போதைப்பொருள் பயன்படுத்துவது போன்ற வீடியோ வைரல்! “குழந்தைக்கு மாத்திரை”- அமைச்சர் சரத்குமார் விளக்கம்
சென்னை: அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத்துவது போன்ற பழைய வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தனது குழந்தை, மாத்திரையை விழுங்காமல் துப்பிவிடுவதால், அதை CRUSH செய்து தண்ணீரில் கலந்து கொடுத்தபோது எடுத்த வீடியோ அது என அமைச்சர் சரத்குமார் விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் 'THUG LIFE MOMENT' என்ற தலைப்புடன் அவரே பகிர்ந்துள்ள அந்த பழைய 'பவுடர்' வீடியோவில் குழந்தை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தவெக அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரான சரத்குமார் போதைப் பொருள் பயன்படுத்துவதை போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் தீயாகப் பரவி வருகிறது. அமைச்சர் சரத்குமார் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டே தன்னுடைய போனின் திரையில் வைத்து வெள்ளை நிறத்தில் ஒரு பொருளை பொடியாக்கிக் கொண்டிருப்பதை போல வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
போதைப் பொருட்களுக்கு எதிரான மாரத்தான் ஓட்டத்தில் முதலமைச்சர் விஜய் கலந்துகொண்ட நிலையில், அமைச்சர் சரத்குமாரின் இந்த வீடியோ இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இப்போது அமைச்சர் சரத்குமார் அந்த வீடியோ குறித்த விளக்கம் அளித்துள்ளார்.
"அது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கிரிக்கெட் மைதானத்தில் எடுக்கப்பட்ட வீடியோ. என் குழந்தைக்கு அப்போது ஒன்றரை வயது. உடம்பு சரியில்லை. குழந்தையின் மாத்திரையை பொடியாக்கி தண்ணீரில் கலந்து கொடுக்கவே அப்படி செய்தேன். கிரிக்கெட் மைதானத்தில் அத்தனை பேருக்கு முன்பாக அத்தனை கேமராக்களுக்கு முன்பாக எப்படி போதைப் பொருளை பயன்படுத்த முடியும்? அந்த வீடியோவை வேண்டுமென்றே தவறாகச் சித்தரிக்கிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
ஒன்றரை வயதுக் குழந்தையை இவ்வளவு இரைச்சல் மிகுந்த ஒரு கிரிக்கெட் போட்டிக்கு அழைத்துச் செல்வார்களா? அப்படியே சென்றாலும் அந்த வீடியோவில் குழந்தையைக் காணவில்லையே என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications