"வாட்டர் பாய்சனிங்.." ஓவரா தண்ணீர் குடித்தால் உயிரே கூட போகும்! எவ்வளவு நீர் குடிப்பது ஓகே

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: எந்தவொரு விஷயத்தையும், அது நல்லதாகவே இருந்தாலும் கூட அளவுக்கு மீறி அதிகமாக நாம் எடுத்துக் கொண்டால் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை காட்டும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

"அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு" என்ற ஒரு பழமொழி இருக்கிறது. அதாவது ஒரு விஷயம் என்ன தான் உடம்புக்கு நல்ல ஒரு விஷயமாக இருந்தாலும் நாம் அளவாக மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

அளவு கடந்து ஒரு விஷயத்தை நாம் எடுத்துக் கொண்டால் அது நமக்கு விஷயமாக மாறிவிடும். இதற்கு நாம் பல உதாரணங்களை சொல்ல முடியும். அப்படியொரு சம்பவம் தான் இப்போது மீண்டும் நடந்துள்ளது.

 What is water poisoning the excessive intake will cause very serious issue

வாட்டர் சேலஞ்: பொதுவாக இணையத்தில் ஒவ்வொரு காலமும் ஒவ்வொரு விஷயம் டிரெண்டாகும். அதன்படி தான் இப்போது இணையத்தில் வாட்டர் சேலஞ் என ஒன்று டிரெண்டாகி வருகிறது. இந்த சேலஞ்சில் ஒருவர் தொடர்ச்சியாக தினசரி 4 லிட்டர் தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆல்கஹால் எதுவும் எடுத்துக் கொள்ளக் கூடாது. மேலும், தினசரி இரண்டு முறை தலா 45 நிமிடங்கள் நிமிட உடற்பயிற்சி செய்ய வேண்டும். மேலும், 10 பக்கங்களைப் படிக்கவும் வேண்டும்.

இப்படி ஒருவர் தொடர்ச்சியாக 75 நாட்களுக்கு ஒருவர் செய்ய வேண்டும். இதை தான் அவர்கள் வாட்டர் சேலஞ் என்கிறார்கள். இதைத்தான் கனடாவை சேர்ந்த மிச்செல் ஃபேர்பர்ன் என்பவர் முயன்றுள்ளார். 75 வயதான இவர் தொடர்ச்சியாக 4, 5 லிட்டர் தண்ணீர் குடித்தே வந்துள்ளார். இருப்பினும் சில நாட்களில் இவருக்கு வாட்டர் பாய்சனிங் ஏற்பட்டுள்ளது. இருப்பினம், அவர் அதை தொடர்ந்து செய்துள்ளார்.

பிரச்சினை ஏற்படும்: இந்தச் சூழலில் தான் 12ஆவத நாளில் இவரது உடல்நிலை ரொம்பவே மோசமாகியுள்ளது. அன்றிரவு படுக்கைக்கு செல்லும் போது அவரது உடலில் சில பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. அன்றிரவு அவருக்கு அடிக்கடி பாத்ரூம் வந்துள்ளது. மறுநாளில் இருந்து அவரால் எதையும் சாப்பிடவே முடியவில்லையாம். எது சாப்பிட்டாலும் வாந்தி வந்துள்ளது. மேலும், உடலும் ரொம்பவே பலவீனமானதாக மாறியுள்ளது.

இதன் பின்னவரே அவர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு கடுமையான சோடியம் குறைபாடு ஏற்பட்டதை கண்டுபிடித்தனர். ஒரு நாளைக்கு நான்கு லிட்டர் குடித்ததால் அவருக்கு கடுமையான சோடியம் குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு நாம் உரிய சிகிச்சை எடுக்கவில்லை என்றால் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும்.

இதையடுத்து மிச்செல் ஃபேர்பர்ன் உடனடியாக அருகில் இருந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே அவருக்கு அரை லிட்டருக்கு மேல் தண்ணீரை குடிக்கவே கூடாது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். அது சரி வாட்டர் பாய்சனிங் என்றால் என்ன. தண்ணீர் குடிப்பதே எப்படி ஆபத்தாக மாறும். எந்தளவு தண்ணீர் குடிப்பது ஆபத்தானது என்பதை நாம் பார்க்காலம்.

வாட்டர் பாய்சனிங்: உடல் சரியாக செயல்பட தண்ணீர் தேவை தான். அதேநேரம் குறுகிய காலத்தில் அதிகளவில் தண்ணீர் குடிப்பதும் கூட நமது உடலுக்கு மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.. ஏனென்றால் நமது சிறுநீரகங்களால் ஒரு மணி நேரத்திற்கு 0.8 முதல் 1.0 லிட்டர் தண்ணீரை மட்டுமே அகற்ற முடியும். எனவே குறுகிய நேரத்தில் அதிகளவு நீரை குடிப்பதால் சிக்கலாக மாறும். மேலும், அதிக நீர் என்பது நமது உடலின் எலக்ட்ரோலைட் சமநிலையை பாதிக்கும்.

இது நமது உடலில் ரத்தத்தில் இருக்கும் நீரின் அளவை அதிகரிக்கிறது. இதனால் ரத்தத்தில் உள்ள எலக்ட்ரோலைட்டுகளை, குறிப்பாக சோடியம் நீரத்த்து போகிறது. சோடியம் அளவு லிட்டருக்கு 135 மி கீழே (mmol/l) குறைந்தால், வாட்டர் பாய்சனிங் ஏற்படும். இதை ஹைபோநெட்ரீமியா என்று குறிப்பிடுகின்றனர். இவை செல்களுக்குள் நுழைந்து அதை வீக்கமடைய செய்கிறது.

தலைவலி, குமட்டல், வாந்தி, ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகள். மேலும், மயக்கம், தசைப்பிடிப்பு, உயர் ரத்த அழுத்தம், தலை சுற்றல், சுவாசிப்பதில் சிரமம் ஆகியவையும் ஏற்படும். இதற்கு நாம் உரிய நேரத்தில் சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் விட்டால் உயிரிழப்பும் கூட ஏற்படும் ஆபத்து இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+