குழந்தைகளுக்கு அதிகரிக்கும் பார்வை குறைபாடு! பெற்றோர் செய்யும் இந்த தவறே காரணம்! மருத்துவர் வார்னிங்
சென்னை: இந்தக் காலத்தில் பெரும்பாலானோர், குறிப்பாகக் குழந்தைகள், அதிகளவில் கண் கண்ணாடி அணிகிறார்கள். அதிலும் 6 வயதில் இருந்தே கூட கண்ணாடி போடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கிடையே இந்தச் சிக்கலுக்கு என்ன காரணம்.. இந்தக் காலத்தில் கண் பாதிப்பு அதிகரிப்பது ஏன்.. இந்தச் சிக்கலைத் தடுப்பது எப்படி! குழந்தைகளின் கண் பார்வையைப் பாதுகாப்பது குறித்து வல்லுநர்கள் அளிக்கும் விளக்கத்தை நாம் பார்க்கலாம்.
முன்பெல்லாம் அங்கு ஒன்றும் இங்கு ஒன்றுமாகவே கண் கண்ணாடி அணிவார்கள். நம்மை சுற்றி இருப்போரில் தேடினால் ஓரிருவர் மட்டுமே கண்ணாடி போடும் நிலை இருந்தது. ஆனால், இந்தக் காலத்தில் கண் பிரச்சினை காரணமாகக் கண்ணாடி போடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அதிகரிக்கும் கண் பாதிப்பு
குறிப்பாகக் கடந்த 10 ஆண்டுகளில் 6 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்குக் கிட்டப்பார்வை பாதிப்பு (அருகே இருக்கும் பொருட்கள் தெளிவாகத் தெரியும்.. தொலைவில் இருக்கும் பொருட்கள் தெளிவாகத் தெரியாது) அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
பள்ளிகளில் ஆறு வயதிலேயே பல குழந்தைகள் வகுப்பறையில் பிளாக் போர்ட்களில் ஆசிரியர்கள் எழுதுவதைப் பார்க்க முடியவில்லை.. அவை தெளிவாகத் தெரிவதில்லை எனச் சொல்ல ஆரம்பித்துள்ளனர். இந்தக் கண் பிரச்சினை சமீப ஆண்டுகளில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கான காரணம் குறித்து புனே மருத்துவர் டாக்டர் ஜெய் கல்கர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு விளக்கமளித்துள்ளார்.
இதுதான் காரணம்!
அதில் அவர், "சில வாழ்க்கை முறை பழக்கங்கள் கிட்டப்பார்வை பாதிப்பை அதிகரிக்கிறது.. குழந்தைகள் நீண்ட நேரம் ஸ்மார்ட்போன்கள் அல்லது டேப்லெட்களைப் பயன்படுத்துவது.. அல்லது சிறிய டிஜிட்டல் திரைகளில் நீண்ட நேரம் படிப்பது ஆபத்தை ஏற்படுத்துகிறது. உடலில் இயற்கையான சூரிய ஒளி படாமல் இருப்பதும் இந்த நிலைக்குக் காரணமாக இருக்கிறது. தினசரி குறைந்தது 45 நிமிடங்களாவது வெளியில் விளையாடுவது கிட்டப்பார்வை அதிகரிப்பதைக் குறைக்க உதவும் என்பதை ஆய்வுகள் காட்டுகின்றன" என்றார்.
அதேநேரம் கிட்டப்பார்வை இப்போது தான் மிக அதிகமாக அதிகரித்துவிட்டது என்றும் சொல்ல முடியாது. ஓரளவுக்கு அதிகரிப்பு உண்மை தான் என்றாலும் ஓவராக அதிகரிக்கவில்லை. முன்பு கிட்டப்பார்வை குறித்த விழிப்புணர்வு போதியளவுக்கு இருக்காது. இதனால் சீக்கிரம் டெஸ்ட் செய்ய மாட்டார்கள். ஆனால், இப்போது அப்படி இல்லை. விழிப்புணர்வு அதிகமாக இருப்பதால் தொடக்கத்திலேயே டெஸ்ட் செய்துவிடுகிறார்கள். கிட்டப்பார்வை ரொம்ப அதிகரித்துவிட்டதை போன்ற தோற்றத்தைக் கொடுக்க இதுவும் ஒரு பிரதானக் காரணம் என்கிறார்கள்.
முன்கூட்டியே கண்டறிவது நல்லது
ஆனால், இந்தப் பாதிப்பை எவ்வளவுக்கு எவ்வளவு முன்கூட்டியே கண்டுபிடிக்கிறோமோ.. அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது.. இளம் வயதிலேயே கிட்டப்பார்வை கண்டறியப்பட்டால், அதைத் திறம்பட நிர்வகிக்க முடியும். ஏற்கனவே குடும்பத்தில் யாராவது கண்ணாடி அணிந்து வருபவர்களாக இருந்தால் அங்குள்ள குழந்தைகள் வழக்கமான பரிசோதனைகளை அடிக்கடி செய்து கொள்ள வேண்டும்.
தொடக்கக் காலத்திலேயே சிகிச்சை அளிக்கவில்லை என்றால் அது பல்வேறு வகையான பார்வைக் குறைபாடுகளை ஏற்படுத்தும். சிக்கல்களை உருவாக்கும். இப்போது கிட்டப்பார்வையை நிர்வகிக்கவும் கட்டுப்படுத்தவும் கண்ணாடிகள் வந்துவிட்டன. இதன் மூலம் இந்தப் பாதிப்பைத் திறம்பட நிர்வகிக்க முடியும்.
பெற்றோர் செய்ய வேண்டியது
பெற்றோர்களுக்கும் இதில் முக்கிய பங்கு இருக்கிறது. சிறிய வாழ்க்கை முறை மாற்றங்களும் கூட குழந்தைகளின் பார்வையைப் பாதுகாப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கும்.. குழந்தைகள் ஸ்க்ரீன்களை பார்க்கும் நேரத்தைக் கட்டுப்படுத்துங்கள்.. ஸ்மார்ட்போன்களுக்கு பதிலாக டெஸ்க்டாப் அல்லது டிவிகளில் வீடியோ பார்க்க வைக்கலாம். இதன் மூலம் கண்ணில் ஏற்படும் அழுத்தம் குறையும். சீரான உடற்பயிற்சி மற்றும் வழக்கமான கண் பரிசோதனைகளும் கண் ஆரோக்கியத்தை உறுதி செய்யும் என்கிறார்கள் மருத்துவர்கள்!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications