50 வயதில் கல்யாணம்.. சென்னை 28 பட நடிகர் அரவிந்த் ஆகாஷின் புதிய வாழ்க்கை.. மணப்பெண் யார் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளிதிரையில் அடி எடுத்து வைத்து பிரபலமான நடிகர் அரவிந்த் ஆகாஷ் 50 வயதில் திருமணம் செய்ய இருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அவருடைய திருமணம் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் எங்கேஜ்மென்ட் பிரம்மாண்டமாக நடந்திருக்கிறது. அந்த புகைப்படங்கள் ஸ்பெஷல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

பஞ்சாபில் பிறந்த அரவிந்த் ஆகாஷ் சினிமா மீது இருந்த ஆசையால் சென்னைக்கு வந்தார். ஆரம்பத்தில் வாய்ப்புக்காக பல ஆண்டுகள் போராடிய அவர் ரஜினிகாந்த் நடித்த படையப்பா படத்தில் சின்ன கேரக்டரில் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். அதற்கு பிறகு ஹேராம், உயிரிலே கலந்து போன்ற படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து வந்தார். ஆனாலும் ஆரம்பத்தில் அவருக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

Aravind Akash Wedding Chennai 600028 Venkat Prabhu Premgi Vaibhav

ஆரம்ப காலம்

அதே சமயத்தில் சீரியல்களிலும் நடித்துக் கொண்டிருந்தார். அதிலும் கிருஷ்ண தாசி சீரியல் இவருக்கு பெயர் வாங்கி கொடுத்தது. அதுபோல மலையாளத்தில் வெளியான நந்தனம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான அவர் தமிழில் சத்யராஜின் சேனா படத்தில் நடித்தார். ஆனால் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் தனி அடையாளத்தை கொடுத்தது படம் என்றால் அது வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 600028 தான்.

பாக்யராஜ் இறப்புக்கு பிறகு அவர் பெயரில் வெளியான அறிக்கை.. பின்னணியில் இந்த நடிகர் தானா? ரசிகர்கள் கேள்வி இதுதான்
அந்த படத்தில் அவரது இயல்பான நடிப்பு நண்பர்கள் கூட்டத்தில் ஒருவராக கலக்கிய விதமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதற்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்திலேயே வெளியான எல்லா படங்களிலும் தலையை காட்ட தொடங்கிவிட்டார். அதிலும் சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாஸ் என்கிற மாசிலாமணி, சென்னை 600028 பாகம் 2, மாநாடு என பல படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.

Aravind Akash Wedding Chennai 600028 Venkat Prabhu Premgi Vaibhav

நடிகர் அரவிந்த் ஆகாஷ் எங்கேஜ்மென்ட்

என்ன தான் இவர் இத்தனை வருடங்களாக சினிமாவில் இருந்தும் தனி ஹீரோவாக பெரிய வெற்றி கிடைக்கவில்லை. இருந்தாலும் அதையும் தனக்கு குறையாக எடுத்துக் கொள்ளாமல் தொடர்ந்து தனது பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார். அவரிடம் அவ்வபோது ரசிகர்களும் எப்ப கல்யாணம் என்று கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால் அதைப் பற்றி பெரிதாக பேசாமல் இருந்து அரவிந்த் ஆகாஷ் தற்போது மலேசியாவின் கோலாப்பூரில் பிரம்மாண்டமாக எங்கேஜ்மென்ட் செய்து இருக்கிறார்.

Aravind Akash Wedding Chennai 600028 Venkat Prabhu Premgi Vaibhav

வாழ்த்திய பிரபலங்கள்

இந்த ஃபங்ஷனில் வெங்கட் பிரபு, பிரேம்ஜி, வைபவ், விஜய் வசந்த் உள்ளிட்ட சென்னை 600028 நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதும் ரசிகர்கள், "சென்னை 28 கேங் மீண்டும் ஒன்றாக சேர்ந்துவிட்டதே", "லேட்டானாலும் லேட்டஸ்டாக கல்யாணம் பண்ணிட்டாரு", "50 வயதிலும் புதிய வாழ்க்கையை தொடங்கியதற்கு வாழ்த்துகள்" என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Aravind Akash Wedding Chennai 600028 Venkat Prabhu Premgi Vaibhav

தமிழ் சினிமாவில் 40, 50 வயதைக் கடந்த பிறகும் திருமணம் செய்து கொண்ட நடிகர்கள் பட்டியலில் தற்போது அரவிந்த் ஆகாஷும் இணைந்துள்ளார். சமீப காலமாக தாமதமாக திருமணம் செய்து கொண்டு புதிய வாழ்க்கையை தொடங்கும் பிரபலங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அரவிந்த் ஆகாஷின் திருமணமும் அதேபோல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+