Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Thengai Poo: "தேங்காய் பூ தேங்காய் பூவு"னு கூவி கூவி விற்பாங்களே! அந்த பூ உடல் எடையை குறைக்குமாமே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேங்காய் பூவில் என்னென்ன நன்மைகள் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். தேங்காய், இளநீரை விட தேங்காய் பூவில் அதிக சத்துகள் காணப்படுகின்றன. கோயிலில் தேங்காய் உடைக்கும் போது அதில் பூ இருந்தால் அதை வாங்கி வந்த பக்தருக்கு மகிழ்ச்சி ஏற்படும்.

இதுகுறித்து அத்திமரக்காடு எனும் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: தேங்காய் பூவினை சிலர் ருசித்திருப்பார்கள். சாலையில் தள்ளுவண்டியில் அடுக்கி விற்கப்பட்டு வரும் தேங்காய்ப் பூவைப் பார்த்துக் கொண்டே இது எதற்காக என்ற கேள்வியுடனே சிலர் கடந்து சென்று கொண்டிருப்பார்கள். இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. சில நேரங்களில் கோயில்களில் தேங்காய் உடைக்கும் போது பூ வந்திருந்தால், நாம் நினைத்த காரியம் கைகூடும் என மகிழ்வோம்.

What are the amazing health benefits of Thengai Poo

தேங்காய் பூ எதற்காக

தேங்காய், இளநீர் பயன்பாடு எல்லாம் பரவலாகவே இருக்கிறது. ஆனால், 'தேங்காய் பூ' எதற்காக, என்ன பலன், வெறுமனே சுவை மட்டுமா போன்ற கேள்விகள் பலருக்கு இருக்கலாம்.இந்த கேள்விகள் எல்லாவற்றுக்கும் பதிலளிக்கிறார் யோகா மற்றும் இயற்கை மருத்துவர் தீபா.

தைராய்டு பிரச்சினை

பருவ கால தொற்றுநோய்களிலிருந்து முழுமையான பாதுகாப்பை தேங்காய்ப்பூ கொடுக்கும். தைராய்டு பிரச்னையில் பாதிக்கப்பட்டவர்கள் தேங்காய்ப்பூவை சாப்பிடுவதால் தைராய்டு சுரப்பை குணப்
படுத்தலாம்.

கொழுப்பை தடுக்கும்

தேங்காய் பூ உண்பதால் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைக்கவும் முடிகிறது. இதில் குறைந்த அளவு கலோரி இருப்பதால் உடல் எடை குறைய உதவுகிறது. வளர்சிதை மாற்றத்தை தூண்டுவதால் கொழுப்பு சேராமல் வேகமாக உடல் எடையை குறைக்கவும் முடியும்.

புற்றுநோயை விரட்டும்

புற்றுநோய் செல்களைத் தூண்டுகிற ஃப்ரீ ரேடிக்கல்ஸை நம்முடைய உடலிலிருந்து வெளியேற்றும் ஆற்றலைக் கொண்டது. தேங்காய்ப்பூ இன்சுலின் சுரப்பை தூண்டுகிறது. இதனால் ரத்தத்தில் அதிகப்படியான சர்க்கரையை கட்டுப்படுத்த இயலுகிறது. ஜீரண சக்தி குறைவாக இருந்தால் தேங்காய்ப்பூ சிறந்த மருத்துவமாகும். இதிலுள்ள மினரல், வைட்டமின் குடலுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. மலச்சிக்கலை குணமாக்குகிறது.

தேங்காய் பூ என்ன

வழக்கமாக தேங்காயை உண்கிறோம். இளநீராகவும் உண்கிறோம். தேங்காய்ப்பூ என்பது என்னவென்று சிலருக்கு குழப்பம் இருக்கும். முற்றிய தேங்காயில் உண்டாகும் கரு வளர்ச்சியே தேங்காய்ப்பூ ஆகும்.

நோய் எதிர்ப்பு சக்தி

தேங்காய்ப்பூவில், தேங்காய் மற்றும் இளநீரில் இருப்பதைவிட அதிக சத்துக்கள் இருக்கிறது. தேங்காய்ப்பூவில் மிக அதிகமான ஊட்டச்சத்து இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி இரு மடங்கு அதிகரிக்கும்.

முதுமையை தடுக்கும்

தேங்காய்ப்பூவில் முக்கியமாக முதுமையைத் தடுக்கும் ஆண்டி ஆக்ஸிடெண்ட் நிறைய உள்ளது. சுருக்கங்கள், வயதான தோற்றம், சரும தொய்வு போன்றவை நம்மை நெருங்க விடாது. சிறுநீரக பாதிப்பை குறைக்கும் திறன் தேங்காய் பூவுக்கு உண்டு. மேலும் சிறுநீரகத் தொற்றுநோய்களையும் குணப்படுத்துகிறது. நச்சுக்களை வெளியேற்றி ஆரோக்கியமான சிறுநீரகத்தை தேங்காய் பூவினால் பெறலாம்.

அதிக பணிச்சுமை

அதிக பணிச்சுமை உள்ளவர்கள் மன அளவிலும், உடலளவிலும் மிகவும் சோர்வாக இருப்பார்கள். அப்படி இருக்கும்போது தேங்காய்ப்பூவை சாப்பிட்டால் உடலுக்கு அதிக எனர்ஜி கிடைக்கும்.

இதயத்தில் படியும் கொழுப்புகள்

இதயக் குழாய்களில் படிகிற கொழுப்புகள் மாரடைப்பையும் வேறு சில இதயம் தொடர்பான நோய்களையும் உண்டாக்குகிறது. இந்த கொழுப்பு தேங்கும் பிரச்னையை சரி செய்வதிலும் மிக சிறப்பாக தேங்காய்ப்பூ உதவுகிறது.

சருமத்தின் சுருக்கம்

நம்முடைய சருமத்தை மிக இளமையாகவும், பொலிவுடனும் சருமச் சுருக்கங்கள் இல்லாமல் வைத்திருப்பதில் மிக முக்கிய பங்கு தேங்காய்ப்பூவுக்கு உண்டு. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் இளமையைத் தக்க வைத்திருக்க உதவுகிறது.

மாதவிடாய்

பெண்களுக்கு மாதவிடாய் நேரம் தவிர வெள்ளைப்படுதல் இருப்பதால் இந்த தேங்காய்ப்பூவை உட்கொள்வதால் சீர் செய்ய உதவுகிறது. அதுமட்டுமின்றி அதிகநாள் மாதவிடாய் ரத்தப்போக்கை சரி செய்ய தேங்காய்ப்பூவை உபயோகிக்கலாம்.

உடல் சூட்டை தணிக்கும்

இளநீர் மட்டுமின்றி தேங்காய்ப் பூவுக்கும் உடற்சூட்டை தணிக்கும் தன்மை உண்டு. உடற்சூட்டினால் ஏற்படும் மூக்கிலிருந்து ரத்தம் கசிவதையும் தேங்காய்ப்பூ தடுக்கிறது. இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+