கோழி முட்டை Vs காடை முட்டை! இரண்டில் எது பெஸ்ட்? கோலி சைஸில் இருக்கும் காடை முட்டையில் என்ன ஸ்பெஷல்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: முட்டையில் அதிக புரதச் சத்து இருப்பதால் அதை குழந்தைகள், பெரியவர்கள், கர்ப்பிணிகள் என அனைத்து தரப்பினரும் சாப்பிடுகிறார்கள். அந்த வகையில் கோழி முட்டையில் சத்து இருக்கிறதா, இல்லை காடை முட்டையில் சத்துக்கள் நிறைந்திருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து உங்கள் உலகம், உங்கள் செய்திகள் எனும் பதிவில் கூறியிருப்பதாவது: கோழி முட்டையை விடவும் அதிகளவு சத்துக்கள் நிறைந்த காடை முட்டை என்பது உங்களுக்கு தெரியுமா. இந்த காடை முட்டையில் என்னென்ன சத்துகள் இருக்கின்றன என்பதை பார்க்கலாம்.

health kadai egg

உடல் ஆரோக்கியத்திற்கு சத்தான உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம்.
வீட்டில் செய்யப்படும் உணவுகளுக்கு மதிப்பு கொடுத்தாலே நமக்கு ஆரோக்கியமான உணவு கிடைத்துவிடும் என்று சொல்லலாம்.
அந்த வரிசையில் முட்டை மனிதனுக்கு மிகுந்த ஆரோக்கிய நன்மைகளை வழங்குவதாக கூறப்படுகிறது.

முட்டையை விட 6 மடங்கு சத்து அதிகம் கொண்ட உணவாக காடை முட்டை அறியப்படுகிறது. வைட்டமின், புரதம், உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் அடங்கிய கோழி முட்டையை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு ஆரோக்கியமானது.

முட்டையின் வெள்ளைக்கருவில் உள்ள புரதச்சத்துக்கள் நமக்கு உடனடியாக பலன் கொடுக்கும். வளரும் குழந்தைகள், காலையில் பள்ளிக்கு செல்லும்போது, வாரத்தில் 3 அல்லது 4 நாட்கள் காலை உணவாக முட்டை கொடுக்க வேண்டும்.

அதே சமயம் பச்சை முட்டை குடிப்பது ஆரோக்கியத்திற்கு உகந்தது அல்ல. சில நோய் கிருமிகள், முட்டையில் இருந்தால், அதனை பச்சையாக குடிக்கும்போது நமது உடலுக்கு அந்த கிருமிகள் செல்லும் அபாயம் உள்ளது. அதனால் முட்டையை வேக வைத்தோ அல்லது ஆம்லேட் மாதிரி செய்தோ சாப்பிடுவது தான் சரியாக இருக்கும்.

வேக வைத்த முட்டையில் வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் உடனடியாக கிடைக்கும் திறன் உள்ளது. அதனால் முட்டையை வேக வைத்து சாப்பிடுவது தான் உடலுக்கு பெரிய ஆரோக்கிய நன்மையாக இருக்கும்.
முட்டையின் மஞ்சள் கருவில், கொழுப்பு அதிகமாக இருக்கிறது என்று சொல்வார்கள். ஆனால் அதில் உடலுக்கு தேவையான கொழுப்புகள் தான் இருக்கிறது.

முட்டையை வேகவைத்து சாப்பிடும்போது, அதில் நல்ல கொழுப்பு சதவீதம் அதிகமாகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதேபோல் முட்டையில் இரும்புச்சத்தும் அதிகம் உள்ளது. ஆனால் கோழி முட்டையை விட காடை முட்டையில் 6 மடங்கு சத்து அதிகம் உள்ளது.

காடை முட்டைகள் சிறிய அளவில் இருந்தாலும், அவை ஊட்டச்சத்துக்களைப் பெருமளவில் வழங்குகின்றன. மூன்று முதல் நான்கு முட்டைகளை சாப்பிடுவது ஒரு கோழி முட்டையில் நீங்கள் காணும் அதே அளவு புரதத்திற்கு சமம்.

இந்தியாவில் பிரபலம் இல்லை என்றாலும், வெளிநாடுகளில் காடை மற்றும் அதன் முட்டை மிகவும் பிரபலம். கோழி முட்டையை விடவும் காடை முட்டை அதிகளவு சத்துக்கள் நிறைந்ததாக கருதப்படுகிறது. இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கோழி வந்ததா, முதலில் முட்டை வந்ததா.. என கேட்ட காலம் போய் தற்போது கோழி முட்டையா, காடை முட்டையா என கேட்கும் நிலை வந்துவிட்டது. எது எப்படியிருந்தாலும் முட்டை என்பது புரதம்தான். அதை எடுத்துக் கொள்ளும் அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதானே!

பொறுப்பு துறப்பு: எந்த ஒரு உணவு பொருளையும் உள்ளுக்குள்ளோ மேல் பூச்சாகவோ சுயமாக எடுத்துக் கொள்வதற்கு முன்னர் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+