வங்கியில் வேலை.. 89 ஆயிரம் வரை சம்பளம்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வித்தகுதி என்ன? டீடெய்ல்
சென்னை: நபார்டு வங்கியில் காலியாக உள்ள 102 உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. கல்வி தகுதி என்ன? வயது வரம்பு எவ்வளவு என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ. 44,500 - 89,150 வரை சம்பளம் வழங்கப்படும்.
மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நபார்டு வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளன. விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட இந்த வங்கியில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பப்படுகின்றன.

அந்த வகையில் தற்போது நபார்டு வங்கியில் 102 உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. கல்வி தகுதி என்ன? வயது வரம்பு எவ்வளவு என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
உதவி மேலாளர் பொது: 50 பணியிடங்கள்
உதவி மேலாளர் சிஏ: 04 பணியிடங்கள்
உதவி மேலாளர் நிதி: 07 பணியிடங்கள் என மொத்தம் 102 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வி தகுதி: பணியின் தன்மைக்கேற்ப கல்வி தகுதி மாறுபடும். பொது உதவி மேலாளர் பணிக்கு ஏதாவது ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி அவசியம். உதவி மேலாளர் சிஏ பணிக்கு ஏதாவது ஒரு டிகிரியுடன் ஐசிஏஐ -வில் மெம்பர்ஷிப் பெற்றிருக்க வேண்டும். நிதி (உதவி மேலாளர் பணிக்கு) பிபிஏ (பைனான்ஸ்/ நிதி), பிஎம்எஸ் உள்ளிட்ட படிப்புகளை படித்து இருக்க வேண்டும். கல்வி தகுதி மற்றும் பணியிடங்கள் குறித்த விவரங்களை தேர்வு அறிவிப்பில் விண்ணப்பதாரர்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
சம்பளம் எவ்வளவு?: தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.44,500 - 89,150 வரை வழங்கப்படும்.
வயது வரம்பு: 01. 07. 2024 தேதிப்படி விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு 30 ஆகும். அதாவது விண்ணப்பதாரர்கள் 02.07.1994 க்கு முன்பாகவோ 01.07.2003-க்கு பிறகோ பிறந்திருக்க கூடாது. அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் என்றால் 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினர் என்றால் 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகள் என்றால் 10 ஆண்டுகளும் வயது உச்ச வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு முறை: முதன்மை தேர்வு, மெயின் தேர்வு, சைக்கோமெட்ரிக் டெஸ்ட் ஆகியவை முறையில் தகுதியான விண்னப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். கணிணி வழியிலான தேர்வு நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நடைபெறும். தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை ஆகிய நகரங்களில் நடைபெறும். தேர்வு மையம் குறித்த தகவல் விண்ணப்பதாரர்களுக்கு ஹால் டிக்கெட்டில் தெளிவாக குறிப்பிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்: இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் 850 ரூபாய் ஆகும். எஸ்சி/எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு 150 ரூபாய் விண்ணப்ப கட்டணம் ஆகும். விண்ணப்பம் தொடங்கும் தேதி 27.07.2024. விண்ணப்பிக்க கடைசி நாள் 15.08.2024 ஆகும்.












Click it and Unblock the Notifications