Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மட்டனில் இதை மட்டும் சேருங்க.. பெஸ்ட் பலன்.. ஆட்டுக்கறியின் அபார சத்து.. மொத்தமா மட்டனை விட்றாதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: மட்டன் உடலுக்கு நல்லதா? கெட்டதா? மட்டன் சாப்பிட்டால் ஹார்ட் அட்டாக் வருமா? என்ற சந்தேகங்கள் தொடர்ந்து எழுகின்றன.

கோழிக்கறி உள்ளிட்ட மற்ற இறைச்சிகளைவிட, மட்டனில், அதிக சத்துக்கள் உள்ளதாம்.. வைட்டமின் B12, நியாசின், இரும்பு, செலினியம் சத்துக்கள் இதில் உள்ளதுடன், மற்ற இறைச்சி வகைகளோடு ஒப்பிடும்போது, ஆட்டிறைச்சியில் அதிகமாகவே இரும்புச்சத்து உள்ளது, இதன் சிறப்பம்சமாகும்.

Wonderful Medicinal Uses of Mutton and Do you know how to cook mutton in healthy ways Best Tips


சிவப்பு இறைச்சி: சிவப்பு இறைச்சியை அதிகமாக சாப்பிட்டால், மாரடைப்பு வருவற்கான சாத்தியக்கூறுகள் நிறையவே உள்ளன.. காரணம், இது கெட்ட கொழுப்பை அதிகரிப்பதுடன், ரத்த உறைவு மற்றும் பிளேக் உருவாகுவதை தூண்டுவதாக கூறுகிறார்கள்.

மேலும் சிவப்பு இறைச்சியில் கொழுப்பு, கொலஸ்ட்ரால், சோடியம் நிறைந்துள்ளதால், இதயத்துக்கு கெடுதலை ஏற்படுத்துகிறது.... மட்டனை சாப்பிட்டு சுடுதண்ணீர் குடித்தால், கொழுப்பு உடலில் சேராது என்று நினைக்கிறார்கள்.

சுடுநீர்: இப்படி சுடுநீர் குடிப்பது, வயிற்றை சுத்தப்படுத்தி கொள்ள உதவுமே தவிர, மட்டனால் படியும் கொழுப்பை கரைக்க உதவாது. எனவே, சிறந்த மட்டனை தேர்ந்தெடுத்து, சிறந்த முறையில் சமைத்தாலே பாதி பிரச்சனையை தவிர்த்துவிடலாம்.

இதற்கு செம்மறி ஆட்டைவிட, வெள்ளாடு கறியை தேர்ந்தெடுக்கலாம். காரணம், 100 கிராம் வெள்ளாட்டு கறியில் 130 காலரியும், 3 கிராம் கொழுப்பும், 27 கிராம் புரோட்டீனும் உள்ளது. வெள்ளாட்டுக்கறியை சாப்பிட்டாலும் இதயநோய்கள் வரத்தான் செய்யும். ஆனால், நாம் பக்குவமாக சமைப்பதில்தான், ஆரோக்கியம் அடங்கியிருக்கிறது.

ஆட்டுக்கறி: எப்போதுமே ஆட்டுக்கறியை எண்ணெய்யில் பொறித்தும், அதிக மசாலாக்களுடன் சமைப்பதும்தான், ஆரோக்கியத்துக்கு கேடு தருகிறது.. அதிக எண்ணெய் ஊற்றாமல், டீப் ஃப்ரை செய்யாமல், குறைவான எண்ணெய்யில் வேக வைத்தோ அல்லது கிரில் செய்தோ அல்லது சூப்பாகவே சாப்பிட்டால், மட்டனிலுள்ள சத்துக்கள் வீணாகாமல் கிடைக்கும்.

அதேபோல மட்டன் சமைக்கும்போதும், சாப்பிடும்போதும், நார்ச்சத்து நிறைந்த உணவுகளை கட்டாயம் சேர்த்து கொள்ள வேண்டும்.. வழக்கமாக, ஆண்களுக்கு 40 கிராம், பெண்களுக்கு 30 கிராம் நார்ச்சத்து தேவையாக உள்ளது.. எனவே, மட்டனை கிரேவி, குழம்பு செய்யும்போது, கேரட், பீன்ஸ், வாழைக்காய், முருங்கைக்காய், காலி பிளவர் போன்றவற்றுடன் சேர்த்து சமைக்கலாம்.

உருளைக்கிழங்கு: உருளைக்கிழங்கு சேர்ப்பதாக இருந்தால், தோலுடன் பயன்படுத்த வேண்டும். இவைகளில் மட்டனுடன் சேர்த்து சமைத்தால், மட்டனிலுள்ள கொழுப்புக்கள் உறிஞ்சப்பட்டுவிடும்.. அதுமட்டுமல்ல, வெங்காயம், தக்காளியையும் சாலட் போல சாப்பிடவேண்டும். இந்த நார்ச்சத்துக்கள் எல்லாம் மட்டனுடன் சேர்ந்து, கொழுப்பை விரைந்து எரிக்க உதவும்.

அதேசமயம், அதிக மசாலா, அதிக எண்ணெய் பயன்படுத்தி மட்டனை சமைப்பது, ஆபத்தை விலைக்கு வாங்குவதற்கு சமமாகிவிடும். எனவே, மட்டனை கிரில் செய்தோ அல்லது ஆவியில் வேகவைத்தோ சாப்பிடுவது நல்லது.. அல்லது மட்டனிலுள்ள சத்துக்கள் முழுமையாக கிடைக்க வேண்டுமானால், ரசம், சூப் போல வைத்து குடிக்கலாம்... இல்லாவிட்டால், உப்புகண்டம் சமைத்து சாப்பிடலாம். இதனால், முழு சத்துக்கள் ஆரோக்கியமான முறையில் கிடைக்கும் என்கிறார்கள்.

முழு சத்துக்கள்: அதேபோல, மட்டனின் முழு சத்துக்களும் கிடைக்க மட்டன் ரசம் செய்யலாம்.. அல்லது நெஞ்செலும்பு ரசம் செய்யலாம்.. நல்லி எலும்பில் எப்படி ரசம் வைப்பது தெரியுமா?

ஒரு குக்கரில் சுத்தம் செய்யப்பட்ட எலும்புகளுடன், தண்ணீர் ஊற்றி இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு, கொத்தமல்லி தழை, மிளகு தூள், வெங்காயம், சீரகப்பொடி, மஞ்சள் சேர்த்து நன்றாக வேக வைக்க வேண்டும்.

எலும்பு ரசம்: ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, இஞ்சி பூண்டு விழுது, கறிவேப்பிலை வதக்கி, வேக வைத்த மட்டன் சூப்பை ஊற்ற வேண்டும்.. அது நன்றாக கொதித்து வரும்போது, மிளகு தூள், கொத்தமல்லி தூவி இறக்கினால், எலும்பு ரசம் ரெடி. ஆட்டுக்கால் சூப்பையும் இதே பாணியில் செய்யலாம். மஞ்சள், மிளகு, சீரகம், இஞ்சி, பூண்டு இவைகள் மட்டுமே இந்த ரசத்தில் உள்ளதால், சத்துக்கள் வீணாகாது. ஹீமோகுளோபின் பிரச்சனையும் தீரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+