86 கிலோ எடையை குறைத்த பெண்.. அதுவும் சில மாதங்களில்.! இந்த 5 ரூல்ஸை பாலோ செய்தால் போதும்
சென்னை: ஊட்டச்சத்து வல்லுநரான பிரஞ்சல் என்ற பெண் முதலில் 150 கிலோ இருந்துள்ளார். இவ்வளவு எடை இருந்தால் ஆபத்து என்பதை உணர்ந்த அவர், தீவிர முயற்சியால் 86 கிலோ எடையைக் குறைத்துள்ளார். இந்த எடை குறைப்பு பயணத்தில் தான் அவர் 5 முக்கிய ரூல்ஸ்களை கற்றுக்கொண்டாராம். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்த காலத்தில் இந்தியாவில் பொதுமக்கள் பலரும் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சினையாக உடல் பருமன் இருக்கிறது. உடல் பருமனால் ஏகப்பட்ட உடல்நிலை சிக்கல்களும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

ஓவர் வெயிட் ஆபத்தை உணரும் பலரும் எடையைக் குறைக்க முயல்கிறார்கள். ஆனால், பலரால் அதை வெற்றிகரமாகச் செய்ய முடிவதில்லை. ஆனால், இங்கே பிரஞ்சல் பாண்டே என்ற நபர் சுமார் 86 கிலோ எடையைக் குறைத்துள்ளார்.
எடை குறைப்பு
ஊட்டச்சத்து வல்லுநராக இருந்தாலும் பிரஞ்சல் பாண்டே ஓவர் வெயிட் காரணமாக பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வந்தார். இந்த ஓவர் எடை என்பது தனக்குப் பிரச்சினை என்பதை உணர்ந்து கொண்ட அவர், தனது எடை குறைப்பு பயணத்தைத் தொடங்கினார். எடை குறைப்பு பயணம் என்பது அவருக்கு எளிதாக அமையவில்லை. ஆனாலும், அவர் தொடர்ந்து முயற்சி செய்தார்.
86 கிலோ எடையை குறைத்துள்ளார்
தீவிர முயற்சியின் பலனாக அவரால் 86 கிலோ எடையைக் குறைக்க முடிந்துள்ளது. தனது எடை குறைப்பு பயணத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். 2022ம் ஆண்டு 150 கிலோ எடை இருந்த அவர், தீவிர முயற்சியால் வெறும் 24 மாதங்களில் 86 கிலோ எடையைக் குறைத்துள்ளார். இந்த எடை குறைப்பு பயணத்தின் போது அவர் கற்றுக்கொண்ட ஐந்து விஷயங்கள் குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கியுள்ளார். அதில் அவர், "இந்த 5 விஷயங்கள் தான் முதலில் எடை குறைப்பு பயணத்தில் தடையாக இருந்தது. ஆனால், அதைச் சமாளித்துச் சரி செய்த பிறகு எடை குறைப்பு ஈஸியாக அமைந்தது.
5 ரூல்ஸ்
கலோரி தான் கிங்: நீங்கள் எடை இழக்கவில்லை என்றால், நீங்கள் கலோரியை அதிகம் எடுத்துக் கொள்கிறீர்கள் என்று அர்த்தம். நீங்கள் என்ன சொன்னாலும் சரி.. கலோரியை குறைத்தால் எடை குறைப்பு சாத்தியமாகும்.
ஓய்வு அவசியம்: தினமும் 7 முதல் 8 மணி நேரத் தூக்கம் அவசியமானது. நீங்கள் ஜிம்மில் எவ்வளவு கடுமையாக உடற்பயிற்சி செய்தாலும் சரியான ஓய்வும் ஊட்டச்சத்தும் அவசியமாகும். போதியளவு ஓய்வெடுக்கவில்லை என்றால் சோர்வு ஏற்பட்டு நோய்வாய்ப்படுவீர்கள்.

ஊட்டச்சத்து முக்கியம்: இயற்கையாகக் கிடைக்கும் புரதச் சத்துக்கும் மாத்திரைகளில் இருந்து கிடைக்கும் புரதச் சத்துக்கும் வேறுபாடு இருக்கிறது. இரண்டும் ஒன்று இல்லை. உணவுக்குப் பதிலாக மாத்திரைகள் மூலம் நீங்கள் ஊட்டச்சத்தைப் பெற்றால் அது உடலுக்குத் தீங்கு விளைவிக்கவே செய்யும்.
கடைசி இரண்டு என்ன
உத்வேகம் தேவை: ஆரம்பத்தில் ஒரு வேகத்தில் எடை இழப்பு பயணத்தைத் தொடங்கிவிட்டு, கொஞ்ச நாட்களில் அதை விடக்கூடாது. ஒழுக்கமாக நீண்ட காலம் இருந்தால் மட்டுமே பலன் கிடைக்கும். ஃபிட்டாக இருப்பது என்பது நீண்ட விளையாட்டு. தினசரி தொடர்ந்து முயன்றால் மட்டுமே வெற்றி கிடைக்கும்.
பொறுமை முக்கியம்: நீங்கள் எடை இழப்பு பயணத்தை ஆரம்பிக்கும் போது சிக்கல்களை எதிர்கொள்ளலாம். எல்லாம் திட்டமிட்டபடி நடக்காது. ஆனால், நீங்கள் மனதை விட்டுவிடக்கூடாது. குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் காண நேரம் எடுக்கும். ஆனால், அதுவரை முயற்சியைத் தொடர வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
இந்த ஐந்து விஷயங்கள் தான் எடை இழப்பில் முக்கிய ரூல்ஸாகும். இதை நாம் முறையாகப் பின்பற்றினாலே போதும் எடை இழப்பு சாத்தியம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
இது சாதாரண செய்தி மட்டுமே. இதை நிச்சயம் மருத்துவ ஆலோசனையாகக் கருதக்கூடாது. உடலுக்கு எதாவது பிரச்சினை ஏற்பாட்டால் உடனடியாக மருத்துவரை நாடுங்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications