அட.. காது அழுக்கில்தான் உயிர் ஒளிந்திருக்காம்! புற்றுநோயை முன்கூட்டியே கண்டுபிடிக்கலாம்: விஞ்ஞானிகள்
வாஷிங்டன்: நமது காதில் சேரும் அழுக்கை நாம் தேவையில்லாத கழிவாகவே கருதுகிறோம். ஆனால், அந்த அழுக்குதான் இனி புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து உயிரைக் காக்கப்போகும் ஆயுதம் என்று பிரேசில் நாட்டு விஞ்ஞானிகள் உலகையே வியக்க வைத்துள்ளனர். பிரேசிலின் கோயாஸ் ஃபெடரல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ள 'செருமெனோகிராம்' எனும் இந்தத் தொழில்நுட்பம், காது அழுக்கை ஆய்வு செய்வதன் மூலம் உடலில் புற்றுநோய் செல்கள் இருப்பதை மிகத் துல்லியமாகக் கண்டறிகிறது.
பொதுவாக நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும்போது காது அழுக்கின் வேதியியல் அமைப்பு ஒரு மாதிரி இருக்கும் என்றும், உடலில் நோய் பாதிப்பு ஏற்பட்டால் அந்த அமைப்பு உடனடியாக மாறிவிடும் என்றும் இந்த ஆய்வின் ஒருங்கிணைப்பாளர் நெல்சன் அந்தோனியோசி விளக்குகிறார்.

ரத்தப் பரிசோதனை போல ஊசி குத்தும் வலி இல்லாமல், மிகக் குறைந்த செலவில், சாதாரண மக்களும் பயன்பெறும் வகையில் இந்த ஆய்வு 2025-ஆம் ஆண்டின் சிறந்த மருத்துவ விருதுகளையும் வென்றுள்ளது. சுமார் 751 பேரிடம் நடத்தப்பட்ட சோதனையில், புற்றுநோய் அறிகுறிகள் இல்லாத 5 பேருக்கு இந்தத் தேர்வு மூலம் நோய் இருப்பது முன்கூட்டியே கண்டறியப்பட்டு பின் உறுதி செய்யப்பட்டது.
தற்போது புற்றுநோயைத் தாண்டி, மனிதர்களை வாட்டும் அல்சைமர் மற்றும் பார்கின்சன் போன்ற மூளை தொடர்பான நோய்களையும் காது அழுக்கு மூலம் கண்டுபிடிக்க முடியுமா என்று இந்த ஆய்வுக் குழு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.
அரசுப் பல்கலைக்கழகங்களின் நிதி உதவியால் மட்டுமே இத்தகைய புரட்சிகரமான ஆய்வுகள் சாத்தியம் என்று கூறும் விஞ்ஞானிகள், விரைவில் இச்சோதனையை உலக அளவில் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளனர்.
இந்த ஆய்வு காது அழுக்கின் முக்கியத்துவத்தைப் பேசினாலும், மருத்துவர்கள் ஒரு முக்கியமான எச்சரிக்கையை விடுக்கின்றனர். காது அழுக்கைச் சுத்தம் செய்வதாக நினைத்துக்கொண்டு நாம் பயன்படுத்தும் 'இயர்பட்ஸ்' (Earbuds) அல்லது குச்சிகள் உண்மையில் காதுக்கு பெரும் தீங்கையே விளைவிக்கின்றன.
நமது காது தானாகவே அழுக்கை வெளியேற்றும் தன்மையைக் கொண்டது. நாம் பட்ஸைப் பயன்படுத்தும்போது, அழுக்கை வெளியே எடுப்பதற்குப் பதிலாக இன்னும் ஆழமாக செவிப்பறை (Eardrum) நோக்கித் தள்ளுகிறோம். இது காலப்போக்கில் காது கேளாமை, தொற்று பாதிப்பு மற்றும் செவிப்பறையில் ஓட்டை விழுதல் போன்ற தீவிர விளைவுகளை ஏற்படுத்தும். காது அழுக்கு என்பது உண்மையில் கிருமிகள் உள்ளே செல்லாமல் தடுக்கும் ஒரு பாதுகாப்பு அரண். எனவே, காதுக்குள் எதையும் விட்டு குடையாமல் இருப்பதே ஆரோக்கியமானது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications