைகள் தீர்வு தருகின்றன.. மாதவிடாய் சமயங்களில் அதிக உதிரப்போக்கு இருந்தால், இந்த கீரையை பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிடலாம்..
கீழாநெல்லி இலைகள்: இந்த இலைகளுடன் சம அளவு கீழாநெல்லி இலைகளையும் சேர்த்து விழுதாக அரைத்து, தினமும் நெல்லிக்காய் அளவு 3 வேளை தயிரில் கலந்து சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் பிரச்சனை நீங்கும். அதேபோல, பெண்களின் மார்பகத்தில் கட்டிகள், வீக்கம் ஏற்பட்டால், இந்த செடியை அரைத்து பற்று போட்டால் நிவாரணம் கிடைக்கும்.
பெண்களுக்கு மட்டுமல்ல, பால்வினை நோயால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கும் இந்த கீரை உதவுகிறது. ஒரு டம்ளர் நீரில், கானவாழை இலை, தூதுவளைப்பூ, முருங்கைப்பூ சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க வைத்துக் காய்ச்சி, சூடான பாலில் பனங்கற்கண்டுடன் கலந்து குடித்தால் நரம்புகள் பலம்பெறும் என்றும், தாது விருத்தி அதிகமாகும் என்றும் சொல்வார்கள். 40 நாள்களுக்கு தொடர்ந்து குடித்து வரும்போது, பிள்ளைப்பேறு உண்டாகுமாம்.
ஜாதிக்காய்: குறிப்பாக, கானா வாழைச் சாறுடன் ஜாதிக்காயைச் சேர்த்து ஊற வைத்து உலர்த்தி பொடி செய்து தினசரி 3 கிராம் அளவு உட்கொண்டு வந்தாலும், நரம்புத்தளர்ச்சி மற்றும் ஆண்மைக் குறைவு பிரச்சனைகள் நீங்கும்.. அதேபோல, கானா வாழையின் சாற்றினில், கசகசாவை ஊற வைத்து மை போல அரைத்து 2 கிராம் எடுத்து தேனில் குழைத்து உட்கொண்டு வந்தால் செக்ஸ் உணர்வுகள் தூண்டப்படும் என்கிறார்கள்.
அதேபோல, உலர்ந்த கானா வாழை 100 கிராம், முருங்கை பிசின், கொட்டைப் பாக்கு, தென்னம்பாளை என தலா 100 கிராம் எடுத்து பொடி செய்து வைத்து கொண்டால் போதும். இதிலிருந்து தினமும் 2 வேளை, ஒரு கிராம் அளவு எடுத்து சாப்பிட்டு வந்தாலும், ஆண்மை கோளாறுகள் நீங்குமாம்.
பொரியல்: கீரையாக சமைத்து சாப்பிட முடியாவிட்டாலும், இதன் சாறுகள், விந்து முந்துதலை கட்டுப்படுத்துமாம்.. வாரம் ஒரு முறை கானா வாழையை துவரம் பருப்புடன் சேர்த்து பொரியலாக சாப்பிட்டு வந்தாலே போதும்.. மொத்த ஆண்மை கோளாறுகளும் நீங்கும்.
அதாவது, கானா வாழை கீரையை சுத்தம் செய்து கழுவி வைத்து கொள்ள வேண்டும். துவரம் பருப்பு, மஞ்சள் பொடி, விளக்கெண்ணெய் சேர்த்து வேக வைத்து கொள்ளவேண்டும்.
குழம்பு ரெடி: ஒரு வாணலில், நெய் ஊற்றி, சீரகம், சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய், கானா வாழை கீரைகளையும் சேர்த்து வதக்க வேண்டும். பிறகு, வேக வைத்திருக்கும் துவரம் பருப்பை இதில் கொட்டி, சாம்பார் தூள், உப்பு சேர்த்து கொதிக்க வைத்து இறக்கினால், கீரை குழம்பு ரெடி. இதனை வாரம் 2 முறையாவது ஆண்கள் சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்குமாம்.
இப்படி எண்ணற்ற பலன்களை கொண்ட இலை என்றாலும், மருத்துவர்களின் முறையான ஆலோசனையை பெற்று உட்கொள்ளும்போது, கூடுதல் ஆரோக்கியம் செழிக்கும்.












Click it and Unblock the Notifications