யாருக்கெல்லாம் ரத்த தானம் வழங்கக்கூடாது தெரியுமா? சர்க்கரை நோயாளி இரத்த தானம் செய்யலாமா? இது மேஜர்
சென்னை: ரத்த தானம் செய்வதின் நன்மைகள் என்னென்ன? யாரெல்லாம் ரத்த தானம் செய்யலாம்? யார் யாரெல்லாம் ரத்த தானம் செய்யக்கூடாது? சர்க்கரை நோயாளிகள் ரத்த தானம் வழங்கலாமா? இதுகுறித்து ஆய்வுகள் சொல்வதென்ன? சுருக்கமாக பார்ப்போம்.
நம்முடைய உடம்பு எந்தவிதமான நோயுமின்றி, ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், அதற்கு ரத்தம் தேவைப்படுகிறது.. ஒவ்வொரு நபருக்கும் 6 லிட்டர் ரத்தம் தேவை. ஆனால், எதிர்பாராத விபத்து நடந்து விட்டாலோ அல்லது ஆபரேஷன் செய்யும்போதோ, பிரசவத்தின்போதோ ரத்த இழப்புகள் ஏற்படும்போது உடலில் உள்ள ரத்தம் குறைகிறது. இதனால் உயிரிழப்புகளும் ஏற்படலாம்.

இந்த அபாயத்தை தவிர்க்கவே, ஆஸ்திரிய உயிரியலாளர் கார்ல் லேண்ட்ஸ்டெய்னர், மனிதர்களின் ரத்தத்தை A, B, AB, O போன்ற பிரிவுகளில் வகைப்படுத்தி, ஒரே ரத்த பிரிவை சேர்ந்தவர்கள் இடையே ரத்த மாற்று சிகிச்சை முறைக்கு வழிவகுத்தார்.
அதேபோல, யார் யாரெல்லாம் ரத்த தானம் செய்யலாம்? உலக சுகாதார நிறுவனமும், தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பும் ரத்த தானம் செய்பவர்களுக்கான நிபந்தனைகளை வழங்கியுள்ளது.
யாரெல்லாம் ரத்த தானம் செய்யலாம்?
- இந்தியாவில் ஒருவர் ரத்த தானம் செய்ய அவர் 18 முதல் 65 வயதிற்குள் இருக்க வேண்டும்.
- ஆண்கள் 3 மாதத்திற்கு ஒருமுறையும், பெண்கள் 4 மாதத்திற்கு ஒருமுறையும் ரத்த தானம் செய்யலாம்.
- உடல் எடை 50 கிலோவிற்கு மேல் இருக்க வேண்டும்.
-
ரத்த தானம் செய்யும் போது ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, ஹீமோகுளோபின் அளவு, உடலின் வெப்பநிலை, நாடித்துடிப்பு சீராக இருக்க வேண்டும்.
- சளி, காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் குணமடைந்து 48 மணி நேரத்திற்குப் பிறகு ரத்த தானம் செய்யலாம்.
யாரெல்லாம் ரத்த தானம் செய்யக்கூடாது?
- எய்ட்ஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள், புற்றுநோய் பாதிப்பு உள்ளவர்கள், இதய நோய் மற்றும் ஹெபடைடிஸ் பி அல்லது சி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இரத்த தானம் செய்யக்கூடாது. அதேபோல, காலரா, டைபாய்டு, பிளேக் ஆகிய நோய்களுக்கு தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் 15 நாட்களுக்கு ரத்த தானம் செய்யக்கூடாது.
ரேபிஸ் நோய் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் ஒரு வருடத்திற்கு ரத்த தானம் செய்யக் கூடாது. பல் மருத்துவ சிகிச்சை எடுத்து கொண்டவர்கள் 24 மணி நேரத்திற்கு ரத்த தானம் செய்யக் கூடாது. ஹீமோகுளோபின் அளவும் 12.5 dL க்கு குறைவாக இருப்பவர்கள், 45 கிலோவிற்கு குறைவாக உடல் எடையைக் கொண்டவர்கள் ரத்த தானம் செய்யக்கூடாது. கர்ப்பிணிகளும், பாலூட்டும் தாய்மார்களும் ரத்த தானம் செய்யக்கூடாது. அதேபோல, பச்சை குத்தியவர்கள் அடுத்த 6 மாதங்களுக்கு ரத்த தானம் செய்யக் கூடாது.
ஊசி மூலமாக போதை மருந்து பயன்படுத்தும் நபர்கள் ரத்த தானம் செய்தால் அது மூலமாக தொற்றுகள் பரவுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் அவர்களும் ரத்ததானம் செய்வதிலிருந்து விலக்கி வைக்கப்படுகிறார்கள்.
சர்க்கரை நோயாளிகள் ரத்த தானம் செய்யலாமா?
ரத்த சர்க்கரை அளவு சாதாரண வரம்பிற்குள் இருந்து, உடல் ஆரோக்கியத்துடன் இருப்பவர்கள் ரத்த தானம் செய்யலாம். நீரிழிவு நோயாளிகள் ரத்ததானம் செய்வது மூலம் மற்றவர்களுக்கு இந்த நோய் பரவாது. மேலும் நீரிழிவு நோயாளிகள் 56 நாட்களுக்கு ஒருமுறை ரத்ததானமும் 7 நாட்களுக்கு ஒரு முறை பிளேட்ளட் தானமும் செய்யலாம். நீரிழிவு நோயாளிகள் ரத்த தானம் செய்யலாம் என்றாலும், மேற்குறிப்பிட்ட காரணிகளை கருத்தில் கொள்வது மிகவும் முக்கியமாகும்.
நன்மைகள்: ரத்த தானம் செய்வதால் இதய நோய் மற்றும் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறைகிறது. உடலில் புதிய ரத்த செல்கள் உருவாவதை தூண்ட செய்கிறது.. ரத்த தானம் உடல் எடையை குறைக்க உதவுகிறது... சரியான இடைவெளியில் ரத்த தானம் செய்வதால், உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கவும் முடியும்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications