Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திறக்கவே முடியாத வலி! பச்சை கலர் நீர்! கர்நாடகாவில் 40,000 பேருக்கு பாதிப்பு! பிங்க் ஐ ஏன் ஆபத்தானது

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாட்டின் பெரும்பாலான இடங்களில் பிங்க் ஐ என்பது இப்போது மிகப் பெரிய பிரச்சினையாக மாறிவிட்டது. இந்த பிங்க் ஐ என்றால் என்ன.. இது எந்தளவுக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்துப் பார்க்கலாம்.

நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் கடந்த மாத இறுதி முதல் மட்டும் சுமார் 40 ஆயிரம் பேருக்கு பிங்க் ஐ பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக பீதர் மாவட்டத்தில் 7500+ பேருக்கு பிங்க் ஐ பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

 What is Pink eye which is now becoming biggest issue in many states

அதேபோல ராய்ச்சூர், சிவமொக்கா உள்ளிட்ட இடங்களிலும் கூட பாதிப்பு மோசமாகவே இருக்கிறது. முதலில் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் அதிகம் ஏற்பட்ட பிங்க் ஐ இப்போது நமது அண்டை மாநிலமான கர்நாடகா வரை வந்துள்ளது.

பிங்க் ஐ: இது எந்தளவுக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். அதன் அறிகுறிகள் என்ன.. சிகிச்சை முறை என்ன என்பதை நாம் விரிவாகப் பார்க்கலாம். கடந்த சில வாரங்களில் மட்டும் பிங்க் ஐ காரணமாக ஏற்படும் பாதிப்புகள் பல மடங்கு அதிகரித்துள்ளது. குழந்தைகள் மத்தியிலும் இந்த பாதிப்பு அதிகமாக ஏற்படுகிறதாம். இதை மருத்துவர்கள் கான்ஜுன்க்டிவிடிஸ் (Conjunctivitis) என அழைப்பார்கள்

கான்ஜுன்க்டிவிடிஸ் என்பது கண்ணில் இருக்கும் வெண்படலத்தில் ஏற்படும் எரிச்சல் அல்லது வீக்கம் ஆகும்... இது நமது கண்ணில் இருக்கும் வெள்ளைப் பகுதியை உறைய வைக்கும் ஒரு பாதுகாப்பு சவ்வு ஆகும். இதை பிங்க் ஐ என்றும் அழைக்கப்படுகிறது. இது பெரும்பாலும் வைரஸ் அல்லது பாக்டீரியா தொற்று காரணமாக ஏற்படுகிறது.. இது மிக மிக ஈஸியாக பரவும் என்பதே இதன் மிகப் பெரிய ஆபத்தாகும்.

சளி அல்லது தொண்டைப் புண் போன்ற சுவாச நோய்த்தொற்றின் அறிகுறிகளுடன் இது ஏற்படலாம். சரியாகச் சுத்தம் செய்யாமல் காண்டாக்ட் லென்ஸ்கள் அணிந்தாலும் பாக்டீரியா பாதிப்பு காரணமாக கான்ஜுன்க்டிவிடிஸ் ஏற்படும். அசுத்தமான மேற்பரப்புகளைத் தொட்ட பிறகு உங்கள் கண்ணைத் தொடும் சமயத்திலும் பிங்க் ஐ பாதிப்பு ஏற்படும். எனவே, பிங்க் ஐ பாதிப்பு ஏற்படும் போது துண்டு உள்ளிட்ட தனிப்பட்ட பொருட்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.. இதுபோன்ற நேரங்களில் பிங்க் ஐ பரவும்.

பொதுவாக வைரஸ் மற்றும் பாக்டீரியா என இரு வேறு காரணங்களால் கான்ஜுன்க்டிவிடிஸ் எனப்படும் இந்த பிங்க் ஐ ஏற்படும்.

