உலக இட்லி தினம்..இட்லியில் இத்தனை சத்துக்களா? இனி தினசரி சாப்பிடுவீங்க
சென்னை: எங்க காலத்தில அமாவாசை, தீபாவளி, ஆடி பண்டிகைக்குதான் இட்லி சாப்பிடுவோம். இப்போ இட்லி சாதாரணமாக செய்றாங்க என்று பல வீடுகளில் பாட்டி சொல்வார்கள். அந்த அளவிற்கு இட்லி இன்றைக்கு தினசரியும் சமைக்கப்படும் காலை நேர உணவாகி விட்டது. இட்லியின் சிறப்பை உலகிற்கு உணர்த்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 30ஆம் தேதி உலக இட்லி தினம் கொண்டாடுகின்றனர். எளிமையான உணவான இட்லியில் உள்ள ஆரோக்கியம் பற்றியும் நன்மைகளைப் பற்றியும் அறிந்து கொள்வோம்.
இந்தோனேஷியாதான் இட்லியின் தாயகம் என்று தன் ஹிஸ்டரிக்கல் டிக்ஷனரி ஆஃப் இந்தியன் ஃபுட்' நூலில் குறிப்பிட்டிருக்கிறார், வரலாற்று ஆசிரியர் கே.டி.அச்சய்யா. சீன யாத்ரீகர் யுவான் சுவாங், 7ஆம் நூற்றாண்டில் ஆவியில் வேகவைக்கும் பாத்திரமே இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை என்று சுட்டிக்காட்டியதையும் சொல்கிறார். இட்லியின் ரிஷிமூலம், நதிமூலம் பற்றி நாம் பார்க்க வேண்டாம். அதில் என்னென்ன சத்துக்கள் உள்ளது. ஆரோக்கியமான இட்லியை யார் யார் சாப்பிடலாம் என்று பார்க்கலாம்.
குழந்தைகள், நோயாளிகள், முதியவர்கள்... என அனைவருக்கும் பக்க விளைவு ஏற்படுத்தாத உணவு என மருத்துவர்கள் பரிந்துரைப்பது இட்லியைத்தான். இட்லி ஆவியினால் வேகவைப்பதனால் இது மிகவும் ஆரோக்கியமான உணவு ஆகும். அதனால்தான் முதுமை காரணமாக நோய் தாக்குதலுக்கு ஆளாகும் வயதானவர்களின் உணவு பட்டியலிலும் முதலிடம் இட்லிதான். நோயாளிகளுக்கும் இட்லி தான் சிறந்த உணவாகவே காலங்காலமாக இருக்கிறது.

இட்லியில் உள்ள சத்துக்கள்
அரிசி, உளுந்து, வெந்தயம்தான் இட்லியின் மூலப்பொருள். அரிசி, உளுந்து ஆகியவைற்றை 6 மணி நேரம் ஊறவைத்து அரைத்து பக்குவமாக எடுத்து இரண்டையும் கலந்து அதை வைப்பார்கள். இதனோடு மிகச்சிறிதளவு நார்ச்சத்து நிறைந்த வெந்தயம் அரைத்து சேர்ப்பார்கள். இவை நன்றாக புளித்து மறுநாள் காலை அதை ஆவியில் வேக வைத்து தயாரிப்பார்கள். இட்லியில் இயற்கையாகவே உடலுக்கு தேவையான சத்துக்களும் கிடைக்கிறது. இட்லியில் 65 கலோரிகள், 2 கிராம் புரோட்டீன், 2 கிராம் நார்ச்சத்து, 8 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது.

இட்லி சாம்பார்
இட்லிக்கு பெஸ்ட் சைடுடிஷ் சாம்பார்தான். சாம்பாரில் உள்ள பருப்பு உடலுக்குத் தேவையான புரதச்சத்தை அளிக்கிறது. அதனுடன் தேங்காய், புதினா, தக்காளி அல்லது வெங்காயச் சட்னி சேர்த்து சாப்பிட்டால் புரதம், கார்போஹைட்ரேட்டுடன் சேர்த்து உடலுக்குத் தேவையான வைட்டமின் சத்தும் கிடைக்கும்

பலவகை இட்லிகள்
இன்றைய கால கட்டத்தில் ராகி இட்லி, கோதுமை ரவை இட்லி, பாசி பருப்பு இட்லி, ரவா இட்லி, சிறு தானிய இட்லி என பலவகை இட்லிகள் தயார் செய்யப்படுகின்றன. சில்லி இட்லி, ப்ரைடு இட்லி,இட்லி உப்புமாவும் தயாரிக்கப்படுகிறது. இட்லி என்பது எளிதாக தயாரிக்கப்படும் சத்தான உணவு என்பதில் சந்தேகமேயில்லை. இட்லியில் நல்ல செல்கள் அதிகமாக உள்ளதால் சமைத்து 12 மணிநேரம் வரைக் கெடாமல் இருக்கும். எனவேதான் சுற்றுலா செல்பவர்கள் பலரும் இட்லி, கார சட்னி சமைத்து எடுத்து செல்கின்றனர்.

தினசரியும் சாப்பிடலாம் இட்லி
தினமும் 4 இட்லி சாப்பிட்டால் 300 முதல் 350 கலோரிகள் நம் உடலுக்குக் கிடைக்கிறது. அதுமட்டுமின்றி இட்லியுடன் சாம்பார், சட்னி சேர்த்து சாப்பிடுவதனால் அனைத்து சத்துக்களும் சரியான அளவில் நமக்குக் கிடைக்கிறது. வயிறு பிரச்சினை, வாய்வு கோளாறு இருப்பவர்கள் தினந்தோறும் இட்லி சாப்பிடுவது மிகவும் நல்லது. அல்சர் உள்ளவர்கள் இட்லி சாப்பிட்டால் வயிற்றில் உள்ள புண்கள் சரியாகும். இட்லி நாம் சாப்பிட்டு 2 மணி நேரத்தில் செரிமானம் ஆகிவிடும். எனவே குழந்தைகளுக்கு இட்லி கொடுப்பது நல்லது. நீராவியில் வேக வைப்பதனால் கொழுப்புச் சத்து அதிகம் இல்லாத உணவாக இட்லி உள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications