பாலில் கால்சியம் மட்டுமில்லை.. ஏகப்பட்ட நன்மை கொட்டி கிடக்கு! தினசரி ஒருவர் எவ்வளவு பால் குடிக்கணும்
சென்னை: இந்தியாவில் நமது தினசரி வாழ்க்கையில் பாலுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நமது நாட்டில் தினசரி பால் மற்றும் பால் பொருட்களை எடுப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். பால் குடிக்கும் போது அது உடலுக்குத் தேவையான கால்சியத்தை தருவது அனைவருக்கும் தெரியும். ஆனால், தினசரி பால் குடிக்கும்போது கால்சியத்தை தாண்டி பல நன்மைகள் கிடைக்கிறதாம். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
நமது நாட்டில் சிறியவர் முதல் பெரியவர் வரை பால் மற்றும் பால் பொருட்களை எடுத்துக் கொள்வார்கள். குறிப்பாக நாம் குழந்தைகளுக்குத் தினசரி பால் கொடுப்பதை வாடிக்கையாக வைத்துள்ளோம். முன்பு பால்காரர்களிடம் வாங்கி தருவார்கள். இப்போது பல நிறுவனங்களின் பால் பாக்கெட்டை வாங்கி தருகிறார்கள். ஆனால், இந்த பழக்கத்தை நாம் கைவிடவில்லை.

கால்சியம் மட்டுமில்லை
தினசரி பாலை குடிக்கும்போது அது உடலுக்குத் தேவையான கால்சியம் சத்துக்களைத் தருகிறது என்பது அனைவருக்கும் தெரியும். இதன் காரணமாகவே குழந்தை வளரும்போது அவர்களுக்குப் பாலை கொடுப்பார்கள். அவர்களின் எலும்பு வலிமையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே பால் தருகிறார்கள். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் கால்சியத்தை தாண்டியும் கூட பாலில் ஏகப்பட்ட நன்மைகள் உள்ளன. அது குறித்து நாம் பார்க்கலாம்.!
மன அழுத்தத்தைக் குறைக்கும்
பால் என்பது இயற்கையாகவே ஒரு மன அழுத்த நிவாரணியாகவும் தூக்கத்தைத் தரும் பொருளாக இருப்பதாக டாக்டர் ரூபாலி தத்தா கூறுகிறார். பாலில் உள்ள டிரிப்டோபான், தூக்கத்தை ஒழுங்குபடுத்தும் ஹார்மோனான மெலடோனின் உற்பத்தியை ஊக்குவிக்கும் ஒரு அத்தியாவசிய அமினோ ஆசிட்டாகும். இது தூக்கச் சுழற்சிகளை மேம்படுத்தவும், சோர்வைக் குறைக்கவும், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் புத்துணர்ச்சியுடன் இருக்கவும் உதவுகிறது. மேலும், இது மன அமைதியையும் தரும் என்கிறார்கள்.
வயிற்றில் அசிடிட்டி பிரச்சினை இருந்தால் அதற்கும் பால் ஒரு தீர்வாக இருக்கும். பால் குடிக்கும்போது அது வயிற்றில் அமிலத்தன்மையைக் குறைக்கிறது. ஒரு கிளாஸ் குளிர்ந்த பால் குடிப்பது ஆசிடிட்டியை தற்காலிகமாகச் சரி செய்ய உதவும். குறிப்பாகக் காரசாரமான உணவை எடுத்துக் கொண்ட பிறகு பாலை குடித்தால் அது வயிற்று எரிச்சலைக் குறைக்க உதவும்.
உடலுக்கு நல்லது
பால் நல்ல க்ரீம் போல இருந்தாலும் கூட பால் பெரும்பாலும் தண்ணீரால் ஆனது. பாலில் உடலுக்குத் தேவையான புரதங்கள், கொழுப்புகள், வைட்டமின்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. இதனால் பால் நமக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை வழங்குகிறது. மேலும், பாலில் இருக்கும் தண்ணீர் உடலுக்குத் தேவையான நீரை வழங்குகிறது. உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க இது உதவுகிறது.
பால் மற்றும் இதர பால் பொருட்களில் காஞ்சுகேட்டேட் லினோலிக் அமிலம் (CLA) உள்ளது. இது உடல் கொழுப்பைக் குறைக்கவும், தசை வளர்ச்சியை ஆதரிக்கவும் உதவும். பாலை எடுத்துக் கொண்டே உடற்பயற்தியை செய்யும்போது உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றச் செயல்பாட்டைக் கூட மேம்படுத்த முடியும்.
எவ்வளவு பால் குடிக்கலாம்!
ஒருவர் சராசரியாகத் தினசரி 500-600 மில்லி வரை பாலை எடுத்துக் கொள்ளலாம். இந்த அளவு தினசரி தேவையான கால்சியம் மற்றும் புரதத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுகிறது. மேலும், குடல் ஆரோக்கியம் இரைப்பை பிரச்சினைகளைக் குறைக்கிறது. அதேநேரம் இது தோராயமான அளவு மட்டுமே. ஒருவரது உடல் உட்பட பல்வேறு காரணங்களைப் பொறுத்து பாலின் தேவை மாறுபடும்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications