ஞாபகமறதி எதனால் வருகிறது?.....எப்படி ஞாபகசக்தியை அதிகரிப்பது?
சென்னை: பொதுவாக ஞாபக மறதி சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்து வயதினருக்கும் வரக்கூடிய விஷயம் ஆகும். சாதாரண மறதி (Normal forgetfulness) சிறிய அளவில் மட்டுமே நமக்கு பாதிப்பு ஏற்படுத்தும், ஆனால் வயது ஆக ஆக அசாதாரண மறதி (Abnormal forgetfulness) வியாதி ஏற்படுத்தக்கூடிய பெரிய அளவில் பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும். ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றி மீண்டும் மீண்டும் யோசித்து (repeatedly over thinking), மனஅழுத்தம் (stress), மனசோர்வு (depression) நிச்சயமாக மறதி ஏற்படும், மட்டுமின்றி அறிவியல் ரீதியாகக்கூட பல்வேறு காரணங்கள் உண்டு. நல்ல விஷயம் என்னவென்றால் ஆரம்ப நிலையில் மறதி பிரச்சனையை கட்டுப்படுத்த முடியும் என்பதே.

சாதாரண மறதி என்பது வீட்டின் சாவியை மறப்பது, பிறந்தநாள் தேதிகள் அல்லது நண்பர்கள் மற்றும் உறவினர்களின் பெயர்களை மறப்பது, பொருட்கள், பைகள், பர்ஸ்கள், மொபைல்கள் ஆகியவற்றை ஓர் இடத்தில் வைத்துவிட்டு மீண்டும் எடுக்க மறந்துவிடுவது என்று இன்னும் பல நிகழ்வுகள் ஆகும். அசாதாரண மறதி, அன்றாட வேலைகளை மறப்பது அல்லது நாம் அன்றாடம் செய்து கொண்டிருந்த விஷயங்களை எப்படி செய்வது என்பதை முற்றிலும் மறந்து விடுவது , தங்களை மறந்து குடும்ப உறுப்பினர்களிடம் பேசின விஷயங்களை திரும்ப திரும்ப பேசுவது, சமூகத்தில் அசாதாரணமாக நடந்து கொள்வது போன்ற பல மாற்றங்கள் அவர்களிடத்தில் காணப்படும். இப்படி சாதாரண மறதி அல்லது அசாதாரண மறதி அறிகுறிகள் அடிக்கடி காணப்படுமானால், கட்டாயம் மருத்துவரை அணுகுவது நல்லது. இது பெரும்பாலும் வயதானவர்களிடத்தில் அதிகமாக பார்க்கமுடியும்.
ஞாபகமறதிக்கு முக்கிய காரணங்கள்: பதப்படுத்தப்பட்ட உணவு (processed food), அதிக அளவில் வெள்ளை சர்க்கரையைப் பயன்படுத்துவது, புகை பிடித்தல், இதய சம்பந்தமான கோளாறுகள், சர்க்கரை நோய், தைராய்டு, அல்லது ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதால், முழு உடலையும் சரியாக பயன்படுத்தாமல் இருப்பது, போதுமான தூக்கம் இல்லாத ஆரோக்கியமற்ற வாழக்கை முறை, மனஅழுத்தம் (stress), மனசோர்வு (depression), அறிவுத்திறன் வீழ்ச்சியும், இது போன்ற சில காரணத்தினால், முதுமையில் ஏற்படக்கூடிய மறதி 40 வயதை எட்டும்போது வந்துவிடுகிறது. இரவு தூங்க செல்வதற்கு முன், கண்டிப்பாக சூடான பானங்களை (தேநீர் & காபி) குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
மூளைக்கு உடற்ப்பியரிசி தேவை: மூளைக்கு உண்டான உடற்ப்பயிற்சி செய்யாமல் அல்லது குறைந்த அளவு உடற்பயிற்சி செய்யும்போது ஞாபக மறதி பிரச்சனை ஆரம்பமாகிறது. நம்முடைய மூளையில் யோசிக்கும் திறன், நினைவாற்றலை கூர்மையாக வைத்திருக்க தேவையான செல்கள் நல்ல ஆரோக்கியமான முறையில் வைத்திருக்க மற்றும் சுறுசுறுப்பாக செயல்பட நிச்சயமாக மூளைக்கு உடற்ப்பயிற்சி தேவை. மூளையை எவ்வாறு ஆரோக்கியமாக வைத்திருப்பது என்பதை பற்றி பார்க்கலாம்.
ஞாபகமறதிசக்தியை அதிகரிக்க செய்யவேண்டியவை: தினமும் 30 நிமிட உடற்ப்பயிற்சி கட்டாயம் செய்யவேண்டும். எந்த அளவிற்கு மூளையில் ஆக்ஸிஜன் மற்றும் இரத்த ஓட்டம் அதிகமாக இருக்கிறதோ, அந்த அளவிற்கு, மூளையின் செயல்பாட்டுத்திறன், சுறுசுறுப்பாக இருக்கும். இதனால் மூளையில் புதிய செல்களை உருவாக்கி, ஞாபகசக்தியை அதிகரிக்க உதவுகிறது. நினைவாற்றலைத் தூண்டும் புதிய விஷயங்களைக் (learning new things), கற்றுக்கொள்ள முயற்சி செய்வது மிகவும் சிறந்தது. சில குறிப்பிட்ட உணவுகள் ஞாபகசக்தியை அதிகரிக்க உதவும் உணவுகள் தேங்காய் எண்ணெய், தேங்காய், பச்சை காய்கறிகள், மீன் உணவுகளிலிருந்து மூளைக்கு தேவையான ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், 1 ஸ்பூன் அளவு மஞ்சள் தூள், ஆரஞ்சு, கொய்யா, திராட்சைபழம், அன்னாசிப்பழம், பாதாம் மற்றும் அக்ரூட்ஸ், எளிதில் கிடைக்கக்கூடிய பூசணி விதைகள், குறைந்தது 6 மணி நேரமாவது ஆழந்த தூக்கம் இருக்க வேண்டும்.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications