“பாஜக என்றால் பயம்.. பாம்பை பார்த்தா பயப்படத்தான் செய்வாங்க’- நயினாருக்கு அமைச்சர் வன்னி அரசு பதிலடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜகவை பார்த்து அனைத்துக் கட்சிகளும் பயப்படுகிறது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியது தொடர்பாக அமைச்சர் வன்னி அரசிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு வன்னி அரசு, "பொதுவாக பாம்புகளை பார்த்தால் எல்லோரும் பயப்படத்தான் செய்வார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

அரசியலில் அதிமுக - திமுக இணைந்து செயல்படலாம் என்று டி.டி.வி. தினகரன் கூறியிருக்கிறாரே என்ற கேள்விக்கு பதில் அளித்த வன்னி அரசு, "அதிமுக - திமுக இணைந்து செயல்படுவதற்கான முன்னெடுப்பை பேசிக் கொண்டிருக்கிறார்கள். இது முன்னதாகவே பேசிக் கொண்டிருந்ததுதான். எந்த எதிர்ப்பில், எந்த பின்னணியில் என்பதுதான் முக்கியம். தவெக எதிர்ப்புக்காக ஒன்று சேர்கிறார்கள் என்றால் மக்கள் அதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

Vanni Arasu

அதிமுக கரைந்து கொண்டிருக்கும் நேரத்தில், இரண்டு கட்சிகளும் இணைவதற்கான இலக்கு என்ன? என்பதுதான் டி.டி.வி.தினகரன் முன் நான் வைக்கும் கேள்வி. த.வெ.கவை எதிர்க்க ஒன்றிணைவது என்றால் இதைவிட மோசமான முன்னெடுப்பு ஏதும் இருக்க முடியாது.

பாஜக-வை எதிர்ப்பதற்கு, ஆர்.எஸ்.எஸ். அமைப்பை எதிர்ப்பதற்கு, சங் பரிவாரை எதிர்ப்பதற்கு என்றால் சரி. கோட்பாடு அடிப்படையில் சரி. மற்றபடி பேசுவது மோசமான முன்னெடுப்பு." என அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது, "பா.ஜ.கவை தேசிய அளவில் வீழ்த்த தி.மு.கவும், த.வெ.கவும் ஒரே அணியில் (இந்தியா கூட்டணி) இணைய வேண்டும்" என்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் கூறியது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், "பாஜகவைப் பார்த்து அனைவருக்கும் பயம் வந்திருக்கிறது. பிரதமர் மோடியைப் பார்த்து பயந்து போய் இருக்கிறார்கள். பிரதமர் மோடி யாருக்கும் எதிராக எந்த நடவடிக்கையிலும் இறங்கவில்லை. உலக அளவில் இந்தியாவை தலைநிமிரச் செய்துள்ளார்" என்று தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+