பொதுத்துறை வங்கியில் வேலை வேண்டுமா? 10 ஆம் வகுப்பு முடித்திருந்தாலே போதும்.. விண்ணப்பிக்க ரெடியா?
டெல்லி: பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் 10 ஆம் வகுப்பு கல்வி தகுதியுடன் கூடிய காலிப்பணியிடங்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பொதுத்துறை வங்கியான செண்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள அலுவலக உதவி வேலைகளுக்கான( Safai Karmachari Cum Sub-Staff And/ Sub-Staff ) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 484 பேர் பணிக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள்.

ஐபிபிஎஸ் எனப்படும் வங்கிப் பணியாளர் தேர்வு ஆணையம் மூலமாக தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பணியிடங்களுக்கு தேவையான கல்வி தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட முழு விவரங்களையும் இங்கே பார்க்கலாம்.
கல்வி தகுதி: இந்த பணியிடங்களுக்கு அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இருந்து எஸ்.எஸ்.எல்.சி அல்லது அதற்கு இணையான கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: வயது வரம்பை பொறுத்தவரை 18 வயது பூர்த்தியானவர்கள் விண்ணப்பிக்கலாம். அதிகபட்ச வயது வரம்பு 26 ஆகும். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகளும் உண்டு. எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு. சம்பளத்தை பொறுத்தவரை மாதம் ரூ14500 - 28145/-வரை வழங்கப்படும்.
பணியமர்த்தப்படும் இடங்கள்: தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் குஜராத், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர், டெல்லி, ராஜஸ்தான், ஒடிசா, உத்தர பிரதேசம், மகராஷ்டிரா, பீகார், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் உள்ள செண்ட்ரல் வங்கியின் கிளையில் பணியமர்த்தப்படுவாரக்ள். விண்ணப்பதாரர்களுக்கு உள்ளூர் மொழி தெரிந்து இருப்பது அவசியம்.
தேர்வு முறை: ஆன்லைன் மூலம் தேர்வு நடைபெறும். ஐபிபிஎஸ் இந்த தேர்வை நடத்துகிறது. ஆங்கில மொழி அறிவு, பொது அறிவு, ரீசனிங் உள்ளிட்ட வினாக்களுடன் 70 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். உள்ளூர் மொழித் தேர்வும் நடைபெறும். இதில் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு பணி வழங்கப்படும். தேர்வுகளை பொறுத்தவரை நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடைபெறும். இது குறித்த விவரங்கள் ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?: தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியே விண்ணப்பிக்கலாம். எஸ்.சி/ எஸ்.டி உள்ளிட்ட சில பிரிவினருக்கு மட்டும் விண்ணப்ப கட்டணமாக 175 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒபிசி உள்பட பிற பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.850 செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் 09.01.2024 ஆகும். தேர்வு அறிவிப்பை தெரிந்து கொள்ள
https://centralbankofindia.co.in/en என்ற இணையதள லிங்கை கிளிக் செய்யவும்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications