Horse gram: ஒரு கைப்பிடி கொள்ளு பருப்பு போதும்! மளமளனு வெயிட் குறைக்கலாம்! ஊளைச் சதையும் பறந்துடும்!
சென்னை: கொள்ளுப் பருப்பை ஒரு பிடி சாப்பிட்டால் தொங்கும் ஊளை சதை எல்லாம் பஞ்சாய் பறந்து போகும் என்கிறார்கள். குதிரை சாப்பிடும் இந்த கொள்ளை எப்படியெல்லாம் சாப்பிடலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
இதுகுறித்து அத்திமரக்காடு எனும் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: உணவே மருந்து, கொள்ளுப் பருப்பில் என்னென்ன சத்துகள் இருக்கின்றன என்பதை பார்க்கலாம்.
• கொள்ளுப் பருப்பில் அதிக அளவு மாவுச்சத்து உள்ளது. இதை ஊற வைத்து சாப்பிடலாம் அல்லது வறுத்தும் சாப்பிடலாம்.

• ஜலதோஷம் குணமாக கொள்ளுப் பருப்பை நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த வேண்டும். இது உடல் உறுப்புகளைப் பலப்படுத்தும். இதை அருந்துவதால் வயிற்றுப் போக்கு, வயிற்றுப் பொருமல், கண் நோய்கள் போன்றவையும் குணமாகும்.
• கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச்சதையை குறைக்கும் சக்தி கொள்ளுப் பருப்பிற்கு உண்டு. கொள்ளுப் பருப்பை ஊற வைத்து, அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும்.
• அடிக்கடி உணவில் கொள்ளு சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம். இரவில் ஒரு கைப்பிடி கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் முதலில் அதை சாப்பிட்டால் உடல் எடையை குறைக்கலாம்.
• கொள்ளுப் பருப்பு உடலில் இருக்கும் ஊளைச்சதையைக் குறைப்பதோடு உடலுக்கு அதிக வலுவையும் கொடுக்கக் கூடியது. எனவே கொள்ளுப் பருப்பை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
• கொள்ளு சூப் சளியைப் போக்கும் குணம் வாய்ந்தது. எனவே, குழந்தைகளுக்கு சளி பிடித்தால், கொள்ளு சூப் வைத்துக் கொடுக்கலாம். இதை குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் அருந்தலாம்.
• கொள்ளுப் பருப்பை ஆட்டி பால் எடுத்து அதில் சூப் வைத்தால் இன்னும் சுவையாக இருக்கும். கொள்ளுப் பருப்பை அரைத்துப் பொடி செய்து வைத்துக் கொண்டு, நாம் எப்போதும் வைக்கும் ரசத்தில் ஒரு ஸ்பூன் கொள்ளுப் பொடியை போட்டால் அருமையான சுவையுடன் ரசம் இருக்கும்.
• இது பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் போக்கைக் கட்டுப்படுத்துவதுடன், மாதாந்திர ஒழுங்கை சரிப்படுத்தும். பிரசவ அழுக்கை வெளியேற்றும்.
• கொள்ளும் அரிசியும் கலந்து செய்யப்பட்ட கஞ்சி பசியைத் தூண்டுவதுடன் தாதுவைப் பலப்படுத்தும். எனவே, பெண்கள் இதை உணவாக எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொள்ளு ரசம் செய்வது எப்படி?
1 டேபிள் ஸ்பூன் கொள்ளை எடுத்து வறுத்துக் கொள்ளவும்.
பின்னர் அதை ஆற வைத்து அதனுடன் 1 ஸ்பூன் மிளகு, சீரகம், வற்றல் மிளகாய் காரத்திற்கேற்ப, கருவேப்பிலை, சிறிதளவு தோலுடன் கூடிய பூண்டு பல் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
சூப் மாதிரியும் குடிக்கலாம்
பின்னர் ரசத்திற்கு புளி, தக்காளியை நன்கு கரைத்துக் கொண்டு , மேலே அரைத்த ரச பொடியை தேவைக்கேற்ப போட்டு, உப்பு, மஞ்சள் தூள், பச்சை மிளகாய், பெருங்காயம் உள்ளிட்டவைகளை போட்டு ரசம் ஆங்காங்கே நுரையாக பொங்கும் வரை வைத்துவிட்டு ஆஃப் செய்து விட வேண்டும். பின்னர் கொத்துமல்லி தூவி, கடுகு தாளித்து கொட்டலாம். சுவையான ஆரோக்கியமான ரசம் ரெடி.
சளித் தொல்லை
சளி தொல்லை இருப்போர், தேவைப்பட்டால் கூடுதலாக மிளகு பொடியை சேர்த்துக் கொள்ளலாம். இதை சூப்பாகவும் குடிக்கலாம். அது போல் வெங்காய சட்னி அரைக்கும் போது, கடலை பருப்பு அல்லது உளுத்தம் பருப்புடன் கொள்ளு பருப்பையும் சேர்த்து வறுத்துக் கொண்டு அரைக்கலாம்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications