Railway Jobs: 64,197 பணியிடங்களுக்கு 1.87 கோடி பேர் விண்ணப்பம்! ரயில்வே வேலைக்கு போட்டா போட்டி.. வெளியான டேட்டா
டெல்லி: ரயில்வேயில் காலியாக உள்ள 64,197 பணியிடங்களுக்கு (Railway Jobs) 1.87 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. குறிப்பாக ரயில்வே போலீஸ் பிரிவில் ஒரு இடத்துக்கு 1,076 பேர் போட்டியிடுவதாக நாடாளுமன்றத்தில் மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தற்போது நடந்து வருகிறது. இந்நிலையில் தான் ரயில்வேயில் நிரப்பப்படும் பணியிடங்கள் மற்றும் காலிப்பணியிடங்கள் குறித்து எம்பிக்கள் கேள்வி கேட்டு இருந்தனர். இதற்கு ரயில்வே அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளது.

ரயில்வே அமைச்சகம் அளித்த பதிலில் கூறியுள்ளதாவது: கடந்த 4 முதல் 5 ஆண்டுகளில் பல்வேறு காரணங்களால் ரயில்வேயில் காலிப்பணியிடங்கள் அதிகரித்தன. ஊழியர்களின் பணி ஓய்வு, மின்மயமாக்கல், டிஜிட்டல் டெக்னாலஜி உள்பட பல்வேறு வகைகளில் ரயில்வே துறையை நவீனமயமாக்கல் பணி நடந்து வருகிறது. இதனால் புதிய பணியிடங்கள் உருவாகி உள்ளன.
இப்போது மொத்தம் 1.08 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான பணி நடந்து வருகிறது. இதில் முதற்கட்டமாக 2024ம் ஆண்டில் 92,116 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகின.
அதில் உதவி லோகோ பைலட், டெக்னிஷியன், ரயில்வே போலீஸ், ஜூனியர் இன்ஜினியர் பாரா மெடிக்கல் ஸ்டாப், மற்றும் Non Technical Popular Categories உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 7 பிரிவுகளில் 64,197 காலிப்பணியிடங்களுக்கு மட்டும் மொத்தம் 1.87 கோடி விண்ணப்பங்கள் வந்துள்ளன.
அதன்படி அதிகபட்சமாக ரயில்வே போலீஸ் ஒரு இடத்துக்கு 1,076 பேர் போட்டியிடுகின்றனர். Non Technical Popular Categories பிரிவல் ஒரு இடத்துக்கு 728 விண்ணப்பங்கள் வந்துள்ளன. டெக்னீசியன் பதவியை எடுத்து கொண்டால் ஒரு இடத்துக்கு 189 விண்ணப்பங்களும், ஏஎல்பி பதவியை எடுத்து கொண்டால் ஒரு இடத்துக்கு 98 பேரும் விண்ணப்பம் செய்துள்ளனர்.
இதில், 55,197 பணியிடங்களுக்கு 4 கட்டங்களாக கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு நடைபெற்றுள்ளது. மொத்தம் 150க்கும் மேற்பட்ட நகரங்களில் 15 மொழிகளில் இந்த தேர்வு நடந்தது. உதவி லோகோ பைலட், ரயில்வே எஸ்ஐ, கான்ஸ்டபிள், ஜூனியர் இன்ஜினியர் உள்ளிட்ட பணிகள் இதில் அடங்கும்.
தொழில்நுட்ப வல்லுநர் பதவிகளுக்கு, அறிவிக்கப்பட்ட 14,298 காலியிடங்களில் 9,000க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் எம்பேனல் செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலை.. 27,000 சம்பளம்.. 8ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications