அமெரிக்காவுக்கு ஆப்பு ரெடியா இருக்கு! அடுத்த வாரம் அதிரப் போகும் அமெரிக்கன்ஸ்! தலைக்கு மேல் கத்தி!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: ஐரோப்பாவைத் தாண்டி தற்போது அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளிலும் கடுமையான வெப்ப அலை தனது ஆக்கிரமிப்பை தொடங்கி இருக்கிறது. இதனால், அடுத்த ஒரு வாரத்திற்கு மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

எல்-நினோ போன்ற காலநிலை மாற்றங்களால் ஐரோப்பாவில் கடந்த சில தினங்களாக கடும் வெயில் கொளுத்தி வருகிறது. 40 டிகிரிக்கு மேல் கொளுத்தும் வெயில் காரணமாக பெல்ஜியம், ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

Heat wave

மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் உயிரை இழந்து இருக்கிறார்கள். இந்த நிலையில் ஐரோப்பாவை தொடர்ந்து அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளை வெப்ப அலை ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

அமெரிக்கா

அமெரிக்க வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி," ஹீட் டோம் எனப்படும் உயர் காற்றழுத்த மண்டலம் இந்த முறை உருவாகி இருக்கிறது. அமெரிக்காவின் மூன்றில் இரண்டு பங்கு நிலப்பரப்பை பாதிக்கும் அளவுக்கு மிக வலிமையானதாக இருக்கிறது. இந்த உயர் காற்றழுத்த மண்டலம் வெப்பமான காற்றை ஒரு மூடியை போல பூமிக்கு அருகே அடைத்து வைத்திருப்பதால், குளிர்ச்சியான காற்று மழையோ அந்த பகுதிக்குள் நுழைய முடியாத சூழல் உருவாகும். இதன் விளைவால் பகலில் மட்டுமல்லாமல் இரவு நேரங்களிலும் வெப்பநிலை அதிகமாகவே இருக்கும் என எச்சரித்துள்ளது.

வெப்ப அலை

இது தொடர்பாக வடக்கு டாகோட்டா மாகாணத்தின் பிஸ்மார்க் நகரில் பணியாற்றும் வானிலை ஆய்வாளர் ஜோஸ் ஆடம் பேசுகையில்," இரவு நேரத்தில் வெப்பம் குறையாதது மிகப்பெரிய சிக்கலாக இருக்கும். பொதுவாக கோடைகால வெப்பநிலை 26 முதல் 30 டிகிரி செல்சியஸ் வரை மட்டுமே இருக்கும். ஆனால் தற்போது 37 டிகிரி செல்சியஸை தாண்டி பல நாட்கள் வெப்ப அலை நீடிக்கும்" என அவர் எச்சரித்துள்ளார்.

ஹீட் டோம்

மருத்துவ நிபுணர்களும் இந்த வெப்ப அலை குறித்து தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளனர். பல பகுதிகளில் வெப்பம் வழக்கத்தை விட 8 முதல் 14 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக பதிவாகும் என்றும், இரவு நேரத்திலும் வெப்பம் குறையாமல் இருப்பது மனித உடலுக்கு ஓய்வை தராது என தெரிவித்துள்ளனர்.இதனால் முதியவர்கள், சிறு குழந்தைகள், நோயாளிகள் மற்றும் வீடற்ற மக்கள் அதிக ஆபத்தை எதிர்கொள்ள கூடும் என எச்சரிக்கின்றனர்.

சமூக ஆர்வலர்கள்

மேலும் இது தொடர்பாக பேசி உள்ள மின்னசோட்டா மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரான டைனிகா ஸ்மித்," செயின்ட்பால் நகரில் தங்கும் வசதி கூட இல்லாமல் ஏராளமான மக்கள் கூடாரங்களில் வசிக்கிறார்கள். இவர்களுக்கு மின்விசிறிகள், குடிநீர், உணவு மற்றும் சுகாதார சாதனங்களை வழங்கி வருகிறோம். அவர்களால் குளிர்சாதன வசதி உள்ள கட்டிடங்களுக்கோ அல்லது வீடுகளுக்கு செல்ல முடியாது. கூடாரங்களுக்குள் வெளியில் இருப்பதை விட அதிக வெப்பம் நிலவுகிறது. இதனால் எங்கள் குழு அவர்களுக்கு முடிந்த உதவியை செய்து வருகிறோம்" எனக் கூறியுள்ளார்.

தேசிய வானிலை சேவை

அமெரிக்க தேசிய வானிலை சேவை மையம் வெளியிட்டுள்ள கணிப்பின்படி," வரும் புதன்கிழமைக்குள் நாடு முழுவதும் 90-க்கும் மேற்பட்ட வெப்பநிலை சாதனைகள் முறியடிக்கப்படலாம் அல்லது சமன் செய்யப்படலாம் என கூறியுள்ளது. இதில் மூன்றில் இரண்டு பங்கு உச்சபட்ச வெப்பநிலை, இரவு நேரத்தில் இருக்கும் எனவும் ஃப்ளோரிடாவின் மியாமி, டாபா, டெக்ஸாஸின் கால்வெஸ்டன் மற்றும் தெற்கு கரோலினாவின் சார்லஸ்டன் போன்ற நகரங்களிலும் இரவு நேரத்தில் வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ்க்கு கீழே குறையாது என கணிக்கப்பட்டுள்ளது.

அதிகமான வெப்பநிலை

அக்குவெதர் நிறுவனத்தின் மூத்த வானிலை ஆய்வாளர் சாட் மெரில் இதுதொடர்பாக பேசுகையில், கடந்த 25 ஆண்டுகளில் டகோட்டாவை தாக்கிய மிக வலிமையான ஹீட் டோம் இதுவாக இருக்கலாம். இதனால், நெவாடா, யூட்டா, கொலராடோ, வயோமிங், ஐடஹோ, மொன்டானா உள்ளிட்ட பல மாநிலங்களில் இந்த வார இறுதிக்குள் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமான வெப்பநிலை பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நெவாடா மாநிலத்தின் லாஸ் வேகாஸில் வெப்பநிலை 111 டிகிரி பாரன்ஹீட், அதாவது சுமார் 48 டிகிரி செல்சியஸை எட்டக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

காட்டுத் தீ

வழக்கமாகவே வெப்பமான மாநிலமாக இருக்கும் நெவாடாவில்கூட இந்த முறை இயல்பை விட அதிக வெப்பம் பதிவாகும் என அதிகாரிகள் கூறுகின்றனர். அதிர்ச்சி தரும் விதமாக, அதிக வெப்பநிலையுடன் காட்டுத் தீ அபாயமும் அதிகரித்துள்ளது. குறிப்பாக ராக்கி மலைப்பகுதிகள் ஏற்கனவே வறண்ட நிலையில் இருப்பதால், வறண்ட இடியுடன் கூடிய மழை உருவாகும் வாய்ப்பு இருப்பதாகவும், அது காட்டுத் தீ பரவலை மேலும் அதிகப்படுத்தக்கூடும் என்றும் வானிலை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+