Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆட்டுக்கால் சூப் வேற லெவல்! அதை விடுங்க.. மட்டன் சூப்பில் உள்ள நன்மைகள் தெரியுமா! அசந்து போவீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: அசைவம் சாப்பிடும் பலருக்கும் ஆட்டுக்கால் சூப் பிடிக்கும். நல்ல சுவையான ஆட்டுக்கால் சூப் கிடைத்தால் ஒருபிடி பிடித்துவிடுவார்கள். அந்தளவுக்கு ஆட்டுக்கால் சூப் வேற லெவல் சுவையாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், இதில் ஏகப்பட்ட நன்மைகளும் கூட கொட்டி கிடக்கிறது. அது பலருக்கும் தெரிவதில்லை. இது தொடர்பாக மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை நாம் பார்க்கலாம்.

இங்கே நம்மில் பலருக்கும் வீக் எண்ட் வந்தாலே நான்- வெஜ் சாப்பிட என்று நினைப்போம். சிலருக்கு எல்லாம் அசைவம் சாப்பிடவில்லை என்றால் அது வீக் எண்ட் போலவே இருக்காது. அந்தளவுக்கு அசைவத்தில் புகுந்து விளையாடுவார்கள்.

health mutton

ஆட்டுக்கால் சூப்:

அதிலும் குறிப்பாக மட்டனுக்கு இருக்கும் ரசிகர்களே தனி.. மட்டன் விலை எங்கோ உச்சத்தில் இருப்பதால் பொதுவாக மக்கள் சிக்கனை காட்டிலும் மட்டனை அரிதாகவே எடுத்துச் சமைப்பார்கள். ஆனால், எடுத்துச் சமைக்கும் போது ஒருபிடி பிடித்துவிடுவார்கள். அந்தளவுக்கு மட்டன் என்பது அனைவருக்குமே பிடிக்கும். மேலும், மட்டனை வகை வகையாக நாம் சமைத்து ருசிக்கலாம்.

அதில் ஒன்று தான் ஆட்டுக்கால் சூப்.. நீங்கள் எவ்வளவு வகை வகையாக சூப் செய்து குடித்தாலும் கூட ஆட்டுக்கால் சூப் போல ஒரு சுவையான வேறு சூப்பைக் கண்டுபிடிப்பது கடினம். அப்படி வேற லெவல் டேஸ்ட்டில் ஆட்டுக்கால் சூப் இருக்கும். டேஸ்ட் மட்டுமில்லை, ஆட்டுக்கால் சூப்பில் ஏகப்பட்ட நன்மைகளும் இருக்கிறது. அது பலருக்கும் தெரிவதில்லை. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

ஊட்டச்சத்து நிறைந்த ஒன்று:

ஆட்டுக்கால் சூப் என்பது ஊட்டச்சத்து நிறைந்த ஒன்று. அதில் தேவையான புரதச்சத்து, கால்சியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் என்று உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் ஏகப்பட்ட இருக்கிறது. மேலும், உடலுக்குத் தேவையான ஆமினோ ஆசிட்டும் கூட ஆட்டுக்கால் சூப் மூலம் கிடைக்கிறது.

எலும்பு சூப்பில் கிளாசின் என்ற ஒன்று இருக்கிறது. இது நமது மூட்டுக்கள் வலிமையாக இருக்க உதவுகிறது. கடந்த 2017ம் ஆண்டு ஸ்போர்ட்ஸ் மெடிசன் என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்ட ஆய்வில் கிளாசின் எலும்பு வலிமையாக இருக்க உதவுவதாகவே கூறப்பட்டுள்ளது. எனவே, மூட்டு வலி உள்ளவர்கள் குறிப்பாக வயதானவர்கள் இதை எடுத்துக் கொள்ளலாம்.

மருத்துவர்கள் சொல்வது என்ன:

இது தொடர்பாக மருத்துவர் சந்தோஷ் ஜேக்கப் தனது யூடியூப் சேனலில் கூறுகையில், "எலும்பைத் தண்ணீரில் வேக வைக்கும் போது எலும்பில் உள்ள புரதம், கொலாஜன் தண்ணீருக்கு வந்துவிடுகிறது. இதனால் சூப் நீரில் புரதச் சத்தும், கொலாஜனும் அதிகமாகவே இருக்கிறது. அத்தோடு கால்சியமும் இருக்கும். இது நமது எலும்புக்கு ரொம்பவே நல்லது.

மேலும், சூப் என்பது குறைந்த கலோரி கொண்ட ஒரு உணவாகும். இதைக் குடிக்கும் போது பசி குறையும். இதனால் டேஸ்ட் நல்லா இருக்கு என்று நாம் ஓவராக சாப்பிடுதும் தடுக்கப்படும். இது மட்டுமின்றி எலும்பு சூப்பில் கிளாசின் என்ற அமினோ ஆசிட்டும் இருக்கிறது. இது தசை வளர்ச்சி உதவுவது மட்டுமின்றி நல்ல தூக்கத்திற்கும் உதவுகிறது. நிறைய சூப் குடிக்கும் போது நீர்ச்சத்து அதிகம் கிடைக்கிறது. இதனால் உங்களுக்குப் பசியும் கம்மியாகவே இருக்கும்" என்கிறார்.

குடல் அழற்சி நோய்

நியூட்ரியண்ட்ஸ் டிரஸ்டெட் சோர்ஸ்சேஸ் இதழில் 2017ஆம் ஆண்டு வெளியான ஆய்வில், குடல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டோரின் உடலில் சில அமினோ அமிலங்கள் குறைவாகவே இருப்பதாகவும் அவர்கள் உணவில் கூடுதல் அமினோ அமிலங்களைப் பெறுவது குடல் பிரச்சினைக்கு உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்டுக்கால் சூப் மூலம் நமது உடலுக்குத் தேவையான அமினோ அமிலங்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+