வைரல் கான்ஜுன்க்டிவிடிஸ்: பகல் நேரத்தில் கண்களில் இருந்து நீர் வெளியேறும்.. காலையில் ஒட்டும் தன்மை கொண்ட நீர் கண்ணில் இருந்து வெளியேறும்.. கண் இமைகள் மிகவும் வீங்கியிருக்கும். இவை பெரும்பாலும் ஓரிரு வாரங்களில் தானாகவே சரியாகிவிடும். தேவைப்பட்டால் மருத்துவர் ஆலோசனைக்குப் பிறகு கண்களில் தேவையான மருந்தை அப்ளை செய்யலாம்.. Artificial tears அல்லது lubricating eye drops கண் எரிச்சலைக் கட்டுப்படுத்த உதவும்.

பாக்டீரியா கான்ஜுன்க்டிவிடிஸ்: இது ஏற்படும் போது கண்களில் இருந்து நாள் முழுவதும் மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் ஒட்டும் தன்மை கொண்ட ஒரு வித பொருள் வெளியே வரும். கண்களில் அரிப்பு ஏற்படும். மேலும், கண் இமைகள் வீக்கமடையும்.. இதற்கு மருத்துவர் ஆலோசனைப்படி தேவைப்பட்டால் ஆண்டிபயாடிக் கண் சொட்டு மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம்.

அலர்ஜி கான்ஜுன்க்டிவிடிஸ்: இது இரு கண்களையும் பாதிக்கும். மகரந்தம் போன்ற பொருட்களால் இவை ஏற்படும்.. இந்த பாதிப்பு கண்கள் சிவக்கும்.. ஒரு வித பொருட்கள் கண்களில் இருந்து வெளியே வரும்.. ஆனால், இந்த வகை பிங்க் ஐ மற்றவர்களுக்குப் பரவாது.

அறிகுறிகள்: கண் வலி, கண் சிவந்து போவது, மங்கலான பார்வை, கண்களில் தொடர்ந்து நீர் வடிதல், கண்களைத் திறக்க முடியாதது போலக் கண்கள் ஒட்டுக் கொள்வது, கண்களில் இருந்து தொடர்ந்து திரவ வெளியேற்றம் ஆகியவை இதன் அறிகுறிகள். பெரும்பாலும் பிங்க் ஐ தானாகச் சரியாகிவிடும். இருப்பினும், அவை மற்றவர்களுக்குப் பரவாமல் இருக்கச் சிகிச்சை அவசியமாகிறது.

இது யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படும் ஆபத்து இருக்கிறது. இருப்பினும், பள்ளி மற்றும் வேலை செய்யும் இடங்களில் பலரும் ஒன்றாக இருப்பதால் குழந்தைகள் மற்றும் இளம் வயதினருக்கு இது அதிகம் ஏற்படும். ஏற்கனவே பிங்க் ஐ பாதிப்பு உள்ளவர்களுடன் நேரடியாகத் தொடர்பில் இருந்தால் இவை அதிகம் ஏற்படும். மேலும், கான்டேக்ட் லென்ஸ் ஆகியவற்றை முறையாக அணியவில்லை என்றாலும் பிங்க் ஐ பாதிப்பு ஏற்படும்.

பாதுகாப்பது எப்படி: சுத்தமாக இருந்தாலேயே பிங்க் ஐ பாதிப்பு வராது. கண்களைப் பாதுகாப்பாக வைத்திருங்கள். குறிப்பாக சுகர் பாதிப்பு இருப்போருக்கு இது எளிமையாக வரும் என்பதால் ரொம்பவே நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது தானாகச் சரியாகவிடும். அதேநேரம் சிலருக்கு அறிகுறி அதிகம் இருந்தால் சிகிச்சை தேவைப்படும். இருந்த போதிலும் நாமாக எந்தவொரு மருந்தையும் எடுத்துக் கொள்ளக் கூடாது. மருத்துவர் ஆலோசனைப் படியே மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+