நீளமான தலைமுடிக்கு வாழையிலை.. மின்னும் சருமத்துக்கு வாழை இலைகள்.. ஆயுளை கூட்டும் சூப்பர் வாழை இலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: வாழை இலைக்கும் தலைமுடிக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா? நிறையவே நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்கிறார்கள் நிபுணர்கள். எப்படி தெரியுமா?

வாழை இலையில், சுடச்சுட உணவு பரிமாறி நாம் சாப்பிடுவதால், இளநரை வராமல் நீண்டநாட்கள் தலைமுடி கருப்பாக இருக்குமாம்.. வாழை இலை ஒரு கிருமி நாசினியாகும். எனவே, உணவில் உள்ள நச்சுக்கிருமிகளை வாழை இலை அழிக்கும் தன்மை கொண்டது.

Health Health tips health news Banana Leaf Banana Leaves banana Leaf Juice Banana leaf Juice Skin care Hair Care Weight Loss

தலைமுடி: வாழையிலையில் இப்படி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் முதுமை, தலை நரைத்தல், தள்ளாமை போன்றவை காலம் தாழ்த்தி வரும்.. வாழையிலையின் சாறுகள், நம்முடைய தலைமுடிக்கு பேருதவி புரிகின்றன.

இந்த வாழை சாற்றிலுள்ள, அஸ்ட்ரிஜெண்ட் மற்றும் அலன்டோயின் பொருட்கள் தலைமுடிக்கு நல்ல நிறத்தை தரக்கூடியவை..

அதாவது, வாழையிலையிருந்து சாறு எடுத்து, தலையில் மாஸ்க் போல தடவி ஊறவைத்து குளித்து வந்தால் பொடுகு தொல்லை முழுமையாக நீங்கும்.. அத்துடன், தலையில் அரிப்பு, சூடு கட்டிகள், எரிச்சல் போன்றவை இருந்தாலும், இந்த சாற்றினை தலையில் தேய்த்து ஊறவைக்கும்போது, அடியோடு போய்விடும்

குளிர்ச்சி இலைகள்: சருமம் பளபளப்பாக இருக்கவும், இந்த வாழையிலையே போதுமானது.. ஏனென்றால், காரணம், குளிர்ச்சி மிகுதி இலை என்பதுடன், இயற்கையான ஆன்டிபயாடிக் நிறைந்த இலையுமாகும்..

வாழையிலை குளியல்கள், ஆயுர்வேதத்தில் சிகிச்சையில் மிகவும் பிரசித்தி பெற்றவை. இதனால், உடம்பிலுள்ள தேவையற்ற நச்சுக்கள் அகலுவதுடன், உடல் எடையும் வெகுவாக குறையும்.. நரம்பு மண்டலத்தை பலப்படுத்தவும், சிறுநீரக செயலிழப்பை தடுக்கவும், இந்த வாழையிலை குளியல் சிகிச்சை தரப்படுகிறது.

லோஷன்கள்: வாழையிலையின் சாற்றினை பொறுத்தவரை, சூரியக் கதிர்வீச்சிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்களின் தாக்கத்தால் ஏற்படுகிற சரும பிரச்சனைகளை தீர்க்க உதவுகிறது. எனவே, பெரும்பான்மையான சன் ஸ்கிரீன் லோஷன்களில், இந்த வாழை இலையின் சாற்றினை மூலப்பொருட்களாக சேர்க்கிறார்கள்.

இதனால், சருமத்துக்கு அலர்ஜி தொல்லைகள் வராது.. கண்ணுக்கு குளிர்ச்சியையும் ஏற்படுத்தி, எதிர்ப்பு சக்தியையும் பெருக செய்யும்.. அத்துடன், வேனல் கட்டிகள், காயங்கள், சொறி, சிரங்கு, தீப்புண்கள், எரிச்சல், அரிப்பு, போன்ற சரும பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும், இந்த வாழை இலையை அரைத்து பூசினாலே, அத்தனை கோளாறும் நீங்கிவிடும்.

முதுமை தோற்றம்: வெயில் காலங்களில் வியர்க்குரு பிரச்சனையும் வராமல் தடுத்துவிடும்.. இது அனைத்தையும்விட, முகத்தில் ஏற்படும் வயதான தோற்றத்தை தள்ளி போடக்கூடிய சக்தி இந்த வாழை சாறுக்கு நிறையவே உண்டு.

வெறும் ஐஸ்கட்டிகளை வாழை இலையில் வைத்து மசாஜ் செய்து வந்தால், சருமம் பொலிவு பெறும்.. அல்லது வாழையிலை சாற்றினை, ஃப்ரிட்ஜில் ஐஸ்கட்டியாகும்வரை வைத்து, இதனை சருமத்தில் தேய்த்து வந்தாலே சருமம் மென்மையாகும்.. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், முக சுருக்கத்தை தள்ளிப்போடுகின்றன..

தவிர்க்கலாம்: வாழை இலைகளில் அலட்டாயின் என்ற முக்கிய சத்துக்கள்தான், சரும பாதுகாப்பை அபரிமிதமாக தரக்காரணமாகும்.. ஆனால், எப்போதுமே இந்த வாழை சாற்றினை நேரடியாக முகத்துக்கு தடவக்கூடாது.. ரோஸ் வாட்டர் அல்லது கற்றாழை ஜெல் இவைகளில் ஏதாவது ஒன்றை சேர்த்து பயன்படுத்த வேண்டும்.. அல்லது தயிருடன் சேர்த்தும் வாழைச்சாறு பயன்படுத்தலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+