"24 மணி நேரம் தான் உயிரோட இருப்பீங்க.." வயிற்று வலி சும்மா இல்லை.. பெண்ணுக்கு ஷாக் தந்த டாக்டர்
லண்டன்: சாதாரண வயிற்று வலி தானே என நினைத்து மருத்துவமனைக்குச் செல்வதைத் தவிர்த்த இளம்பெண்ணுக்கு மிக மோசமான உயிருக்கே ஆபத்தான ஒரு நோய்ப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பிரிட்டன் நாட்டை சேர்ந்த 33 வயதான விக்டோரியா டான்சன் என்பவர் அங்குள்ள லங்காஷயரில் உள்ள சோர்லியை என்ற இடத்தில் வசித்து வருகிறார். குழந்தைக்குத் தாயான அவருக்கு ஏற்பட்ட சிறு பாதிப்பு அவரது வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுவிட்டது.

நாம் நமது உடலுக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மருத்துவமனைக்குச் செல்லாமல் காலம் தாழ்த்தினால் எந்தளவுக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு இதுவே ஒரு சாட்சியாகும்.
வயிற்று வலி: பிரிட்டன் நாட்டை சேர்ந்த 33 வயதான இந்த விக்டோரியா டான்சனுக்கு சில காலத்திற்கு முன்பு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இருப்பினும், இதை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையாம்.. மன அழுத்தம் காரணமாக இந்த வயிற்று வலி ஏற்பட்டிருக்கலாம் என அவர் நினைத்துவிட்டார். இதனால் சில காலம் அவர் மருத்துவமனைக்குச் செல்லவில்லையாம். மன அழுத்தம் இல்லையென்றால் வயிற்று வலி சரியாகிவிடும் என்றே அவர் நினைத்துள்ளார்.
இருப்பினும், பல வாரங்களாக அவருக்கு வயிற்று வலி தொடர்ந்து இருந்து கொண்டே இருந்துள்ளது. ஒரு கட்டத்தில் வேறு வழியின்றி அவர் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கே அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு கிரோன் நோய், அழற்சி குடல் நோய் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இது மட்டுமின்றி வெறும் 24 மணிநேரம் மட்டுமே உயிர்வாழ முடியும் என்றும் கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.
மோசமான பாதிப்பு: இது அத்தனையும் சாதாரண வயிற்று வலியுடன் தொடங்கியுள்ளது. வயிற்று வலியும் சோர்வும் அவருக்கு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் வாரத்திற்கு 60 மணிநேரம் என்று இரண்டு வேலைகளைச் செய்வதால் இப்படி வயிற்று வலி ஏற்படுவதாக அவரே நினைத்துள்ளார். இதனால் முதலில் அதைப் பெரிதாக அவர் கண்டுகொள்ளவில்லை. இருப்பினும், வயிற்று வலி தொடர்ந்து அதிகரிக்கவே வேறு வழியின்றி அவர் மருத்துவ உதவிக்குச் சென்றுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், "நான் தினசரி இரண்டு வேலையைச் செய்ய வேண்டி இருந்தது. இதனால் எனது உடலில் என்ன நடக்கிறது என்பது கூட எனக்குத் தெரியாமல் இருந்தது. எனக்குக் கடுமையான வலி இருந்தது மட்டுமே எனக்குத் தெரிந்தது. அதைச் சரி செய்ய வேண்டும் என்பது மட்டுமே எனது மனதில் இருந்தது. இதன் காரணமாகவே மருத்துவமனைக்குச் சென்றேன்" என்றார்.
தொடர் சிகிச்சை: மருத்துவர்களும் கூட முதலில் இதைச் சாதாரண குடல் பாதிப்பு என்றே நினைத்துள்ளனர். ஓராண்டு மேலாக அவருக்கு வயிற்று வலி இருந்து கொண்டே இருந்துள்ளது. இதற்காக அவர் அவ்வப்போது மருத்துவமனைக்குச் சென்றாலும் பெரிதாக ஒன்றும் சரியாகவில்லை. தொடர்ந்து வலியைத் தாங்கிக் கொண்டே அன்றாட வேலையைச் செய்ய வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டார். பின்னர் அவருக்கு கொலோனோஸ்கோபி செய்யப்பட்டதில் அதில் அவருக்கு கிரோன் நோய் இருப்பது உறுதியானது.
கிரோன் நோய் என்பது நாள்பட்ட அழற்சி குடல் நோயாகும். இது இரைப்பைக் குழாயைப் பாதிக்கிறது.. இது கடுமையான வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, சோர்வு, எடை இழப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும். இதனால் செரிமான மண்டலத்தின் குறிப்பிட்ட பகுதிகள் பாதிக்கலாம். பெரும்பாலும் இதில் சிறுகுடலில் தான் பாதிப்பு ஏற்படும். இந்த கிரோன் நோய் எதனால் ஏற்படுகிறது எனத் தெளிவாகத் தெரியவில்லை. திசுக்களைப் பாதிக்கும் நுண்ணுயிரிகளுக்கு எதிரான அசாதாரண நோயெதிர்ப்பு காரணமாகவே இது ஏற்படுகிறது.
24 மணி நேரம்: ஜெனிடிக்ஸும் இதற்கு முக்கிய காரணம். நோய் உள்ளவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு இது ஏற்படும் வாய்ப்பு அதிகம்,, ஒரு கட்டத்தில் அவரது வயிற்றில் ஒரு சீழ் உருவாகி நிலைமை மோசமானது. ஒரு நாள் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வெறும் 24 மணி நேரம் மட்டுமே உயிருடன் இருப்பார் என்று கூறி அதிர்ச்சி அளித்தனர். இதன் பிறகு ஆப்ரேஷன் செய்யப்பட்டு அவரது குடலின் ஒரு பகுதி அகற்றப்பட்டது.
இப்போது அவரால் உயிர் வாழ முடிகிறது என்றாலும் இது அவரது வாழ்க்கை முறையையே முற்றிலுமாக மாற்றிவிட்டது. எனவே, சாதாரண வயிற்று வலி தானே என்று எப்போதும் நாம் அலட்சியமாக இருக்கக் கூடாது இருந்தால் இப்படி மோசமான நிலைக்கு நாம் தள்ளப்படும் ஆபத்து இருக்கிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications