இஸ்ரோவில் வேலை.. மாதம் 63 ஆயிரம் வரை சம்பளம்.. தேதி முடிய போகுது.. மிஸ் பண்ணிடாதீங்க
திருவனந்தபுரம்: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் என்று அழைக்கப்படும் இஸ்ரோவில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விரைவில் தேதி முடிய போவதால் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும்.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் கீழ் செயல்படும் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ளது. இஸ்ரோவின் செயற்கை கோள்களை ஏவுவதற்கான ராக்கெட்டுகளை உள்ளிட்டவற்றை தயாரிக்கும் பணியை இந்த நிறுவனம் மேற்கொள்கிறது. இந்த நிலையில், இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள 18 ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்: இலகு ரக வாகன ஓட்டுநர் (9 பணியிடங்கள்), கனரக வாகன ஓட்டுநர்கள் (9) என மொத்தம் 18 பேர் தேர்வு செய்யப்படுகின்றனர். எல்.எம்.வி எனப்படும் இலகுரக வாகன ஓட்டுநர் பதவிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் எல்.எம்.வி டிரைவிங் லைசன்ஸ் வைத்து இருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுவதில் மூன்று ஆண்டுகள் அனுபவம் இருத்தல் அவசியம். கனரக வாகன ஓட்டுநர் பணிக்கு HVD லைசன்ஸ் அவசியம். பேட்ஜ் உடன் கூடிய லைசன்ஸ் வைத்திருக்க வேண்டும். 5 ஆண்டுகள் அனுபவம் அவசியம்.
வயது வரம்பு: 18 வயது முதல் 35 வயதுக்கு மிகாதவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. அதாவது, ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு. மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை 10 ஆண்டுகள் தளர்வு உண்டு. இது குறித்த விவரங்களை தேர்வு அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.
தேர்வு முறை: தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு எழுத்துத் தேர்வு நடத்தப்படும். எழுத்துத்தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் 1:10 என்ற அடிப்படையில் திறன் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். திறன் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்: சம்பளத்தை பொறுத்தவரை இரு பணிகளுக்குமே ரூ.19,900- 63,200 வரை சம்பளமாக கிடைக்கும்.
விண்ணப்பிப்பது எப்படி?: ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்.சி/எஸ்.டி உள்ளிட்ட பிரிவினர் எழுத்துத் தேர்வில் கலந்து கொண்ட பிறகு 500 ரூபாய் திருப்பி அளிக்கப்படும். பிற பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு ரூ.400 திருப்பி அளிக்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: விண்ணப்பிக்க வரும் 27.11.2023 கடைசி நாளாகும். இன்னும் 4 நாட்களே உள்ளதால் விருப்பமுள்ளவர்கள் விரைவில் விண்ணப்பித்து கொள்ளவும். தேர்வு அறிவிப்பினை படிக்க https://www.vssc.gov.in/advt328.html கிளிக் செய்யவும். தேர்வுக்கு விண்ணப்பிக்க https://rmt.vssc.gov.in/RMT328/applyV1.jsp கிளிக் செய்யவும்.
-
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications