நீண்ட ஆயுள் தரக்கூடிய அருமையான நெல்லிக்காயின் அற்புத பலன்கள்
சென்னை: வைட்டமின் சி ஊட்டச்சத்து அதிக அளவில் நிறைந்துள்ள நெல்லிக்காய், முழு நெல்லி, நாட்டு நெல்லி, மலை நெல்லி, மற்றும் அரை நெல்லி என பல பெயர்கள் இதற்கு உண்டு. அரை நெல்லிக்காயை காட்டிலும் முழு நெல்லிக்காய் சிறந்ததாக சில ஆய்வில் கூறப்பட்டுள்ளது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தேவைப்படும் மிக முக்கியமான அஸ்கார்பிக் அமிலம் (Ascorbic Acid) இதில் இருக்கின்றது. இது உடலில் கிருமிகள், நுண்ணுயிர்கள் தாக்காமலும், தொற்று ஏற்படாமல் தடுக்க, பெரிதும் உதவுகிறது. இயற்கையாகவே வைட்டமின் சி ஊட்டச்சத்து கிடைக்கக்கூடிய கனி இந்த நெல்லிக்கனி. நெல்லிக்காயில் அஸ்கார்பிக் அமிலம் இருப்பதால் லேசான புளிப்பு சுவையுடன் இருக்கும்.

குழந்தைகளுக்கு (நெல்லி தேன் ஊறல்)
பெரும்பாலான குழந்தைகளுக்கு (Immunity) நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக காணப்படுவதால், அடிக்கடி சளி, மூக்கடைப்பு, இருமல், காய்ச்சல், போன்ற நுரையீரல் சார்ந்த நோய் எதிர்ப்பு ஆற்றல் மிக மிக குறைவாக இருப்பதால், குழந்தைகள் எப்போதும் சோர்வாகவே இருப்பார்கள். அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு (நெல்லி தேன் ஊறல்) நெல்லிக்கனியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, தேன் கலந்து, வாரத்தில் 3-4 நாட்கள் குடுக்கலாம். இவை வீட்டிலேயே அவ்வப்போது தயாரித்து கொடுத்தால் மிகவும் நல்லது. அல்லது நெல்லிக்காய் துருவி காய்கறிகளுடன் சேர்த்து சாதத்தில் கலந்து சாப்பிடலாம், மேலும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமும், நோய் எதிர்ப்பு சக்தியும் மேம்படும். பெரியவர்கள் நெல்லிக்காயை நேரடியாக சாப்பிடுவது மிகவும் நல்லது. பெரிய நெல்லி கனியில் வைட்டமின் ஏ, சி மற்றும் இ மற்றும், கால்சியம், கார்போ ஹைடிரேட்டும், புரோட்டீன், தாது உப்புகளும், பாஸ்பரஸ் மற்றும் கொழுப்பு சத்துக்களும் அடங்கியுள்ளது. ஆரஞ்சுப்பழத்தில் உள்ள சத்துக்களை விட நெல்லிக்காய்யில் 20 மடங்கு அதிகமாக உயிர்ச்சத்தும் உள்ளது. இதில் உள்ள வைட்டமின் சி , உடலுக்கு தேவையான சத்துக்களை உறிஞ்சுவதற்கு நெல்லிக்காய் நன்கு செயல்படுகின்றது. இதயத்தில் உள்ள இரத்த நாளங்களில் கொழுப்பு சேராமல், கொழுப்பை கரைத்து சீரான இரத்த ஓட்டம் பெற உதவுகின்றது, மேலும் இரத்தத்தில் உள்ள சக்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும், நீரழிவு நோய் உள்ளவர்கள் தினமும் சாப்பிடலாம்.
நெல்லிக்காயின் ஆயுர்வேத மருத்துவம்
நீண்ட ஆயுள் தரக்கூடிய அருமையான கனி மற்றும் பல நோய் தீர்க்கும் நிவாரணி என்றும் சொல்லலாம். மேலும் ஆயுர்வேத மருத்துவமுறையில் பல்வேறு லேகியங்கள் தயாரிக்க பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது. நெல்லிக்காய் சாறு, ஊறுகாய்யாக, அல்லது லேகியமாக தேன் கலந்து சிறுவர்கள் சாப்பிட்டுவந்தால் உடல் களைப்பு நீங்கி உடல் வலிமை கூடும்.
மலசிக்கல், வாயுத்தொல்லை நீங்க
தினமும் நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் ஜீரண மண்டலம் சீராகும், மேலும் சிறிது அளவு ஊறுகாய் உணவில் சாப்பிட்டுவர கொஞ்சம் கொஞ்சமாக மலசிக்கல் பிரச்சனை தீரும். பித்த சம்பந்தமான பிரச்சனைகளுக்கு நெல்லிக்காய் நேரடியாக அல்லது ஊறுகாய் போல் சாப்பிட்டால், பித்தம் நீங்கி வியாதி குணமாகும். அடிக்கடி ஏற்படும் வாயுத்தொல்லை நீங்க, நெல்லைக்காய் சாறு சர்பத் பதத்திற்கு காய்ச்சி, குடித்துவர முற்றிலும் வாயு வெளியேற்றிவிடும்.

கேச பராமரிப்பு
நெல்லிக்காய்யில் உள்ள விட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் தலை முடி பராமரிப்புக்கும், பொடுகு பிரச்சனை தீர, தலை முடி உதிர்வை தடுக்க, நீண்ட முடி, மற்றும் அடர்த்தியாக வளர, நெல்லிக்காய் பொடியை தேங்காய் எண்ணெயில் கலந்து, தலை முடிக்கு தொண்டர்ந்து தேய்த்து வந்தால், மயிர்க்கால்கள் உறுதிப்படும், கேச ஆரோக்கியத்திற்கு நல்ல பலன் கிடைக்கும். உடல் சூடு தனியா நெல்லிக்காயை இரவே மோரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் மைய அரைத்து தலை தேய்த்து குளிக்கவேண்டும். இதில் அதிக அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால் மூளையில் உள்ள (Neuron Cells) நியூரான் செல்கள் பெலம்பெறும், நியாபக சக்தியை அதிகரிக்க உதவும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications