Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேனில் ஊற வெச்ச இஞ்சி.. தினம் ஒரு துண்டு போதுமே.. புற்றுநோயும் விலகி ஓடும்.. நன்மை தரும் இஞ்சி தேன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேனும், இஞ்சியும் அருமருந்து என்பார்கள்.. இஞ்சியை தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

இயல்பாகவே இஞ்சியிலும், தேனிலும் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன.. வைட்டமின் C, B1, B2 போன்ற அத்தியாவசியமான அமினோ அமிலங்கள் இஞ்சியில் உள்ளன. இதயத்துக்கு ரத்தத்தை எடுத்து செல்லும் ரத்தநாளங்களில் அடைப்பு உண்டாவதை தடுக்கும் பிரத்யேகமான குணத்தை இஞ்சி பெற்றிருக்கிறது.

Health Honey Ginger Cancer

அசைவ உணவுகள்: அதனால் தான் அசைவ உணவுகளை கட்டாயம் இஞ்சி சேர்த்து சமைக்கப்படுகிறது. இதனால், உணவு செரிமானமாவதுடன், கொழுப்புச்சத்து ரத்த நாளங்களில் படியாமல் தடுத்து, மாரடைப்பு ஏற்படாமலும் தடுக்கப்படுகிறது..

அதுமட்டுமல்லாமல், ரத்தக்கட்டு குறையையும் சரிசெய்கிறது இந்த இஞ்சி. உடலிலுள்ள கெட்ட கொழுப்பை கரைப்பதில் இஞ்சிக்கு நிகர் வேறில்லை.. உடல் எடை குறைப்பு முதல் வயிற்று கோளாறுகள் வரையிலான பிரச்சனையை இஞ்சி சரிசெய்கிறது.

ரத்த நாளங்கள்: தேனை எடுத்துக் கொண்டால், உடல் எடையை குறைக்ககூடியது.. அத்துடன், ரத்த நாளங்களை விரிவடைய செய்து, ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை கட்டுப்படுத்துகிறது.. ரத்த ஓட்டத்தையும் வேகப்படுத்துகிறது.. அதனால்தான், தேன் சாப்பிடுபவர்கள் எப்போதுமே சுறுசுறுப்பாக காணப்படுவார்கள். காய்ச்சல், சளி, இருமல் அதிகமாக இருந்தால், வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிது எலுமிச்சம் சாறு, தேன் கலந்து குடிக்கலாம்.

அந்தவகையில், தேன், இஞ்சி இரண்டுமே மருத்துவ நன்மைகளை தரக்கூடியவை என்பதால், இவைகளை ஒன்றாக சேர்த்து சாப்பிடும்போது கூடுதல் பலன் கிடைக்கிறது..

பலன்கள்: தேனில் ஊற வைத்த இஞ்சி சாப்பிட்டால், வயிறு உப்புசம், வயிறு வலி, வயிறு கோளாறு உள்ளிட்ட வயிறு உபாதைகள் அத்தனையும் நீங்கும்.. இதில் தினமும் ஒரு துண்டினை, வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் தொப்பை கரைய துவங்குமாம்..

தேனில் ஊற வைத்த இஞ்சியை தினமும் சாப்பிட்டு வரும்போது, புற்றுநோய் அபாயத்திலிருந்தும் விடுபடலாம் என்கிறார்கள். காரணம், நவீன மருத்துவ ஆராய்ச்சியில் இஞ்சி புற்றுநோயைத் தடுப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் செல்களை அழித்து, புற்றுநோய் உடல் முழுவதும் பரவுவதை இஞ்சி தடுக்கின்றன. எனவே தேனில் ஊற வைத்த இஞ்சியை தினமும் சிறிது சாப்பிட்டால் நல்லது.

ஆஸ்துமா பிரச்சனைகள்: ஆஸ்துமா பிரச்சனை இருப்பவர்கள், மூட்டுவலி தொந்தரவு உள்ளவர்கள், சளி, இருமலால் அவதிப்படுபவர்கள் தினமும் தேனில் ஊற வைத்த இஞ்சியை சாப்பிடலாம். இதனால் இதயம் ஆரோக்கியமாக செயல்படும்.

அதேபோல, உடலைத் தாக்கும் தீங்கு விளைக்கும் ப்ரீ-ராடிக்கல்களினால் ஏற்படும் அபாயத்தை இஞ்சி தடுப்பதுடன், டிஎன்ஏ பாதிப்பைத் தடுத்து, விரைவில் முதுமை தோற்றத்தை பெறாமலும் தடுக்கும். எனவே, நீண்ட நாட்கள் இளமையுடன் இருக்க வேண்டுமானால், தினமும் தேனில் ஊற வைத்த ஒரு இஞ்சியே போதும் என்கிறார்கள்.

சர்க்கரை நோய்: வளரும் பிள்ளைகளுக்கு இந்த தேனில் ஊறவைத்த இஞ்சியை ஒரு துண்டு கொடுத்துவந்தால், சர்க்கரை நோயும், ரத்த அழுத்தம் பிரச்சனையும் அவர்களை நெருங்க விடாமல் தடுக்கலாம்...

கடைகளில் தேனில் ஊறவைத்த இஞ்சி என்றே விற்கிறார்கள்.. இதை நாமும் வீட்டிலேயே தயார் செய்யலாம்.. இஞ்சியைத் தோல் நீக்கி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, சுத்தமான தேனில் 48 நாட்கள் ஊறவைத்தால் போதும்.

இட்லி தட்டு: இதையே வேறு விதமாகவும் செய்யலாம்.. முற்றிய இஞ்சியை எடுத்து தோல் சீவி, துருவி கொள்ளலாம்.. இந்த துருவல் இஞ்சியை இட்லி தட்டில் வைத்து ஆவியில் 10 நிமிடங்கள் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு பிறகு கண்ணாடி பாட்டிலில் வேக வைத்து இஞ்சி துருவலுடன் சுத்தமான தேன் கலந்து 21 நாட்கள் ஊறவைக்க வேண்டும். 48 நாட்கள் ஊறவைத்தால் இன்னும் சிறப்பு.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+