கற்பூரவள்ளி.. வாழைப்பழத்தை சின்ன குழந்தைகளுக்கு தரலாமா.. எப்போது தரலாம்? அப்ப ரஸ்தாளி? இதை கவனியுங்க
சென்னை: வாழைப்பழத்தில் நல்ல நல்ல சத்துக்கள் இருக்கின்றன. இது குழந்தைகளுக்கும் நல்லது என்பதால், மருத்துவர்களின் முறையான ஆலோசனையை பெற்று குழந்தைகளுக்கு தாராளமாக தரலாம்.
வாழைப்பழத்தில் பொட்டாசியம், வைட்டமின் A, வைட்டமின் B6, C, நார்ச்சத்துக்கள், மக்னீசியம், போன்றவை அடங்கி உள்ளன.. ஒரு பழுத்த வாழைப்பழத்தில், மனித சக்திவாய்ந்த எலும்புகளையும் தசைகளையும் உற்பத்தி செய்ய, ஒரு நாளைக்குத் தேவைப்படும் பொட்டாசியத்தின் அளவில் 11 சதவிகிதம் உள்ளதாம். அந்தவகையில், ஒரு சாதாரண சைஸ் வாழைப்பழத்தில் 105 கலோரிகள் உள்ளன.

நன்மைகள்: வாழைப்பழத்தை நாம் சாப்பிடுவதால், ரத்த சர்க்கரை அளவை பராமரிக்கப்படுகிறது.. இதய ஆரோக்கியத்தை காக்கிறது.. செரிமானத்திற்கு அடித்தளமாக உதவுகிறது. சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது...
அதுமட்டுமல்ல, அனீமியா தொந்தரவு உள்ளவர்களுக்கு, ரத்த சோகையை எதிர்த்துப் போராட உதவுகிறது. ஆற்றலை அதிகரிக்க செய்து, மூளையையும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகின்றது.
அதனால்தான், வளரும் பிள்ளைகளுக்கு வாழைப்பழத்தை கட்டாயம் தர சொல்கிறார்கள். அந்தவகையில், கைக்குழந்தைகளுக்கு இந்த வாழைப்பழத்தை தரலாமா என்ற சந்தேகமும் பலருக்கு உள்ளது.
வாழைப்பழம்: குழந்தைகளுக்கு 6 மாதம் தொடங்கியவுடனேயே வாழைப்பழத்தை தரலாம் என்கிறார்கள்.. அதேபோல, ஒரு கரண்டியால் பழத்தை கட்டியில்லாமல் நன்றாக மசித்துவிட்டு, சிறிது பால் கலந்து கொடுக்கலாம். அல்லது ஆவியில் வேகவைத்து மசித்து கொடுக்க வேண்டுமாம்.. 8 மாதம் தொடங்கிவிட்டால் குழந்தைகளுக்கு சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி, சாப்பிட பழக்கலாம்.
ஆனால், முதலில் கொடுக்கும்போது 4 நாட்களுக்கு தொடர்ந்து கொடுக்க வேண்டும்.. அப்போது தான் அதனால் எதுவும் தொந்தரவுகள் வருகிறதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.. அதற்கு பிறகே உணவுகளை பழக்கப்படுத்தலாம்.
பழம்: சளி பிடித்திருக்கும் நேரத்திலும் வாழைப்பழத்தை சாப்பிட கொடுக்கலாம்.. காரணம், இந்த பழத்தில் வைட்டமின் C உள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.. ஆனால், அளவாக தரவேண்டும்.. முக்கியமாக இரவில் வாழைப்பழம் குழந்தைகளுக்கு தரக்கூடாது.
எல்லா வகை வாழைப்பழங்களை போலவே ரஸ்தாளியையும் தரலாம்.. கைக்குழந்தைகளைவிட, வளரும் குழந்தைகளுக்கு இந்த பழம் கட்டாயம் தர வேண்டும். ரஸ்தாளிபழம் சாப்பிட்டவுடன் வயிறு நிரம்பியது போன்ற உணர்வை தரும் என்றாலும், சாப்பாடு சாப்பிட்டதுமே இதை சாப்பிடக்கூடாதாம்..
ரஸ்தாளி: காரணம், மந்த தன்மையை தந்துவிடுமாம்.. எனவே, வளரும் குழந்தைகளுக்கு அரை ரஸ்தாளியை தேனில் கலந்து கொடுத்துவந்தால், குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது என்கிறார்கள்.
வாழைப்பழம் என்றில்லை, எந்த உணவையும் முதன்முதலாக கொடுப்பதாயினும், 4 நாட்கள் கழித்துதான் வேறு ஒரு புதிய உணவைக் கொடுக்க வேன்டும். அந்த 4 நாட்களில் குழந்தைக்கு அந்த உணவு ஒத்துக்கொண்டதா, இல்லையா என்பது தெரிய வரும்.. சில குழந்தைகளுக்கு எது சாப்பிட்டாலும் வயிறு இறுகி மலச்சிக்கல் ஆகி விடும். அப்படியிருந்தால், காலையிலேயே இதுபோன்ற உணவுகளை சிறிது சிறிதாக கொடுத்து பழக வேண்டும்.












Click it and Unblock the Notifications