சிறந்த சித்தகத்தி பூக்கள்.. தோல் நோய்க்கு இதுதான் பெஸ்ட் மூலிகை செடி.. தலைமுடி வளர சிற்றகத்தி இலைகள்
சென்னை: தலைமுடி செழிப்பாக வளர்வது முதல் சரும நோய்களை நெருங்க செய்யாமல் காக்கக்கூடிய மூலிகைதான் சித்தகத்தி.. இந்த சித்தகத்தியின் பூக்கள், இலைகள், விதைகள் என மொத்த செடியுமே மருத்துவ குணம் மிக்கவை. இதனை சுருக்கமாக பார்ப்போம்.
கிராமங்களிலும், சாலையோரங்களிலும் இயல்பாகவே வளரக்கூடிய செடிதான் சித்தகத்தி.. எங்கெல்லாம் தண்ணீர் இருக்குமோ, அங்கு விளைந்துவிடும்.. இதன் இலைகள் சிறியதாக, முருங்கைக்கீரை போலவே இருக்கும்.. பூக்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.. சிலசமயம், கருப்பு, சிவப்பு, நிறங்களிலும் பூக்கள் பூக்கும். இந்த சித்தகத்தியை, சிற்றகத்தி, கருஞ்செம்பை என்று பல பெயர்களில் அழைப்பார்கள்..

சிற்றகத்தி இலைகள் : சித்தகத்தி இலைகளை பொறுத்தவரை, சருமத்துக்கு மருந்தாகக்கூடியது.. உடலில் காயங்கள் ஏற்பட்டு அல்லது கட்டிகள் இருந்தால், இந்த இலையை அரைத்து கட்டிகளில் கட்டினால் போதும். அந்த கட்டிகள் பழுத்து உடைந்துவிடும்..
அல்லது இந்த இலைகளுடன் சித்தகத்தியின் பூக்களையும் சேர்த்து அரைத்து கட்டினாலும், கட்டிகள் பழுத்து உடையும்.. அல்லது சித்தகத்தி இலைகளை விழுதாக அரைத்து, இதனை ஆமணக்கு எண்ணெயில் வதக்கி, கட்டிகளில் கட்டி வந்தாலும், அவை பழுத்து உடையும்.
சரும ஆரோக்கியம்: அதேபோல, சித்தகத்தி இலையுடன் சிறிது குப்பை மேனி இலையையும் சேர்த்து, கல் உப்பை வைத்து அரைத்து தடவி, குளித்து வந்தால் சொறி, சிரங்கு, படை போன்றவை குணமாகிவிடும். நமைச்சல், அரிப்பு, வியர்க்குரு என எந்த தொந்தரவும் நெருங்காது. சித்தகத்தி இலையின் சாற்றை 15 மி.லி அளவு சாப்பிட்டு வரும்போது, கரப்பான், மேகரோகக் கிருமிகள் விலகிவிடும்..
வாயுக் கட்டிகளை குணப்படுத்த ஆமணக்கு எண்ணெய்யில் சித்தகத்தி இலையை அரைத்து கட்ட வேண்டும்.சிறுநீர் கோளாறு இருந்தால், கருஞ்செம்பு இலையை சாறு பிழிந்து குடிக்கலாம்..
சைனஸ், தலைபாரம்: சைனஸ் பிரச்சனை, மூக்கடைப்பு, தலையில் நீர் கோர்த்து கொள்வது, தலைபாரம் உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்கொள்பவரகள், சித்தகத்தி இலைகளை 10 எடுத்து, நல்லெண்ணெயில் காய்ச்சி வாரம் 2 முறை தலைக்கு தேய்த்து குளித்தால் நிவாரணம் கிடைக்கும்... அல்லது தேங்காய் எண்ணெய்யில் சித்தகத்தி பூக்களை சேர்த்து காய்ச்சி தலையில் தேய்த்து வந்தாலும், ஒற்றை தலைவலி, பாரம் குறையும்.. அல்லது இந்த இலைகளை வெந்நீரில் போட்டு ஆவி பிடிக்கலாம்..
தலைமுடி அதிகமாக கொட்டினால், சித்தகத்தி பூக்களுடன் கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணியை நல்லெண்ணெயில் காய்ச்சி இளம்சூட்டில் தலைக்கு தேய்த்து குளித்துவரலாம்.. இதனால் தலை முடி நீளமாக வளரும்.. சித்தகத்தி பூக்களை அரைத்து, ஒரு நெல்லிக்காய் அளவு பாலூட்டும் தாய்மார்களுக்கு தரும்போது, தாய்ப்பால் அதிகம் சுரக்குமாம்..
தேள்கடி: சித்தகத்தியின் மரப்பட்டையை கூட மருந்தாக பயன்படுத்துவார்கள்.. இந்த மரப்பட்டையை அரைத்து, தோல் நோய் ஏற்பட்டுள்ள இடங்களில் பற்று போட்டால் தீர்வு கிடைக்கும். முன்பெல்லாம் தேள் கடித்துவிடடால், இந்த மரப்பட்டையைதான் நன்றாக அரைத்து பற்று போடுவார்களாம்.. இதனால் நஞ்சு முறிந்துவிடும்.












Click it and Unblock the Notifications