அதுக்கு நீங்கள் திமுகவுக்கு ஓட்டு போட்டிருந்திருக்கணும்? கனிமொழியின் பேச்சால் அதிர்ந்த பெண்!
தூத்துக்குடி: காயல்பட்டினத்தில் பேருந்து நிலையம் இருக்கும் போது பேருந்து அங்கு நிற்பதே இல்லை என முறையிட்ட பெண்ணிடம் "எங்கள் முதல்வருக்கு வாக்களித்து இருந்தால் நீங்கள் கேட்டது கிடைத்திருக்கும் என திமுக எம்பி கனிமொழி சொன்ன பதில் அங்கிருந்தோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காயல்பட்டினத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து 40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பல்நோக்கு மைய கட்டடத்தை திறந்து வைக்க கனிமொழி எம்பி வருகை தந்தார்.
அந்த கட்டடத்தை திறந்து வைத்த அவர், சமூக பொறுப்பு நிதியில் இருந்து 1 கோடியே 76 லட்சம் மதிப்பில் மருத்துவ உபகரணங்களான செவிதிறன் குறைபாடு கண்டறியும் கருவி மற்றும் பச்சிளம் குழந்தைகள் வெப்பமூட்டி கருவி வழங்கினார்.
அதைத் தொடர்ந்து ஓடக்கரை பகுதியில் புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார். அப்போது அங்கு நின்ற பெண்மணி ஒருவர் பேருந்து நிறுத்தம் கட்டினாலும் ஒரு பேருந்துகளும் நின்று செல்லவில்லை என்று கூறினார்.
அதற்கு கனிமொழி, நீங்கள் எங்கள் முதல்வருக்கு வாக்கு அளித்திருக்க வேண்டும் என்று கூறினார். உடனே நீங்கள் இப்படி கூற கூடாது என்று அந்த பெண் கூறினார். ஆனால் அதை கண்டுகொள்ளாத கனிமொழி அங்கிருந்து கிளம்பி சென்றார். இந்த செயல் அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆட்சியில் இருந்த போது கனிமொழியுடன் பல்வேறு பிரச்சினைகளுக்கு பலர் வாதம் செய்த போதிலும் அவர் நின்று நிதானமாக காது கொடுத்து கேட்டு அவர்களை சமாதானப்படுத்தி கோரிக்கைகளை நிறைவேற்றுவார்.
ஆனால் தற்போது சிரித்தபடியே பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் சம்பந்தமே இல்லாமல் ஒரு பதிலை சொல்லிவிட்டு செல்வதாக பொதுமக்கள் விமர்சிக்கிறார்கள்.
சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின் தாக்கம்: அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காயல்பட்டினம் மற்றும் தூத்துக்குடியின் சில பகுதிகளில் திமுக கூட்டணிக்குக் கிடைத்த வாக்குகள் அல்லது தேர்தல் முடிவுகளின் பின்னணியை இதோடு இணைக்கலாம். "தேர்தல் முடிவுகளுக்குப் பின் மக்கள் பிரதிநிதிகளின் அணுகுமுறை மாறியுள்ளதா?" என்ற கோணத்தில் அலசலாம்.
திமுக-வின் கோட்டை: தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி என்பது கனிமொழி எம்பி தொடர்ந்து வென்று வரும் ஒரு வலுவான தொகுதி. அப்படிப்பட்ட இடத்தில், தனது சொந்த தொகுதி வாக்காளரிடமே அவர் இப்படிப் பேசியதுதான் இந்தச் சம்பவத்தின் அரசியல் முக்கியத்துவத்தை அதிகமாக்குகிறது.












Click it and Unblock the Notifications