அது என்ன வாட்டர் ரோவர் கருவி? பிரபலமடைய முக்கிய 10 காரணங்கள் என்ன தெரியுமா? இதுதான் விஷயமா?
சென்னை: வாட்டர் ரோவர்கள் என்ற ஒரு கருவி குறித்து சமீபகாலமாக கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அவை பிரபலமடைய 10 காரணங்கள் என்னென்ன தெரியுமா?
டிவி ஷோவான House of cards இல் வாட்டர் வாட்டர் ரோவர் எனும் சொல்லை கேட்டிருப்பீர்கள். இல்லாவிட்டாலும் யாராவது சொல்ல நீங்கள் பார்த்திருப்பீர்கள். இது வேறு ஒன்றும் இல்லை.
உடற்பயிற்சி செய்வதற்கு பயன்படுத்தப்படும் முக்கிய கருவியாகும். வாட்டர் ரோவர் குறித்து நீங்கள் இன்னும் கேள்விப்படவில்லை என்றால் ஒன்றுமில்லை, தண்ணீரில் மோட்டார் படகை செலுத்தும் போது ஒரு கயிற்றை இழுப்போம் அல்லவா. அதுதான்.

இந்த கருவி பல்வேறு நன்மைகளை செய்து வருவதால் நாளுக்கு நாள் பிரபலமடைந்து வருகிறது. இதன் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம். முதலில் ஏரோபிக் உடற்பயிற்சி செய்ய உதவுகிறது. ஏரோபிக் உடற்பயிற்சியை செய்வதன் மூலம் உடல் பலம் பெறும், நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டிவிடும். மனநிலையை உயர்த்தும், தூக்கத்தை அதிகரிக்கும்.
2. எடை குறைப்பில் முக்கிய பங்கு- இந்த வாட்டர் ரோவரை செய்வதன் மூலம் உடலில் உள்ள கலோரிகள் எரிகின்றன. தசைகள் இளகுகின்றன. இதனால் எடை குறைகிறது. ஒரு மணி நேரம் இதில் பயிற்சியை செய்தால் 600 கலோரிகள் குறையும். எனவே யாராவது எடை குறைப்பிற்கு ஆசைப்பட்டால் இந்த ரோவர் இயந்திரம் மிக சிறந்ததாகும். இதனுடன் உணவு கட்டுப்பாட்டையும் கடைபிடிக்க வேண்டும்.
3. உடலில் மேல் பகுதிகளில் நன்கு பயன் கொடுக்கிறது- உடலின் மேல் பகுதி, கீழ் பகுதிகளில் உள்ள முக்கிய தசைகள் வலுபெறுகின்றன. தோள்பட்டை பகுதியில் இருந்த ராம்பாய்டுகள், முதுகின் மேற்பகுதியில் உள்ள டிராபிஸிகளை மேம்படுத்துகின்றன. இதன் மூலம் முதுகு வலி குறைகிறது. கை, முட்டியில் உள்ள தசைகளும் வலுபெறுகிறது.
4. உடலின் கீழ் புறத்திலும் செயலாற்றுகிறது- முக்கிய கால் தசை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்கிறது. நீச்சல் அடிப்பது போல் கைகளை அசைப்பதால் இந்த கருவியின் மூலம் உடலின் அனைத்து உறுப்புகளும் இயங்கும்.
5. வலி இருந்தாலும் தாக்கம் இருக்காது- பெரிய பெரிய உடற்பயிற்சிகளை செய்யும் போது ஏற்கெனவே தசைகளில் மூட்டுகளில் வலி இருந்தாலும் பிற கருவிகளை செய்தால் வலி அதிகரிக்கும். ஆனால் இந்த வாட்டர் ரோவரை செய்தால் அந்த அளவுக்கு வலி இருக்காது. எனவே உடலை வருத்திக் கொள்ளாமலும் அதிக வலி இல்லாமலும் இந்த கருவியில் உடற்பயிற்சி செய்ய முடியும் என்பதால் இது பிரபலமடைகிறது.

6. தாங்கும் சக்தியை மேம்படுத்தும்- இந்த ரோவிங் இயந்திரத்தை பயன்படுத்த அதிக வலிமை தேவைப்படுகிறது. ஆனால் இதை ரெகுலராக பயன்படுத்தும் போது சகிப்புத்தன்மை அதிகரிக்கும். மெட்டபாலிசத்தையும் அதிகரிக்கும்.
7. வாங்கக் கூடிய விலை- இந்த வாட்டர் ரோவர்களை அனைவரும் வாங்கும் வகையில் விலை உள்ளது. இது ஒரு மெஷினானது 1000 டாலர்களாகும். இந்திய மதிப்பில் சுமார் 75 ஆயிரம் ரூபாய் ஆகும். மிகப் பெரிய மெஷின்களை வாங்குவதுடன், தினமும் ஜிம்முக்கு போய் உடற்பயிற்சி செய்ய ஆகும் கட்டணத்துடனும், ஜிம் பயிற்சியாளருக்கு கொடுக்கக் கூடிய கட்டணத்துடனும் ஒப்பீடு செய்தால் ரோவரின் விலை குறைவுதான்.
8. எளிதாக எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம்- இந்த மெஷினை வைக்க 2 சதுர அடி இடம் மட்டுமே தேவைப்படும். எனவே இதை ஹால், பெட்ரூம் உள்ளிட்ட இடங்களில் எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம். சுவற்றில் ஆணி அடித்து கூட மாட்டி விடலாம். குழந்தைகளோ உங்கள் செல்ல பிராணிகளோ சென்றால் விழுந்து விடும் என்ற பயமே வேண்டாம்.
9. ரோவர்களின் அமைப்பு அழகாக இருக்கும்- வாட்டர் ரோவர்கள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். இவை மரத்தால் செய்யப்பட்டவை. பிரவுன் அல்லது ஊதா கருப்பு நிறத்தில் கிடைக்கிறது. டேனிஷ் எண்ணெய்யை தடவி விட்டிருக்கிறார்கள். அதில் அலுமினியம் அல்லது ஸ்டீல் பவுடர் கோட்டிங் செய்யப்பட்டிருக்கும். இதனால் பார்ப்பதற்கு நவீன கருவி போல் இருக்கும்.
10. மனதிற்கு இதத்தை அளிக்கும்- படகை ஓட்டி செல்லும் போது எப்படி மனம் தெளிவாக இருக்கிறதோ அது போல் இந்த வாட்டர் ரோவர் கருவி மூலம் உடற்பயிற்சி செய்யும் போது மிகவும் தெளிவடையும். இது உடலுக்கு மட்டுமில்லை, மனதிற்கும் சிறந்த பயிற்சி அளிக்கக் கூடியது. இதை அன்றாடம் பயன்படுத்தி பலனை அடைந்தவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications