விமான நிலைய ஆணையத்தில் வேலை.. 496 பணியிடங்கள்.. லட்சத்தில் சம்பளம்.. விண்ணப்பிக்க ரெடியா
சென்னை: இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாக உள்ள 496 பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் துவங்கியுள்ளது. இதற்கான கல்வித்தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இங்கே காணலாம்.
மத்திய அரசின் விமான போக்குவரத்துத் துறையின் கட்டுப்பாட்டின் இந்திய விமான நிலைய ஆணையம் செயல்பட்டு வருகிறது. விமான போக்குவரத்து கட்டுப்பாடு முதல் விமான போக்குவரத்து சார்ந்த பணிகளில் காலியாகும் பணியிடங்களை இந்த ஆணையம் அவ்வப்போது நிரப்பி வருகிறது. தற்போது காலியாக உள்ள ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் (விமான போக்குவரத்து கட்டுப்பாடு -Air Traffic Control) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்கள் குறித்த விவரங்களை பார்க்கலாம்.

காலிப்பணியிடங்கள் விவரம்: ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் (விமான போக்குவரத்து கட்டுப்பாடு) பணிக்கு 496 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பொது பிரிவில் 199 பேரும், பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினர் பிரிவில் 49 பேரும் ஒபிசி பிரிவில் 140 பேரும் எஸ்.சி பிரிவில் 75 பேரும் எஸ்.டி பிரிவில் 33 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கல்வித்தகுதி: இந்த பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இருந்து இயற்பியல் மற்றும் கணக்கு பாடங்களுடன் கூடிய பி.எஸ்.சி (சயின்ஸ்) பட்டம் முடித்து இருக்க வேண்டும். ஆங்கிலம் எழுதவும் பேசவும் தெரிந்து இருக்க வேண்டும். பி.இ/ பி.டெக், / பி.எஸ்.சி . (Engg.) ஆகிய பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி குறித்த முழுமையான விவரங்களை தேர்வு அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு: ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் போதுமான கல்வி தகுதியுடன் 27 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகளும் உண்டு. எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
சம்பளம் எவ்வளவு?: தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ. 40,000 முதல் 1,40,000- வரை கிடைக்கும். ஆண்டுக்கு தோராயமாக ரூ.13 லட்சம் வரை சம்பளமாக கிடைக்கும். மத்திய அரசு விதிகளின் படி இதர சலுகைகளும் உண்டு.
விண்ணப்பிப்பது எப்படி?: இந்த பணியிடங்களுக்கு தேவையான கல்வி தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை கொடுத்து, ஆவணங்களை அப்லோடு செய்ய வேண்டும். கணிணி வழியில் தேர்வு நடைபெறும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க 30.11.2023 கடைசி நாள் ஆகும். கல்வி தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.aai.aero/en/recruitment/release/383257 என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.
-
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
டிசிஎஸ், இன்போசிஸ் தான் இப்படி என்றால்.. நீங்களுமா..? டெக் ஊழியர்கள் மொத்தமாக கைவிடப்பட்டனர்! -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications