செவ்வாழையின் செம்மை.. சர்க்கரை நோயாளி கரும்பு ஜூஸ் குடிக்கலாமா? வேர்க்கடலை சாப்பிடலாமா? செம அற்புதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சர்க்கரை நோயாளிகள் எதை சாப்பிட்டாலும் சுகர் ஏறிவிடும் என்று கவலைப்படுவார்கள்.. இதனால் என்ன சாப்பிடுவது? என்ன தவிர்ப்பது என்ற குழப்பமும் ஏற்படும்.. அந்தவகையில், செவ்வாழை, வேர்க்கடலை, கரும்பு சாறு இவைகளை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாமா? என்பதை சுருக்கமாக பார்ப்போம்.

செவ்வாழையை பொறுத்தவரை, வைட்டமின் C, இரும்பு சத்து, நார்சத்து, பொட்டாசியம், பீட்டா கரோட்டின் போன்ற சத்துக்கள் உள்ளன.. இதனால் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கின்றன.

Red Banana sugarcane juice Peanuts

செவ்வாழையின் சிறப்புகள்

அந்தவகையில், நீரிழிவு நோயாளிகள், செவ்வாழைப்பழத்தை சாப்பிடுவதன் மூலம், அது நோயை நிர்வகிக்க உதவலாம் என்றும் இது குறைந்த கிளைசெமிக் குறியீட்டை கொண்டிருப்பதாகவும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. குறைந்த க்ளைசெமிக் உணவுகள் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை குறைக்க செய்யக்கூடியவையாகும்..

அதனால், சர்க்கரை நோயாளிகளுக்கு செவ்வாழைப்பழம் நன்மைகளை தரக்கூடியவைகளாக இருக்கின்றனவாம்.. மேலும், அமிலேஸ் மற்றும் குளுக்கோசிடேஸின் செயல்பாட்டை இந்த பழங்கள் தடுப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன.

வேர்க்கடலை சாப்பிடலாமா

அதேபோல வேர்க்கடலையை பொறுத்தவரை, நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடாது என்பார்கள்.. ஆனால், வேர்க்கடலையிலுள்ள மெக்னீசியம், இன்சுலினை சுரக்க செய்யும் ஹார்மோனை துரிதப்படுத்தி, சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது.

"சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க வேர்க்கடலையையும், வேர்க்கடலை வெண்ணெயையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்" என்று தேசிய வேர்க்கடலை அமைப்பும் வலியுறுத்துகிறது. வேர்க்கடலையிலும், வேர்க்கடலை வெண்ணையிலும், சர்க்கரை அளவு குறைவாக இருப்பதால், ஒரு கையளவு வேர்க்கடலை வாரம் ஒருமுறை எடுத்துக் கொண்டாலே போதும் என்கிறது.

கரும்புச்சாறு நன்மைகள்

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ள கரும்பு சாற்றில், இரும்புச்சத்து, மெக்னீசியம், கால்சியம் உட்பட பிற எலக்ட்ரோலைட்டுகள் உள்ளன.. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகின்றன. கரும்பு ஜூஸில், குறைந்த கிளைசெமிக் பண்புகள் உள்ளன. இயற்கை சர்க்கரை இதில் அடங்கியுள்ளதால், சர்க்கரை உடலில் மெதுவாக உறிஞ்சப்படுகிறது... இது உயர் கிளைசெமிக் பானங்களுடன் தொடர்பு கொண்டுள்ளது..

எனவே, டைப் 2 நீரிழிவு நோயாளிகள் கரும்புச்சாறை மிதமான அளவில் எடுத்துகொள்ளும்போது, அது சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும். மேலும், உடலிலிருந்து பாலிஃபீனால் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் வெளியாகின்றன. இதனால் கணையம் தேவைக்கு அதிகமாக இன்சுலினை உற்பத்தி செய்யும் என்பதால், பிரஷ்ஷான கரும்பு ஜூஸை, வாரம் ஒருமுறை, அதுவும் அரை கிளாஸ் மட்டுமே குடித்தால் போதும் என்கிறார்கள்..
செவ்வாழை, வேர்க்கடலை, கரும்புச்சாறு, இந்த மூன்றுமே சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது என்றாலும், மருத்துவரின் முறையான ஆலோசனையை நீரிழிவு நோயாளிகள் பெற்று குடிக்கலாம்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+