ஃபிரிட்ஜில் மாங்காய் வைக்கறீங்களா? ஃப்ரிட்ஜில் தேங்காய் வைக்கலாமா? இது தெரியாம போச்சே.. பெஸ்ட் டிப்ஸ்
சென்னை: பிரிட்ஜில் என்னென்ன பொருட்களை வைக்க வேண்டும், எதை தவிர்க்க வேண்டும் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அந்தவகையில், தேங்காய், மாங்காய் இந்த 2 பொருட்களை வைக்கலாமா?
தேங்காயை பொறுத்தவரை, பழைய தேங்காய், புதிய தேங்காய் என்று 2 வகைகள் உள்ளன.. அடர்ந்த நிறமாக தேங்காய் இருந்தால் பழைய காய் என்பார்கள்.. சற்று வெளிர் நிறத்தில் இருந்தால், அதை புதிய காய் என்பார்கள்.

பழைய காய்கள்: இந்த பழைய காய்தான் சமையலுக்கு உகந்தது.. ருசி அதிகம்.. சீக்கிரம் கெட்டுப்போகாது... அதனால், எப்போதுமே பழைய தேங்காய்களை வாங்கி, அதன் பட்டைகள் உரிக்கப்பட்டு, அதேன் குடுமி பக்கம் மேலே இருக்குமாறு தரையில் படுமாறு வைக்க வேண்டும். அடிக்கடி நகர்த்தக்கூடாது. இப்படி அசையாமல் வைத்துவிட்டால், 6 மாதங்கள் ஆனாலும், தேங்காய் கெட்டுப்போகாது என்பார்கள்.
பிரிட்ஜ்ஜில் தேங்காயை வைக்க வேண்டுமானால், தேங்காயை துருவிக்கொண்டு, காற்று புகாத டப்பாவில் ப்ரீசரில் வைத்து பயன்படுத்தலாம்.. ஒருவேளை தேங்காய் துண்டுகளாக இருந்தால், ஒரு சில்வர் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் துண்டுகளை போட்டு, பிரிட்ஜில் வைத்தால் கெட்டுப் போகாமல் இருக்கும். ஆனால், இதை ப்ரீசரில் வைக்கக்கூடாது.
தேங்காய்கள்: அல்லது தேங்காய்களை துருவிக்கொண்டு, தண்ணீர் ஊற்றி கெட்டியாக அரைத்து கொள்ள வேண்டும். ஐஸ் க்யூப் வைக்கும் ட்ரேயில் அரைத்த தேங்காயினை ஊற்றி, ப்ரீஸரில் வைத்துவிட்டால் போதும். தேவைப்படும்போது பயன்படுத்தி கொள்ளலாம்.
மாம்பழ சீசன் தற்போது துவங்க உள்ளதால், மாம்பழங்களை பிரிட்ஜில் வைக்கலாமா? என்ற சந்தேகம் உள்ளது.. எப்போதுமே மாம்பழங்களை பிரிட்ஜில் வைக்க கூடாதாம்.. காரணம், இதிலுள்ள ஊட்டச்சத்து குறைந்துவிடுமாம்.. பழுக்காத பச்சை மாம்பழங்கள் இருந்தாலும், அவைகளையும் பிரிட்ஜில் வைக்க வேண்டாம்.. அப்படி வைத்தால், மாம்பழங்கள் சரியாக பழுக்காமல் போய்விடுமாம்.. அதன் சுவையும் குறைந்துவிடுமாம்.
மாம்பழங்கள்: எனவே, மாம்பழங்களை, சாதாரண அறைகளில் வைத்தாலே பழுத்துவிடும்.. ஒருவேளை, மாம்பழங்கள் சீக்கிரமாகவே பழுக்க வேண்டுமானால், ஒரு பேப்பரில் வைத்தால் போதும், விரைவில் பழுத்துவிடும்.
முழுமையாக மாம்பழம் பழுத்தால், 5 நாள்வரை பிரிட்ஜில் வைக்கலாம்.. அல்லது பழுத்த மாம்பழங்களை ஜில்லென்று சாப்பிட ஆசைப்பட்டால், அப்போது பிரிட்ஜில் வைக்கலாம்..
அதேபோல, தர்பூசணியை, வெட்டாமல் பிரிட்ஜில் வைக்கக்கூடாது. அப்படி வெட்டாமல் வைத்தால், அது பழத்தின் சுவையையும் அதன் நிறத்தையும் மாற்றிவிடுமாம்.. தர்பூசணி பழத்தை எப்போதுமே பிரிட்ஜில் வைத்திருந்தால், அதன் உள்ளே பாக்டீரியா வளர்ச்சி பெற்றுவிடுமாம்.
சத்துக்கள்: அதேபோல, முழுதாக வாங்கி வந்த முலாம்பழத்தையும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அப்படி வைத்தால், முலாம்பழத்தில் இருக்கும் சில சத்துக்களை பழம்இழந்து விடுகிறது. வேண்டுமானால், நறுக்கிய முலாம்பழத்தை ஒரு பாலித்தீன் பையிலோ போட்டு பிரிட்ஜில் வைக்கலாம். இதேப்போலவே, அன்னாசி, பிளம் பழங்களையும் பிரிட்ஜில் வைக்கக்கூடாது.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications