ஆண்களிடையே "வழுக்கை தலை" ஏன் ஏற்படுகிறது! முடி கொட்டுவதை தடுக்க முடியுமா! ட்ரீட்மெண்ட்கள் என்ன?
சென்னை: இந்த காலத்தில் சின்ன வயதிலேயே வழுக்கை ஏற்படுகிறது.. திருமணம் வரை முடியைக் காப்பாற்றிவிட்டால் போதும் என்று கூட பலரும் சொல்லிக் கேட்டிருப்போம். இதற்காகச் சிலர் அதிக தொகை கொடுத்து சிகிச்சையும் கூட எடுப்பார்கள். ஆனால், அது பெரியளவில் பலன் தராது. உண்மையில் இது வழுக்கைத் தலை ஏன் ஏற்படுகிறது.. சிகிச்சை மூலம் முடி கொட்டுவதை எப்படி நிறுத்த முடியும் என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
நமது தலையில் முடி உதிர்ந்து மீண்டும் வளர்வது இயற்கையாக நடக்கும் பிராசஸ்.. அப்படி முடி விழும் இடத்தில் மீண்டும் முடி வளராமல் போகும் போது தான் வழுக்கை ஏற்படுகிறது.

வழுக்கை தலை ஏன் ஏற்படுகிறது?
ஆண்களுக்கு பெரும்பாலும் ஆண்ட்ரோஜெனெடிக் அலோபீசியா (androgenetic alopecia) எனப்படும் பரம்பரை நிலை காரணமாக வழுக்கை தலை ஏற்படுகிறது. அதாவது உங்கள் தந்தை அல்லது தாத்தா என யாருக்காவது வழுக்கைத் தலை இருந்தால் அது உங்களுக்கும் ஏற்படுகிறது. ஆண்களிடையே சுமார் 95% வழுக்கை தலை ஏற்பட இந்த ஆண்ட்ரோஜெனெடிக் அலோபீசியா தான் காரணம் என்று அமெரிக்கன் ஹேர் லாஸ் அசோசியேஷன் கூறுகிறது.
முடியின் ஆயுட்காலம் குறையும்
ஆண்ட்ரோஜெனெடிக் அலோபீசியா காரணமாக ஆண்களுக்கு முடி வளர்வது மெதுவாக மாறுகிறது. மேலும், முடியின் அடர்த்தியும் குறைந்து போகிறது. இது டைஹைட்ரோ டெஸ்டோஸ்டிரோன் எனப்படும் மரபணு காரணமாக ஏற்படுகிறது. பொதுவாக நமது தலையில் முடி கொட்டும்.. பிறகு அதுவே முளைக்கும். ஆனால், டைஹைட்ரோ டெஸ்டோஸ்டிரோன் (டிஹெச்டி) காரணமாகப் பாதிக்கப்பட்ட முடியின் கால்கள் சிறியதாக இருப்பதால், முடியின் ஆயுட்காலமும் குறைகிறது. ஒரு கட்டத்தில் முடி வளர்ச்சி என்பதே குறிப்பிட்ட பகுதியில் இல்லாமல் போகும். இதுவே வழுக்கை தலை ஏற்படக் காரணமாக இருக்கிறது.
தலையின் உச்சியில் முடி விழுக ஆரம்பித்து, அப்படியே மெல்லப் பரவுவது ஒரு வகை.. அதேபோல தலையின் முன்பகுதியில் முடி கொட்டி, அது மெல்லப் பரவுவது இரண்டாம் வகை. இரண்டிற்கும் இந்த டிஹெச்டி நிலையே காரணம். அதாவது சொட்டை மற்றும் வழுக்கை என இரண்டிற்கும் இந்த டிஹெச்டி தான் காரணம். ஒருவருக்கு எந்தளவுக்கு முடி கொட்டுகிறது என்பது Norwood classification system என்ற முறை மூலம் மதிப்பிடப்படுகிறது.
எல்லாருக்கும் இந்த பிரச்சினை இருக்கு
அடுத்து முக்கியமானது ஒருவருக்கு எப்போது முதல் முடி கொட்ட ஆரம்பிக்கும். சுமார் 25% பேருக்கு 21 வயதிலேயே முடி கொட்டும் பிரச்சினை தொடங்கிவிடுவதாக அமெரிக்கன் ஹேர் லாஸ் அசோசியேஷன் கூறுகிறது. 35 வயதில் 66% பேரும் இந்த சொட்டை அல்லது வழுக்கை பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள். இது தவிர ஊட்டச்சத்துக் குறைபாடு, அதீத மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களாலும் முடி கொட்டும் என்றாலும் சொட்டை அல்லது வழுக்கை ஏற்பட ஆண்ட்ரோஜெனெடிக் அலோபீசியா தான் காரணமாக இருக்கிறது.
சரி, விஷயத்திற்கு வருவோம்.. இதைத் தடுக்க முடியுமா.. ஆண்களுக்கு வழுக்கை என்பது பரம்பரை நிலை காரணமாக ஏற்படுகிறது. எனவே, இதைத் தடுப்பது கடினம்.. அறுவை சிகிச்சை செய்து ஹேர் இம்பிளாண்ட் செய்வது மட்டுமே ஒரே தீர்வு. அதேநேரம் முடி உதிர்வதைக் குறைக்க அதாவது வழுக்கைத் தலை விழுவதைத் தாமதப்படுத்த சில விஷயங்கள் உள்ளன. அழை, தலைமுடி ஆரோக்கியமாக வைத்திருக்கவும் முடி உதிர்வதைத் தடுக்கவும் உதவும்
எப்படி குறைக்கலாம்?
தலைக்கு அவ்வப்போது மசாஜ் செய்யுங்கள்.. இது முடி வளர்ச்சியைத் தூண்ட உதவும். ஒருவேளை உங்களுக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால் அதை உடனடியாக நிறுத்துங்கள். முடி உதிர அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என சில ஆய்வுகள் கூறுகின்றன. எனவே, அதைத் தவிர்க்கவும். மேலும், உடற்பயிற்சி, தியானம் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்கவும்.. புரதம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவைச் சாப்பிட வேண்டும். இதன் மூலம் முடி கொட்டுவதை ஓரளவுக்குத் தடுக்க முடியும் என்று பிரபல மருத்துவ இதழான ஹெல்த் லைன் பரிந்துரைக்கிறது.
முடி கொட்டுவதும் வழுக்கைத் தலை ஏற்படுவதும் இயற்கையான பரம்பரை நிலை. உங்கள் மரபணு தான் அதற்கு முக்கிய காரணம். எனவே, நீங்கள் எவ்வளவு முயன்றாலும் ஓரளவுக்கு மட்டுமே அனைத்தும் கை கொடுக்கும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
இது சாதாரண செய்தி மட்டுமே.. இதை நிச்சயம் மருத்துவ ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக்கூடாது. உங்களுக்கு உடல்நிலை பிரச்சினை ஏற்பட்டால்.. உடனடியாக அருகே உள்ள மருத்துவரை அணுகவும்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications