டெய்லியும் எண்ணி 3 பழத்தை ஊற வைங்க.. காலையில் லகலகதான்! ரொம்ப சீப்! "ஏழைகளின் ஆப்பிள்" எது தெரியுமா?
சென்னை: உடலுக்கு எல்லா விதமான சத்துகளும் கிடைக்கும் வகையில் மிக குறைந்த விலையில் ஒரு பழம் இருக்கிறது. அதை சாப்பிட்டால் போதும்!
முதியவர்கள் முதல் குழந்தைகள் வரை இன்று பெரும் பிரச்சினையாக இருப்பது மலச்சிக்கல்தான். இந்த மலச்சிக்கலை தீர்க்க எதை எதையோ சாப்பிட்டும் தீரவில்லை. தினமும் காலையில் பாத்ரூமில் மலமே கழிக்காமல் நேரம் வீணாவதுதான் மிச்சமாக இருக்கிறது என பலர் வேதனைப்பட்டு கேள்விப்பட்டுள்ளோம்.

சிறுநீரை போல் மலமும் உடலை விட்டு வெளியேறிவிட வேண்டும். இல்லாவிட்டால் வயிறு சம்பந்தமான பிரச்சினைகள், காற்று பிரியும் போது துர்நாற்றம், மலத்தை வெளியேற்ற முக்குவதால் ரத்தம் வெளியேறுதல், மூல நோய் ஏற்பட காரணமாகுதல், குடல் வாய் புற்றுநோய் ஏற்படும் அபாயம் என நோயின் தாக்கங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
மலச்சிக்கலை தீர்க்க ஒரு அருமையான மருந்து இருக்கிறது. இது இயற்கையானதும் கூட! எந்த வித அச்சமும் இன்றி எடுத்துக் கொள்ளலாம். இது ஒரு உலர் பழ வகையை சேர்ந்தது. மிகவும் குறைந்த விலைதான். யார் வேண்டுமானாலும் வாங்கலாம். இதெற்கென பழத்தை கட் செய்வதற்கோ கழுவுவதற்கோ நேரத்தை ஒதுக்க தேவையில்லை.
பேரீச்சம் பழம்தான் உடலுக்கு தேவையான நிறைய சத்துக்களை வழங்கி மலமிளக்கியாக செயல்படுகிறது. இதை ஸ்னாக்ஸ் சாப்பிடுவது போல் சாப்பிடலாம். எந்த ஒரு பாதிப்பும் இல்லை. கண் பார்வை கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வைட்டமின் ஏ குறைபாடு இருக்கும். இதை சரி செய்ய பேரீச்சம் பழமே சிறந்த மருந்தாகும். மாலைக் கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த பேரீச்சம் பழத்தை சாப்பிட்டு வந்தால் எல்லா சத்துகளும் கிடைக்கும்.
இதனால் கண் பார்வை கோளாறுகள் நீங்கும். பெண்களுக்கு அதிக கால்சியம் சத்தும் இரும்புச் சத்தும் தேவைப்படுகிறது. மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் உதிரப்போக்கால் இத்தகைய சத்துகள் குறைகின்றன. இதை சரி செய்து ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சினையை இந்த பேரீச்சம் பழம் சரி செய்கிறது. பேரீச்சை மலச்சிக்கலை உண்டாக்கும் என தவறான தகவல் மக்களிடையே பரவி வருகிறது.
ஆனால் இது ஒரு சிறந்த மலமிளக்கியாகும். இதற்காக முதல் நாள் இரவே 3 பேரீச்சம் பழங்களை நீரில் ஊற வைத்துவிட்டு காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் அந்த நீருடன் பேரீச்சத்தையும் சாப்பிட வேண்டும். இதில் அதிக நார்சத்து இருக்கிறது. குடல் இயக்கங்களை சரி செய்யும். வயிற்றுப்போக்குக்குச் சிறந்த மருந்தாகும்.
இந்த பேரீச்சம் பழத்தில் இரும்புச் சத்து அதிகளவில் உள்ளது. ரத்த சோகையை சரி செய்துவிடும். உடலுக்குத் தேவையான ஆற்றலையும் ஆரோக்கியத்தையும் தருகிறது. ரத்த உற்பத்திக்கு வழிவகுக்கிறது. இதயத்தை பாதுகாக்கும். இந்த பழத்தில் பொட்டாசியம் உள்ளதால் அவை நம்மை காக்கும்.
எலும்பை வலுப்படுத்தும் மாங்கனீசு, மக்னீசியம் செலினியம் போன்ற தாதுக்களும் உள்ளன. எலும்பின் வளர்ச்சிக்கு உதவும். ஆஸ்டியோ போரோசிஸ் எனும் எலும்பு நோயிலிருந்து நம்மை காக்கிறது. நினைவாற்றலை அதிகரிக்கும். இந்த பேரீச்சம் பழத்தில் வைட்டமின்களும் பொட்டாசியம் போன்ற தாதுக்களும் உள்ளன. இது நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. இந்த பேரீச்சம் பழத்தை தினமும் 6 பழங்களை சாப்பிட்டால் போதும் உடல் எடையை அதிகரித்துவிடும். வயிற்றில் ஏற்படும் புற்றுநோயை குணப்படுத்தக் கூடிய வல்லமை படைத்தது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications