உலகம் முழுக்க.. அதிகரிக்கும் கண் பார்வை பிரச்சினைகள்.. எப்படி தவிர்க்கலாம், என்ன சாப்பிடலாம்?
சென்னை: கண் என்பது பொக்கிஷம், கண் பார்வை என்பது மிக பெரிய வரப்பிரசாதம். இன்றும் உலகளவில் விஞ்ஞான ரீதியாக வளர்ந்த நாடுகளில் எல்லா வயதினருக்கும் பிறந்த குழந்தை முதல் முதியவர்கள் வரை ஏற்படக்கூடிய பொதுவான பிரச்சனை, கண் பார்வை இழப்பு (Blindness) பிரச்சனைகள் ஆகும். உலகில் உள்ள மொத்த ஜனத்தொகையில் சுமார் 3-5% மக்கள் கண் பார்வையற்றவர்களாக இருப்பதாக சில ஆய்வில் கூறப்படுகிறது.
பெரும்பாலானோருக்கு கார்னியல் கண் நோய் (corneal eye disease) கண்புரை (Cataract), கண் விழித்திரையில் ஏற்படும் பாதிப்புகள், கண் சம்பந்தமான பிரச்சனைகள், தூர பார்வை, கிட்ட பார்வை, கண் அழற்சி, மந்தமான கண் பார்வை, மாலை கண் நோய், நீரழிவு நோயினால் ஏற்படக்கூடிய கண் பாதிப்புகள், கண் நரம்புகளில் வீக்கம், என பலவிதமான கண் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுகிறது, இப்பிரச்சினைகளை எப்படி தவிர்ப்பது, மற்றும் நல்ல ஆரோக்கியமான முறையில் கண்களை பராமரிப்பது எப்படி என்பது பற்றி பார்க்கலாம்.

முக்கிய காரணங்கள்: கண்களில் ஈரத்தன்மை இல்லாமல், வறட்சியடையும்போது (dryness), கண் இமைகளின் எரிச்சல் அல்லது வீக்கத்திற்கான பொதுவான காரணமாக இருக்கும். தவறி கிழே விழுவது, சில விபத்துகளினால், கண் பார்வை பாதிக்கப்படுவது, ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக கண் விழித்திரையில் கோளாறுகள், குழந்தை பிறக்கும்போதே பார்வை குறைபாடு, அல்லது வயது காரணமாக கருவிழியில் மாற்றம் ஏற்படுவது, போன்ற பல்வேறு காரணத்தினால் கண் பார்வை பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.
கண்ணுக்குள் இருக்கும் நீர்: கண்கள் ஆரோக்கியமாக இருக்கவேண்டுமென்றால், கண்களில் ஈரத்தன்மை கட்டாயம் இருக்க வேண்டும். தினமும் குறைந்தது 3-4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும், இதனால் கண்களில் ஏற்படும் நீர் வறட்சியை தடுத்து, கண் சார்ந்த அனைத்து கோளாறுகளை வராமல் தடுக்கமுடியும். கண்ணுக்கு மேலே உள்ள லாக்ரிமல் சுரப்பிகள் தான் கண்ணீரை உருவாக தூண்டுகிறது. கண்ணீரில் உப்பு சாரம் கொண்ட அவை உமிழ்நீருக்கு ஒத்த அமைப்பையும் கொண்டுள்ளது. கண்ணீர் நம் உணர்ச்சிகளோடு தொடர்பு உள்ளதால், ஒரு காரியத்தின் முடிவில் அவை கண்களில் வரும் கண்ணீர் மூலமாகத்தான் தெரிகிறது. நாம் அழும்போதும் உடலில் உள்ள கலோரிகள் வெளியேறுகின்றது.
3 வகையான கண்ணீர்: கண்களை ஈரப்பசையுடன் வைக்க அடிப்படை கண்ணீர் உதவிசெய்கிறது. தூசு விழும்போது நம் கண்களில் கண்ணீர்வருவதுண்டு. சில நேரங்களில் கோபம், பயம், துக்கம், சந்தோஷமாக இருக்கும்போது கண்ணீர் வரும். உடலிலிருந்து நச்சுப்பொருட்களை வெளியேற்ற கண்ணீர் தான் மிக முக்கிய காரணியாக இருக்கிறது. கருவிழியை பாதுகாப்பதற்கும் கண்களில் அடித்தள கண்ணீர் இருப்பதால், கண் அழுத்த நோய் வராமல் தடுத்து, கண்களில் விழும் அழுக்கு குப்பைகளையும் தடுக்கிறது. அழுகையை அடக்குவதன் மூலம் ஹார்மோன்களில் மற்றம் ஏற்பட்டு உடல் எடை கூடுவதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
நீரழிவு நோயாளிகள்: ஒவ்வொரு சர்க்கரை நோயாளியின் ரத்த சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இல்லை என்றால், கண்கள், இதயம் மற்றும் சிறுநீரகம் பாதிக்கப்படும். மற்ற உள் உறுப்பு பாதிப்பை காட்டிலும், வெளிப்புற அறிகுறிகளாக கண் பார்வை பாதிக்கப்படுவது நன்கு தெரியவரும். சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் தங்கள் உணவுக் கட்டுப்பாட்டைப் பின்பற்றி, இன்சுலின்களை நேரத்திற்கு எடுத்துக்கொள்வதோடு, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த, உடற்பயிற்சி தினமும் செய்துவந்தால், கண் பார்வை கோளாறு, மற்றும் கண் சார்ந்த பிரச்சனைகளை குறைக்கலாம் மேலும் கண் பார்வை இழப்பை தவிர்க்கலாம்.

ஆரோக்கியமான உணவுகள்: நம் கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க வைட்டமின் ஏ, சி, இ, அதிகம் உள்ள பச்சை காய்கறிகள், கீரைகள், கேரட், இனிப்பு உருளைக்கிழங்கு, மாம்பழம், பப்பாளி, பாதம், பிஸ்தா, வேர்க்கடலை, கோதுமை, எள்ளு, ஆளி விதை, பூசணி, மீன், மூட்டை, ஆரஞ்சு, எலும்பிச்சைப்பழம், காலிஃபிளவர், பால், சாதாரண தண்ணீர் ஆகிய அனைத்து விதமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும், இது கண்களுக்கு நல்ல ஊட்டச்சத்தை தருகிறது. கண்களுக்கு சூரிய ஒளி மிகவும் அவசியம், ஆனால் அடிக்கடி கண்களை சூரிய ஒளியில் காட்டுவதை தவிர்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications