நைட் தூக்கம் போயிடும்.. இரவு தப்பித்தவறி கூட சாப்பிடக்கூடாத உணவுகள் எதெல்லாம் தெரியுமா?
சென்னை: இரவு நேரத்தில் படுத்ததும் தூக்கம் வர வேண்டும் என்றால் அதற்கு முன்பு நாம் சில உணவுகளை சாப்பிடாமல் தவிர்த்தால் போதுமானது ஆகும். அப்படி இரவு நேரத்தில் தப்பித்தவறி கூட சாப்பிடக்கூடாத உணவுகள் எதெல்லாம் என்றும், எதற்காக அந்த உணவை தவிர்க்க வேண்டும் என்பது பற்றியும் இங்கு பார்க்கலாம்.
இரவு நேரத்தில் படுத்தவுடன் தூக்கம் வராவிட்டால் பெரிய மனக்கஷ்டமே வந்துடும். வேண்டாத சிந்தனைகள் வந்து மன உளைச்சலை கூட ஏற்படுத்தி சென்றுவிடும். இரவில் வெகுநேரம் செல்போன் பயன்படுத்துவது உள்ளிட்ட சில காரணங்களால் தூக்கம் பாதிக்கப்படும் என்று ஆய்வுகள் சொல்கின்றன. அது மட்டும் இன்றி நாம் உண்ணும் உணவால் கூட இரவில் தூக்கம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

அதாவது, சில உணவுகள் உடல் வெப்ப நிலையை அதிகரிக்கும். அந்த வகையில், இரவில் தூங்குவதற்கு முன்பாக சாப்பிடக்கூடாத உணவுகள் எது எல்லாம் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
காபி, டீ தவிர்த்தல் நல்லது
இரவு தூங்க செல்வதற்கு முன்பாக குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன்பே சாப்பிட்டுவிட வேண்டும். ஏனெனில், தூங்கும் நேரத்தில் போய் சாப்பிட்டால், நமது உடல் ஜீரணத்திற்கான பணிகளை துவங்கிவிடும். இதனால், தூக்கம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே சில உணவுகளை தூங்குவது முன்பாக அவசியம் தவிர்த்துவிடும். ஏனெனில் எளிதில் ஜீரணம் ஆகாத சில உணவுகள் உடல் தூக்கத்தை கெடுத்துவிடும்.
காபி, டீ, சாக்லேட், மற்றும் சோடா பொருட்கள் உள்ளிட்டவற்றை தூங்கும் முன்பாக சாப்பிடக்கூடாது. ஏனெனில் காபி, டீயில் உள்ள பொருட்கள் நமது நரம்பு மண்டலத்தை தூண்டி தூக்கத்திற்கு இடையூறை ஏற்படுத்தும்.
காரமான பொருட்கள்
காரமான பொருட்களை சாப்பிடுவது நெஞ்சு எரிச்சலை ஏற்படுத்தும். அல்லது அஜீரண கோளாறுகளை ஏற்படுத்தும். இதனால், தூக்கம் பாதிக்கப்படும். அதேபோல, கொழுப்பு சத்துக்கள் நிறைந்த பீட்சா, பர்க்கர், எண்ணெயில் பொறிக்கப்பட்ட ஸ்னாக்ஸ்கள் ஆகியவற்றை சாப்பிடக்கூடாது. இந்த உணவுகள் அசவுகரியத்தை ஏற்படுத்துவதோடு, நெஞ்சு எரிச்சல், வயிற்று வலியை ஏற்படுத்தக்கூடும்.
* ஆல்கஹாலை பொறுத்தவரை ஆரம்பத்தில் தூக்க உணர்வை கொடுத்தாலும் இது ஆழ்ந்த தூக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்தும். அதுமட்டும் இன்றி அடிக்கடி தூக்கத்தில் இருந்து எழ வேண்டியிருக்கும். இரவு முழுக்கவே இது இருக்கும் என்பதால் அடுத்த நாள் வேலையில் கூட உங்களால் உற்சாகமாக ஈடுபட முடியாது.
ஆரஞ்சு, எலுமிச்சை பழங்கள்
* இனிப்புச் சத்துக்கள் அதிகம் நிறைந்த மிட்டாய்கள், கேக் வகைகள் ஆகியவற்றை இரவில் தூங்க போகும் முன்பாக சாப்பிட்டால் தூக்கம் எளிதில் வராது. உற்சாகத்தை தூண்டும் வகையிலான உணவுகள் என்பதால் இரவில் வெகு நேரம் கட்டிலில் புரண்டு கொண்டே இருக்க வேண்டியதுதான்.
* சிட்ரஸ் அமிலங்கள் நிறைந்த ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் திராட்சை பழங்கள் உள்ளிட்டவற்றை இரவில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. இது அமிலத்தை தூண்டும். இதனால், தூக்கம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
பால் பொருட்கள்
* ரெட் மீட் எனப்படும் இறைச்சி உணவுகளில் அதிக புரோட்டீன்கள் உள்ளன. அதுபோக கொழுப்பும் உள்ளது. இது ஜீரணமாவதற்கு அதிக நேரம் ஆகும். இதனால், பின்னிரவில் இதை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. இல்லையென்றால், உங்களின் இரவு தூக்கம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
* பால் பொருட்கள் இரவில் சாப்பிடுவது, அதிலும் உங்களுக்கு லாக்டோஸ் பொருட்கள் எளிதில் ஜீரணம் ஆகாத பிரச்சினை இருந்தது என்றால் அறவே தவிர்ப்பது நல்லது. ஒரு சிலருக்கு இரவில் பால் பொருட்கள் சாப்பிடுவது தூக்கத்தை பாதிக்கும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications