மாதம் ரூ.100,000 சம்பளம்.. இந்திய விமான நிலைய ஆணையத்தில் 496 பணியிடங்கள்.. சூப்பர் வாய்ப்பு
சென்னை: இந்திய விமான நிலைய ஆணையத்தில்(airport authority of India) ஜூனியர் எக்ஸிக்யூட்டிவ்(air traffic control) 496 காலி பணியிடங்களுக்கு தகுதி உள்ளவர்கள் வரும் நவம்பர் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பபட்டுள்ளது.
இந்திய விமான நிலைய ஆணையத்தில் பணியாற்ற விரும்புவோருக்கு அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது. பட்டதாரிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும். மத்திய அரசு பணியான இந்த வேலைக்கு ஆண்டு ஊதியமே 13 லட்சம் ஆகும். எப்படி விண்ணப்பிப்பது என்பதை பார்ப்போம்.

பணியின் பெயர்: air traffic control Junior Executive
பணி தரும் நிறுவனம்: இந்திய விமான நிலைய ஆணையம்
வேலை வகை: மத்திய அரசு வேலை
கல்வி தகுதி: air traffic control Junior Executive பணிக்கு பிஎஸ்சி இயற்பியல் மற்றும் கணிதம் அல்லது பிஇ/ பிடெக் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயதுவரம்பு: பொதுப்பிரிவில் 27 வயது வரை உள்ள பட்டதாரிகள் விண்ணப்பிக்க முடியும்
வயது சலுகை உண்டு: SC/ST/OBC/ மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய அரசின் விதிகளின் படி தளர்ச்சி உண்டு.
விண்ணப்பக்கட்டணம்: air traffic control பணிக்க ரூ. 1000. ஏ.ஏ.ஐ. நிறுவனத்தில் ஓராண்டு அப்ரென்டிஸ் முடித்தவர்கள் / பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 30.11.23.
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு. மருத்துவ சோதனை
air traffic control Junior Executive பணிக்கு சம்பளம் எவ்வளவு: ஊதியம் வருடத்திற்கு 13 லட்சம். மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் கிடைக்கும்.
air traffic control Junior Executive பணிக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்: பிஎஸ்சி இயற்பியல் மற்றும் கணிதம் அல்லது பிஇ/ பிடெக் படித்தவர்களும், இந்த படிப்புகளை இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களும் தாராளமாக விண்ணப்பிக்கலாம்.
தேர்வு குறித்து முக்கிய குறிப்பு: தவறான பதில்களுக்கு நெகட்டிவ் மார்க் கிடையாது. 120 கேள்விகள் கேட்கப்பார்கள்.
air traffic control Junior Executiveபணிக்கு தேர்வு எப்பபடி இருக்கும்: இங்கிலீஷ் லாங்குவேஜ்,general intelligence n reasoning, general aptitude n numerical ability, General knowledge n awareness, இயற்பியல், கணிதம்(+2 level).
air traffic control Junior Executive பணிக்கான தேர்வுக்கான மதிப்பெண் எப்படி: மொத்தம் மதிப்பெண்கள் 120, நேரம் 120 நிமிடங்கள். கேள்வித்தாள் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும்.












Click it and Unblock the Notifications