மாதவிடாய் நாட்களில் அதிக வயிற்று வலி இருக்கா?...அப்போ இந்த வகையான உணவை சாப்பிடுங்க!
சென்னை: பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் உடல் சோர்வு, வயிறு வலி வருவது இயல்பானதே. ஒவ்வொரு மாதமும் அதிக இரத்தப்போக்கும், அடி வயிறு வலி வந்தால் உடல் ஆரோக்கியத்தில், சற்று அக்கறை எடுத்து பராமரித்து வந்தால் எதிர்காலத்தில் பல பிரச்னையை தவிர்க்கலாம். மாதத்தில் இருமுறை மாதவிடாய் சுழற்சி வரும் பெண்களுக்கு உடல் வலி, படபடப்பு, கோபம் அதிகமாக இருக்கும். சிலருக்கு செரிமானக் பிரச்சனைகளும் ஏற்படும். பெண்கள் கடைசி காலம் வரை நல்ல ஆரோக்கியமாக இருக்க, கர்பப்பை மிகவும் முக்கியமான உள்ளுறுப்பாகும்.

ஒவ்வொரு பெண்களுக்கும் மாதவிடாய் சுழற்சியின்போது ஏற்படக்கூடிய இரத்தப்போக்கு, வயிற்று வலியை குறைக்க வலி நிவாரணி மாத்திரைகள் (pain killer tablets) எடுத்துக்கொள்வது இயல்பாகிவிட்டது. ஆனால் நாம் புரிந்துகொள்ளவேண்டிய விஷயம், இயற்கையாய் வரக்கூடிய இரத்தப்போக்கு, மாதவிடாய் சுழற்சி, கர்ப்பப்பையில் ஏற்படக்கூடிய நீர்க்கட்டி, தாமதமாக மாதவிடாய் மூலம் வரும் பிரச்சனைகள் என்னென்ன மற்றும் வலியை குறைக்க இயற்கையான உணவுகள் மூலமாகவே இதை சரி செய்துவிடலாம் என்ற விழுப்புணர்வு விழிப்புணர்வை, ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பெண் குழந்தைகளுக்கு கட்டாயம் சொல்லித்தர வேண்டும்.
கர்பப்பை மிகவும் பலவீனமாக இருந்தால், அதிக இரத்தப்போக்கு மற்றும் தாங்க முடியாத வலி ஏற்படும். எனவே கர்பப்பையை பலப்படுத்தக்கூடிய உணவு வகைகளை உட்கொள்ளவேண்டும் மற்றும் பொதுவான ஊட்டச்சத்துள்ள உணவு, ஆரோக்கியமான மனதுடன் நம் உடலை பராமரிக்க வேண்டும். அதிக இரத்தப்போக்கு, வலி வருவதற்கான அடிப்படையான காரணத்தை தெரிந்துகொண்டு, சரியான உணவு முறையில் இவற்றை சரிசெய்து கொள்ளலாம். மாதவிடாய் நாட்களில் என்னென்ன உணவுகளை சாப்பிடவேண்டும் என்பது பற்றி இக்கட்டுரையில் பார்க்கலாம்.

ஒவ்வொரு பெண்ணும் உட்கொள்ளும் நல்ல ஆரோக்கியமான உணவைப் பொறுத்தே மாதவிடாய் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை கொடுக்கும். அந்த 3 - 5 நாட்களில் சேர்த்துக்கொள்ளவேண்டிய ஆரோக்கியமான உணவு வகைகள். கால்சியம் சத்துள்ள பாதம், பால், தயிர், சேர்த்துக்கொள்ளவேண்டும். கொய்யா, வாழைப்பழம், ஆரஞ்சு, அவகாடோ, பழவகை சாப்பிடலாம். வெண்டைக்காய், மீன், ப்ராக்கோலி, உளுந்தங்களி, வெந்தய கஞ்சி, மேலும் ஒரு கீரை வகை கட்டாயம் சாப்பிட வேண்டும்.
3-4 லிட்டர் தண்ணீர் அல்லது வெந்நீர், ஜூஸ் குடித்தால் வயிற்று வலி குறையும். சாக்லேட்டில் உள்ள செரட்டோனின் என்ற வேதி பொருள் மாதவிடாய் நாட்களில் ஏற்படும் கோபம், டென்ஷன், பதட்டம், குறைக்க உதவும். அதிக இரத்தப் போக்கு காரணமான வெண்ணெய், கிரீம் போன்ற உணவுகளை தவிர்க்கவேண்டும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications