"ஆண்மை குறைவு.." சரியான தூக்கம் இல்லை என்றால் ஏற்படும் பாதிப்புகள் என்ன! மருத்துவர்கள் விளக்கம்
சென்னை: இந்தக் காலத்தில் மக்கள் நிம்மதியாகத் தூங்கும் நேரம் என்பது கணிசமாகக் குறைந்தே வருகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படும் நிலையில், அது நமது உடலைப் பல வழிகளில் மோசமாகப் பாதிக்கிறது. இதற்கிடையே நாம் தூங்காமல் இருப்பது உடலை எந்தளவுக்குப் பாதிக்கிறது என்பது குறித்து மருத்துவர்கள் விளக்கியுள்ளனர். அதை நாம் பார்க்கலாம்.
பொதுவாக நாம் ஒரு நாளுக்கு 14 அல்லது 16 மணி நேரம் கூட ஆக்டிவாக இருப்போம். ஆனால், குறைந்தது 7 மணி நேரமாவது தூங்க முயல்வோம். ஆனால், ஜப்பானைச் சேர்ந்த இளைஞர் வெறும் 30 நிமிடம் மட்டுமே தூங்குவாராம்.

தூங்காமல் இருக்க அவர் காபி போன்ற கஃபைனை பானங்களை எடுத்துக் கொள்வாராம். இந்த செய்தி இணையத்தில் டிரெண்டான நிலையில், பலரும் இதை முயன்று பார்க்க விரும்புகிறார்கள். ஆனால், இந்த விபரீத விளையாட்டு வேண்டாம் என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.
மருத்துவர்கள் விளக்கம்: இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், "தயவு செய்து இதை முயன்று பார்க்க வேண்டாம். தூக்கம் என்பது வாழ்க்கையில் மிக முக்கியமானது. அது நமது உடலுக்கான சூப்பர் பவர் போன்றது. நமது மூளை தொடங்கி அனைத்து உடல் பாகங்களும் தூக்கத்தில் கொஞ்சம் ஓய்வு எடுக்கும்.
பொதுவாக நாம் தூங்கும் போது பல நிலைகளைக் கடப்போம். ஒரு சைக்கிள் போல. ஆனால், 30 நிமிட தூக்கத்தில் இந்த நிலைகளை நம்மால் கடக்கவே முடியாது. இதனால் முறையான ஓய்வு நமக்குக் கிடைக்காது. இது உடலுக்குக் கெடுதலாகவே இருக்கும். மூளை செயல்பாடுகள் பாதிக்கப்படலாம். இதனால் நமது அன்றாட நடவடிக்கை கூட பாதிக்கப்படலாம்" என்கிறார்.
எரிச்சல் ஏற்படும்: நாம் 2 நாட்கள் முறையாகத் தூங்கவில்லை என்றாலே நமக்கு ஒரு வித எரிச்சல் ஏற்பட்டு நாம் பார்த்து இருப்போம். பொறுமை குறையும் எனப் பல பிரச்சினைகள் ஏற்படும். எனவே, தூக்கத்தைக் குறைத்து உடலைப் பழக்கப்படுத்துவது கிட்டதட்ட சாத்தியமே இல்லாத ஒன்றாகும்.
அதேபோல தூங்காமல் இருப்பது நமது இதயத்திற்கு மிக மோசமானது. புகை பிடிப்பது, முறையான டயர்ட் பின்பற்றாமல் இருப்பது, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது எவ்வளவு கெடுதலோ அதே அளவுக்குத் தூக்கமின்மையும் நம்மைப் பாதிக்கும். ஒரு சராசரி மனிதனுக்குக் குறைந்தபட்சம் 7 மணி நேரத் தூக்கம் அவசியமாகும்.
இதய பாதிப்பு: எப்போதும் நாம் நிலையாக ஒரே நேரத்தில் தூங்கவில்லை என்றால் அது நமது இதயத்தைக் கடுமையாகப் பாதிக்கும். அழுத்தத்தை அதிகரிக்கும். இதனால் நமது உடலின் எதிர்ப்புச் சக்தியும் குறையும். இப்படிக் குறைவான நேரம் தூங்கினால் பல வித பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
டீ, காபி உள்ளிட்ட பானங்களைத் தினசரி 1 அல்லது 2 முறை வரை குடித்தால் பிரச்சினை இல்லை. ஆனால் 3 முறைக்கு மேல் குடித்தால் அது ஆபத்தானது. அதிகளவில் டீ, காபி குடிக்கும் போது கை கால் உதற ஆரம்பிக்கும், பதற்றம் வரும், அவசர அவசரமாக எல்லா வேலைகளையும் செய்ய ஆரம்பிப்போம். இதனால் தூக்கமும் கெடும். எவ்வளவு களைப்பாக இருந்தாலும் தூக்கம் வராது.
குழந்தையின்மை பிரச்சினை: அதேபோல குறைவான தூக்கம் என்பது குழந்தையின்மை பிரச்சினையைக் கூட ஏற்படுத்தும். தினசரி ஏழு மணி நேரத்திற்கும் குறைவாகத் தூங்கும் பெண்கள் கருத்தரிக்கும் வாய்ப்பு 15% குறைகிறது. பெண்கள் தூங்காமல் இருந்தால் மாதவிடாய் ஒழுங்கற்றதாக மாறும். மேலும், கருமுட்டையைப் பலவீனமாக மாற்றும். சராசரியாக 7.5-8 மணிநேரம் தூங்கும் ஆண்களுடன் ஒப்பிடும் போது 6 மணி நேரத்திற்கும் குறைவாகத் தூங்கும் ஆண்களுக்கு விந்தணு எண்ணிக்கை, விந்தணு மூவ்மெண்ட் குறைகிறது.
இது சாதாரண செய்தி மட்டுமே. இதை யாரும் மருத்துவ ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக்கூடாது. உடலில் பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக அருகே உள்ள மருத்துவரிடம் செல்ல வேண்டும்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications