முந்திரிக்கொட்டை முந்தி முந்தி நல்லது செய்யும்.. பாலில் ஊறவைத்த முந்திரி பெஸ்ட்.. எத்தனை சாப்பிடலாம்
சென்னை: காஸ்ட்லி பருப்பு என்று சொல்லக்கூடிய முந்திரிப்பருப்பில் என்னென்ன சத்துக்கள் உள்ளன? ஒருநாளைக்கு எத்தனை முந்திரி பருப்பு சாப்பிடலாம்? அதிகம் முந்திரி சாப்பிட்டால் என்னாகும்?
புரோட்டீன்கள், வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்ற சத்துக்கள் முந்திரியில் உள்ளன. பீட்டா கரோட்டீன், டானின் என்று சொல்லக்கூடிய ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் என்ற முக்கிய சத்துக்களும் முந்திரியில் நிறைந்துள்ளன.

சர்க்கரை நோயாளி: டைப்-2 சர்க்கரை நோயாளிகள் முந்திரி சாப்பிட்டால் ரத்த குளுக்கோஸின் அளவு குறைகிறது. ஆனால், பச்சையாக இருக்கும் முந்திரியை விட, வறுத்த முந்திரியானது அதிக ஆக்ஸிஜனேற்ற திறனைக் கொண்டிருப்பதாக சொல்கிறார்கள்.. அதேசமயம், ஊறவைத்த முந்திரி சாப்பிடும்போது, எளிதில் ஜீரணமாகும். மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று "சிறிய" அளவு மட்டுமே வாரம் ஒருமுறை, நீரிழிவு நோயாளிகள் எடுக்கலாம்
முக்கியமாக, உடலில் சேதத்தை ஏற்படுத்தும் செல்களை தடுக்கவும், உடலில் ஏற்படும் வீக்கம் போன்ற பிரச்சனைகளை சரி செய்ய இந்த முந்திரிக்கொட்டைகள் உதவுகின்றன.
கொலஸ்ட்ரால்: உடலிலுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க செய்கிறது முந்திரி.. இப்படி ஆரோக்கியமான கொழுப்புக்கள் நிறைந்துள்ளதால் இதய செயல்பாட்டுக்கும் முந்திரி நன்மையை தருகிறது.
முந்திரிக்கொட்டையை சாப்பிட்டு வருபவர்களுக்கு இதய நோய்க்கான அபாயமானது 37 சதவீதம் குறைவாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. எனவே, இதயம் பலவீனமாக இருப்பவர்கள்கூட குறிப்பிட்ட அளவு முந்திரி சாப்பிடலாம்.
செரிமான பிரச்சனை: செரிமான பிரச்சனை இருப்பவர்கள், தினமும், 2, 3 முந்திரி எடுத்து கொண்டால் ஜீரணம் சீராகும். கண் பார்வை கூர்மையாகும். புரோந்தோசயனிடின்கள் என்ற பண்பு முந்திரியில் உள்ளதால், புற்றுநோய் அபாயமும் குறைகிறது. இதனால் புற்றுநோய் செல்கள் வளரவிடாமல் தடுக்கப்படுகின்றன. தாமிரம் உள்ளதால், கொலாஜின் உற்பத்தியையும் முந்திரி தூண்டுகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளதால், முதுமையை தள்ளிப்போடக்கூடிய சக்தி முந்திரிக்கொட்டைக்கு உண்டு.
பாலில் ஊறவைத்த முந்திரிக்கொட்டைகளில் உடலுக்கு தேவையான கால்சியம் கிடைக்கிறது.. மேலும் இந்த கொட்டையில் வைட்டமின் K, வைட்டமின் B6, மெக்னீசியம் நிறைந்துள்ளதால் பாலுடன் ஊறும்போது, கூடுதல் கால்சியம் சத்தை தருகின்றன. இதனால், பற்களும், எலும்புகளும், உறுதியாகின்றன.
எவ்வளவு சாப்பிடலாம்: ஆனால், அதிகமான அளவு முந்திரி சாப்பிட்டால் அலர்ஜி ஏற்படலாம். அல்லது மலச்சிக்கலை ஏற்படுத்தலாம்... அத்துடன் சிறுநீரகத்திலும் பாதிப்பை தந்துவிடலாம். ஆக்சலேட்டுகள் இந்த முந்திரியில் அதிகமாக உள்ளதால், உடல் நல கோளாறுகளை கொண்டுவந்துவிடும். டைரமைன் மற்றும் ஃபைனிலெதிலமைன் என்கிற அமினோ அமிலங்களால் சிலசமயம் தலைவலியும் வரலாம். ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 18 முந்திரிக்கொட்டைகளை சாப்பிடலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications