சொந்த மாவட்டத்தில் அரசு வேலை வேணுமா? பஞ்சாயத்து யூனியனில் காலியிடங்கள்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்
கரூர்: கரூர் தர்மபுரம் பஞ்சாயத்து யூனியனில் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 15 ஆயிரம் முதல் 72 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு எப்படி விண்ணப்பிப்பது, என்னென்ன தகுதிகள் என்பதை இங்கு காணலாம்.
கரூர் மாவட்டம் தர்மபுரம் பஞ்சாயத்து யூனியனில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக ஊரக வளர்ச்சி துறை இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சொந்த மாவட்டத்திலேயே அரசு வேலை பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருப்பவர்களுக்கு அருமையான வாய்ப்பாக இது அமைந்துள்ளது. கரூர் மாவட்டத்தில் வெளியாகியுள்ள இந்த தேர்வு அறிவிப்பு பற்றிய முழு விவரங்களை பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:
தந்தோணி ஊராட்சி ஒன்றியம்
* அலுவலக உதவியாளர் - 03 பணியிடங்கள்
* ஜீப் ஓட்டுநர் - 01 பணியிடம்
* வாட்ச்மேன் - 01 பணியிடம்
கே. பரமத்தி ஊராட்சி ஒன்றியம்
* வாட்ச்மேன் - 01 பணியிடம்
கல்வித் தகுதி:
* அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சைக்கிள் ஓட்ட தெரிந்து இருப்பது அவசியம்.
* ஜீப் டிரைவர் பணிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் டிரைவிங் லைசன்ஸ் வைத்து இருக்க வேண்டும். குறைந்தது 5 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
* வாட்ச்மேன் பணிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். தமிழில் நன்கு படிக்க எழுத தெரிந்து இருப்பது அவசியம்.
வயது வரம்பு:
18 வயது முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். பிசி / எம்பிசி பிரிவினர் என்றால் 34 வயது வரை விண்ணப்பிக்கலாம். எஸ்சி/எஸ்டி பிரிவினர் 37 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் எவ்வளவு:
* அலுவலக உதவியாளர் - நிலை 1 ரூ.15,700 - 58,100/-
* ஜீப் ஓட்டுநர் - நிலை 8 ரூ.19,500 - 71,900/-
* வாட்ச்மேன் - நிலை 1 ரூ.15,700 - 58,100/-
தேர்வு முறை:
* தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.50 கட்டணம் ஆகும்.
விண்ணப்பிப்பது எப்படி?
* தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் https://karur.nic.in என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்ய வேண்டும். விண்ணப்ப படிவத்தை முழுமையாக நிரப்பி சுயசான்று அளித்த சான்றிதழ் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும்..
* விண்ணப்பதாரர்கள் பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் அல்லது நேரில் விண்ணப்ப படிவத்தை சமர்பிக்கலாம். விண்ணப்பிக்க வரும் 13 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.
அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பினை படிக்க: https://karur.nic.in/notice_category/recruitment/












Click it and Unblock the Notifications