மாதவிடாய் வயிற்றுவலிக்கு நிவாரணம் முதல் தாய்ப்பால் சுரத்தல் வரை.. வாழைப்பூவால் இத்தனை பயன்களா?
சென்னை: வாழைப்பூவை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன? இதில் உள்ள தாதுக்கள் என்ன என்பதை பார்க்கலாம்.
வாழைப்பூ... வாழை மரம் போல் குலம் தழைக்க வேண்டும் என்பதற்காகத்தான் திருமண வீடுகள், சுப விசேஷ நிகழ்ச்சிகளில் வாழைப்பூவை கட்டுகிறார்கள். அதாவது வாழை மரத்தை வெட்ட வெட்ட வளர்ந்து கொண்டே இருக்கும்.

வாழையின் ஒவ்வொரு பகுதியும் உண்ணத் தகுந்தவை. வாழை இல்லை, வாழைத்தண்டு, வாழைப்பூ, வாழைக்காய், வாழைப்பழம் ஆகும். இதில் வாழைப்பூவுக்கு அதிக அளவிலான மருத்துவ குணங்கள் உள்ளன. இந்த வாழைப்பூவை வாழைமரத்தின் இதயம் என்றே சொல்லலாம்.
இயற்கை நிவாரணி: ஆங்கிலத்தில் banana blossom, banana heart என்று அழைக்கப்படுகிறது. இந்த வாழைப்பூவில் முக்கிய மினரல்களான பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், காப்பர், மெக்னீசியம், இரும்பு உள்ளிட்ட உடல் நலனுக்குத் தேவையான அனைத்து சத்துகளும் உள்ளன. நோய் தொற்றுகளை இயற்கையாகவே குணப்படுத்தும் திறன் வாழைப்பூவுக்கு உண்டு.
பாக்டீரியாக்கள்: மனிதர்களுக்கு உயிரிழப்பையோ நோயையோ ஏற்படுத்தும் பாத்தோஜெனிக் பாக்டீரியாக்கள் பரவாத வகையில் தடுக்கும் எத்தனால் எனும் சாறு வாழைப்பூவில் உள்ளது. மாதவிடாயின் போது வயிற்றுவலியால் அவதிப்படுவோர் இந்த பூவை வேக வைத்து சாப்பிட அடிவயிற்று வலி குணமாகும். அது போல் அதிக உதிரப்போக்கையும் குறைக்கும்.
மாதவிடாய் வயிற்று வலி: தயிருடன் இந்த வாழைப்பூவை சேர்த்து சாப்பிடும் போது உடலில் புரொஜெஸ்டிரான் எனும் ஹார்மோனை அதிகரிக்கும். இதனால் மாதவிடாய் ரத்தப்போக்கு குறையும். சர்க்கரையின் அளவையும் இந்த வாழைப்பூ குறைக்கும். மேம்படுத்தப்பட்ட குளுகோஸை இந்த வாழைப்பூ வெளியேற்றுகிறது. இதனால் சர்க்கரை அளவு சீராகும்.

மன அழுத்தத்தை குறைக்கும்: வாழைப்பூவில் மெக்னீசியம் இருப்பதால் கோபத்தை குறைக்கும். மனஅழுத்தத்தை தடுக்கும் மருந்தாக இது விளங்குகிறது. இந்த பூவில் பீனோலிக் ஆசிட், டேனின்ஸ், ஃபிளேவனாய்டுகள் உள்ளிட்ட ஆன்டி ஆக்சிடென்ட்கள் இருக்கின்றன. இவை புற்றுநோய் பாதிப்பை தடுக்கும். மேலும் மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகளை குறைக்கும். பாலூட்டும் தாய்மார்கள் இந்த வாழைப்பூவை சாப்பிட்டால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும். கர்ப்பப்பைக்கு வலுவை கொடுக்கும், குழந்தை பேறுக்கு பிறகு ஏற்படும் ரத்தப்போக்கை குறைக்கும்.
வயதான தோற்றத்தின் வேகத்தை குறைக்கும்: வாழைப்பூவில் விட்டமின் சி அதிகமாக இருக்கிறது. இதில் ஆன்டி ஆக்ஸிடென்ட்களும் இருக்கிறது. இதனால் வயதாகும் தோற்றத்தின் வேகத்தை குறைக்கும். சிறுநீரகம் சீராக இயங்க தூண்டும். வாழைப்பூவின் குறுத்துகளை சாப்பிட வலியுடன் கூடிய கிட்னி கற்களையும் கரைக்கும். அது போல் சிறுநீர் பிரச்சினைகளை தீர்க்கும். இரும்பு சத்தை அதிகரிக்கும். ரத்த சோகை, சோர்வு, சீரற்ற இதயத் துடிப்பு, கை, கால்களில் வியர்வை உள்ளிட்டவைகளை குறைக்கும். சிகப்பு ரத்த அணுக்களின் அளவை அதிகரிக்கும்.
வயிற்று புண்களை ஆற்றும்: ஜீரண சக்தியை அதிகரிக்கும். வயிற்றில் புண்கள், வலி இருந்தால் வாழைப்பூ சாப்பிட்டால் நீங்கிவிடும். மலச்சிக்கலை போக்கும். வாழைப்பூவில் அதிகம் புரதமும் நார்ச்சத்துகளும் இருக்கிறது. இதனால் இது பசியை தூண்டாமல் நீண்ட நேரத்திற்கு பசிக்காமல் இருக்கும். இதனால் உடல் எடை குறைய உதவும்.
எலும்பை பலப்படுத்தும் ஆற்றல்: முடி வளர்வதற்கு உதவும். முடி சீரம், ஆயில்கள், கிரீம்களில் வாழைப்பூவின் சாறு முக்கிய பங்காற்றுகிறது. எலும்பையும் வலுப்படுத்தும் ஆற்றல் இந்த வாழைப்பூவுக்கு இருக்கிறது. இதில விட்டமின்கள் ஏ, சி, இ ஆகியவை உள்ளனர் இதனால் மூட்டு வலி ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகளை குறைக்கும்.












Click it and Unblock the Notifications