நான் ஸ்டிக் பாத்திரங்களை எத்தனை டிகிரியில் ஹீட் செய்யக் கூடாது? மாற்று என்ன? நிபுணர்கள் விளக்கம்
சென்னை: நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்களை பயன்படுத்துவது என்பது உடல்நலனுக்கு நன்மையா தீமையா என்பதை பார்ப்போம்.
எண்ணெய் இல்லாமல் தோசை சுடணுமா, ஆம்லெட் போடணுமா... இதோ வந்துவிட்டது நான்-ஸ்டிக் பாத்திரங்கள் என விளம்பரம் செய்யப்படுகின்றன. இந்த பாத்திரங்களை கொண்டு சமைத்தால் தோசை தவாவில் ஒட்டாமல் வரும், எண்ணெய் இல்லாமல் தோசை, அடை, ஆப்பம், குழிபணியாரம் ஆகியவற்றை தயாரிக்கலாம்.

அது போல் நான் ஸ்டிக் வாணலியின் மூலம் சமைப்பதால் உணவு எளிதில் அடிபிடிக்காமல் பதமாக வறுப்படுகிறது. இதனாலேயே மக்கள் இவற்றை விரும்புகிறார்கள். எத்தனை எளிதான பணிகளை இவை செய்கிறதோ அத்தனைக்கு அத்தனை இவற்றில் தீங்குகளும் உள்ளன.
குறைந்த ஆயிலை பயன்படுத்தலாம் என பார்த்தால் இந்த நான் ஸ்டிக்கால் குறைந்த ஆயுளே கிடைக்கும் என்கிறார்கள். நான் ஸ்டிக் பாத்திரங்களில் வழவழப்புத்தன்மைக்காக பாலிடெட்ராஃப்ளூரோ எத்திலின் எனும் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய கெமிக்கல் பயன்படுத்தப்படுகிறது. இதனால் 2013 ஆம் ஆண்டு முதல் இந்த கெமிக்கல் இல்லாமலேயே நான்ஸ்டிக் பாத்திரங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த பாத்திரங்களை அதிக வெப்பத்தில் சமைக்கக் கூடாது. மீடியம் தீயில் சமைக்க வேண்டும். வெறும் பாத்திரத்தை நீண்ட நேரம் தீயில் வைக்கக் கூடாது. இந்த பாத்திரங்களுக்கென பிளாஸ்டிக், சிலிக்கான் அல்லது மரக் கரண்டிகளையே பயன்படுத்த வேண்டும். ஸ்டீல் கரண்டிகளை பயன்படுத்தினால் கீறல்கள் விழும். இந்த பாத்திரங்களை கம்பி நாரினால் தேய்க்க கூடாது. மேலே உள்ள கோட்டிங் உறிந்து வருவது போல் அல்லது உடைவது போல் இருந்தால் உடனே அதற்கு பதிலாக வேறு பாத்திரத்தை மாற்றிவிட வேண்டும்.
தற்போது இந்த பாத்திரங்களில் டெஃப்லான் கோட்டிங் கொடுக்கப்படுகிறது. இந்த பாத்திரங்களை பயன்படுத்தும் போது தீயை அதிகமாக வைக்க வேண்டாம் என்கிறார்கள. அது போல் நான்,ஸ்டிக் பிரஷர் குக்கரை பயன்படுத்தும் போது கூட அதிக அளவில் தீயை வைக்கக் கூடாது. இந்த பாத்திரஙகளை நேரடியாக நீணட நேரம் அடுப்பில் வைக்கக் கூடாது.
பிரியாணி உள்ளிட்ட பொருட்களை சமைக்க 100 டிகிரி வெப்பம் தேவைப்படுகிறது. அது போல் சில உணவுகளை சமைக்க 300 டிகிரி வெப்பம் வேண்டும். அத்தகைய 300 டிகிரி வெப்பத்தில் இந்த நான்ஸ்டிக்கை கொண்டு உணவுகளை தயாரிக்கவே கூடாது. தோசை சுட 260 டிகிரி தேவைப்படுகிறது. பொதுவாக நான் ஸ்டிக் பாத்திரங்களை 10 ஆண்டுகள் வரை மட்டுமே வைத்திருக்க வேண்டும். ஆனால் சில நான் ஸ்டிக் பாத்திரங்கள் நமது பயன்பாட்டிற்கேற்ப குறுகிய காலங்களிலேயே வேறு புதிய பாத்திரங்களை வாங்கும் நிலைக்கு செல்ல நேரிடுகிறது. நான் ஸ்டிக் பாத்திரங்களுக்கு பதிலாக எண்ணெய் குறைவாக பயன்படுத்த வேண்டுமானால் இரும்பு பாத்திரங்கள், அலுமினிய பாத்திரங்கள் மண் பாத்திரங்களை மாற்றாக பயன்படுத்தலாம் என்கிறார்கள்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications