இம்யூனிட்டி வேணுமா? உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் பெஸ்ட் உணவு.. வீட்ல மோர் இருக்கா? சூப்பர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நம்முடைய உடலில் நோய்எதிர்ப்பு சக்தி இருந்தாலே, எந்தவிதமான நோய்களும், தொற்றுகளும் நம்மை நெருங்காது.. அந்தவகையில், நோய் எதிர்ப்பு சக்திகளை நாம் உண்ணும் உணவின் மூலமாகவே பெறலாம்.

பெரும்பாலும், பழங்கள், கீரைகள், காய்கறிகளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் பண்புகள் நிறையவே உள்ளன என்பதால், எப்போதுமே மஞ்சள், பால், இஞ்சி, சோம்பு, பூண்டு நிறைய கலந்து சமைத்து சாப்பிட வேண்டும்.

What are the Best Immunity Boosing Food and and Can Mushroom increase Boost immunity Super Tips

இதில், இஞ்சியில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் அதிகளவில் உள்ளதால் தொற்று நோய்களை எதிர்த்துப் போராட உதவியாக உள்ளது. சமையல் தவிர, இஞ்சி டீ அல்லது இஞ்சி சாறு குடித்து வரலாம்.

பருப்புகள்: பாதாம் பருப்புகளில் வைட்டமின் E, துத்தநாகம், மெக்னீசியம், புரதம் என ஊட்டச்சத்துக்கள் உள்ளதால், பாதாம் பருப்புகளை சாப்பிட்டு வரலாம். குளிர்காலம் தவிர மற்ற நாட்களில் தினமும், கறிவேப்பிலை, இஞ்சி கலந்த மோர் குடித்து வர வேண்டும். தயிரிலும் வைட்டமின் D போன்ற பிற சத்துக்கள் நமது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கப் பெரிதும் உதவுகிறது.

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ள மற்றொரு முக்கியமான பொருள் மிளகுத்தூள் ஆகும்..

அதேபோல, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் முக்கியமான பொருள் காளான்கள்... நுண்ணுயிர் மற்றும் பிற பூஞ்சை தொற்றுகளைக் குணப்படுத்த இந்த காளான் பேருதவி புரிகிறது.. நோய் எதிர்ப்பு அமைப்புக்குத் தேவையான வைட்டமின் D, B, செலினியம் போன்ற சத்துக்கள் காளானில் உள்ளது. எனவே, இயற்கையாக விளைவித்த காளான்களை சாப்பிடுவது மிகவும் நல்லது.

பழங்கள்: பழங்களை எடுத்துக் கொண்டால், சிட்ரஸ் பழங்களை சாப்பிட்டு வரும்போது, உடலில் எதிர்ப்பு சக்திகள் கூடுகின்றன.. எலுமிச்சை, நெல்லி, ஆரஞ்சு, சாத்துக்குடி உள்ளிட்ட பழங்களில் வைட்டமின் C நிறைய உள்ளது.. இவைகளை ஜூஸ் போல தயாரித்து வடிகட்டாமல் குடிக்கலாம்.

தானியங்களில், ராகி கஞ்சி, ராகி புட்டு, ராகி களி என ஏதாவது ஒருவகையில் செய்து சாப்பிட்டால், இரும்புச்சத்துடன், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாகவே கிடைக்கும். அதேபோல, வெள்ளரிக்காயை பொடியாக வெட்டி பச்சை வேர்க்கடலை சேர்த்து சாப்பிட்டாலும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

கரிசலாங்கண்ணி: கீரைகளில் முருங்கைக்கீரையும், கரிசலாங்கண்ணி கீரையும் சேர்த்து கொள்ளலாம்.. கைப்பிடி முருங்கை கீரையை சுத்தம் செய்து, 4 பல் பூண்டு, சிறிதளவு இஞ்சி, 4 சின்ன வெங்காயம், சிறிய தக்காளி, மஞ்சள் தூள் என அனைத்தையும், தண்ணீரில் போட்டு கொதிக்கவிட வேண்டும்.

தண்ணீரை தவிர, மற்ற பொருட்களை மிக்சியில் அரைத்து, மீண்டும் அதே தண்ணீருடன் கலந்து குடித்து வந்தாலே, மிகச்சிறந்த சூப் கிடைக்கும்.. வைட்டமின் A, C, E என இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். உடலுக்குள் நுழையும் நோய் கிருமிகளை அழிப்பதில் மிகவும் வலிமை வாய்ந்தது இந்த முருங்கைக்கீரை.

வேப்பிலைகள்: அதுபோலவே, வேப்பிலைகள். தினமும் நான்கைந்து வேப்பிலை கொழுந்துகளை கழுவி, வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தாலே போதும். எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்வதில், கரிசலாங்கண்ணிக்கீரைக்கும் நிறையவே பங்கு உண்டு.. இந்த கீரையில் சாறு எடுத்து, 100 மில்லியளவு சாப்பிட்டு வரும்போது, நோய் எதிர்ப்புத்தன்மை உண்டாகும்.

இதுபோன்ற உணவுகளை உங்கள் உணவில் சேர்த்து கொள்ளும்போது, இவைகளின் அளவுகள் மிகவும் முக்கியம். எனவே, மருத்துவர்களின் முறையான அனுமதியை பெறுவது ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+